தீபாவளிக்கு அடுத்த நாள் வானத்தை பார்க்காதீங்க.. குறிப்பா இந்த நேரத்தில்! கண் பார்வை கவனம்

|

இதுகுறித்து தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ள தகவலை பார்க்கலாம். பகுதி கிரகணம் மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி நேர கிரகணம் நிகழும் எனவும் இது மேற்கு ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் நன்றாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த கிரகணத்தை பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சூரிய கிரகண விவரங்கள்

சூரிய கிரகண விவரங்கள்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிதளவு மட்டுமே தெரியும் என கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணிக்கு முடிவடையும்.

80% வரை துல்லியமாக தெரியும்

80% வரை துல்லியமாக தெரியும்

ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் சில பகுதிளில் இந்த சூரிய கிரகணம் 80% வரை துல்லியமாக தெரியும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும் என கூறப்படுகிறது.

கண்கள் பாதுகாப்பு முக்கியம்

கண்கள் பாதுகாப்பு முக்கியம்

பகுதி அல்லது வளைய கிரகணங்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என கூறப்படுகிறது. சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகளை (shade No. 14) பயன்படுத்தி சில நொடிகள் மட்டும் கிரகணத்தை காணுமாறு பார்வையாளர்களுக்கு மையம் அறிவுறுத்தியுள்ளது. கண்களில் காயம் மற்றும் கண்பார்வை இழப்பை தவிர்க்கும்படிஅறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்

கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்

அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலிலும் சூரிய கிரகணம் தெரியும் என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன் இந்த கிரகணம் நிகழ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சென்னை மற்றும் கொல்கத்தாவில், கிரகணத்தின் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடங்கள் மற்றும் 12 நிமிடங்களாக கிரகணம் இருக்கும் என கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.

சிறிது நேரம் கூட பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

2022 இல் மொத்தம் 4 கிரகணங்கள்

2022 இல் மொத்தம் 4 கிரகணங்கள்

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ்கிறது. இதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ்கிறது.

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து மே 16 அன்று மற்றொரு சந்திர கிரகணமும், அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணமும், நவம்பர் 8 அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.

வெறும் கண்களால் பார்க்க வேண்டாம்

வெறும் கண்களால் பார்க்க வேண்டாம்

சூரிய கிரகணத்தின் போது பலர் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். மேலும், வெறும் கண்களால் கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

பொதுவாக, மக்கள் கேமரா அல்லது தொலைநோக்கியின் லென்ஸ் மூலம் கிரகணத்தைப் பார்க்கிறார்கள். சூரிய கிரகணத்தைக் காண மக்கள் பாக்ஸ் ப்ரொஜெக்டர்கள் மற்றும் தொலைநோக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.

கிரகணத்தின் போது பொதுவாக மக்கள் செய்யும் செயல்கள்

கிரகணத்தின் போது பொதுவாக மக்கள் செய்யும் செயல்கள்

இந்தியாவில் இதுபோன்ற கிரகணத்தின் போது மக்கள் பொதுவாக வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள், இந்த சமயங்களில் எந்த பொருட்களை உட்கொள்ள மாட்டார்கள். அதேபோல் தர்ப்பை புல் மற்றும் துளசி இலைகளை கிரகத்தின் போது தீய விளைவுகளை தடுக்க உணவு மற்றும் தண்ணீரில் போடப்படுகின்றன. பலரும் இந்த கிரகண நேரம் முடிந்ததும் குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிய வேண்டும் என நம்புகிறார்கள். அதேபோல் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரகங்களை உச்சரிப்பது நாட்டில் பல குடும்பங்களில் பின்பற்றப்படும் மற்றொரு நடைமுறையாக இருக்கிறது.

கிரகணத்தின் போது தவிர்க்கப்படும் விஷயங்கள்

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், இந்த கிரகண நேரத்தில் பலரும் தண்ணீர் அருந்துவதையே தவிர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரகண சமயங்களில் உணவு தயாரிப்பு மற்றும் சாப்பிடுவது என்பதை பலரும் தவிர்க்கின்றனர். எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவது என்பது பலராலும் இந்த கிரகண நேரங்களில் தவிர்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Solar Eclipse: Don't look at the sky the day after Diwali.. Surya Grahan Effect

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X