Home
Scitech

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வரார்.. இனி போன்களுக்கு பீஸ்ட் மோட்.. எந்த போன்களில் இந்த சிப்செட் வரும்?

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கெல்லாம் ஒரு நம்ப முடியாத செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மிக சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பவர்ஃபுல் சிப்செட்டாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) திகழ்கிறது. ஆனால், இப்போது இதைவிட மிக பவர்புல்லான சிப்செட் வெளிவருகிறது.

ஆம், மக்களே.. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 தான் தற்போதைய சக்தி வாய்ந்த சிப்செட் டிவைஸ் ஆகும். ஆனால், மிக விரைவில் இந்த சக்தி வாய்ந்த சிப்செட்டை மிஞ்சும் புதிய சிப்செட்டை குவால்காம் (Qualcomm) நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 இன் அடுத்த மேம்பட்ட வெர்ஷன் மாடலான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மிக விரைவில் வெளிவரவுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வரார்.. இனி போன்களுக்கு பீஸ்ட் மோட்..

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) என்ற ஒரு புதிய சிப்செட்டின் பெயர் சமீபத்தில் இணையதளம் மற்றும் சில முக்கிய டெக் தளங்களில் இடம்பெற துவங்கியுள்ளது. இதன் வருகையை உறுதி செய்யும் விதமாக நுபியா ரெட் மேஜிக் 9 (Nubia RedMagic 9) என்ற புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 காணப்பட்டுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 9 விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால், இதன்னுள் உள்ள சிப்செட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் காணப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபோனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், கூறப்படும் புது ரெட்மேஜிக் 9 (RedMagic 9) கேக்பென்ச் (Geekbench) இணையதளத்தில் தோன்றியுள்ளது.

இது வெளியிடப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8) Gen 3 சிப்செட்டை இது கொண்டுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) சீரிஸ் உட்பட பல ஃபிளாக்ஷிப்களுக்கு சக்தி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீக்பென்ச் பட்டியலின் படி, ரெட்மேஜிக் 9 சிங்கிள்-கோர் சோதனையில் 1596 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 5977 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இதன் அவுட்புட் ரிசல்ட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை விட மல்டி-கோர் ஸ்கோர் 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மேஜிக் 9 ஆனது NX769J என்ற மாடல் எண்ணுடன் வெளிவந்துள்ளது. வரவிருக்கும் போன் 12 ஜிபி வரை ரேம் கொண்டு வரும் என்றும், இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (OS) இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதர்போர்டுக்கு "பைன்ஆப்பிள்" என்ற குறியீட்டுப் பெயர் உடன் வருகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வரார்.. இனி போன்களுக்கு பீஸ்ட் மோட்..

இது உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அறிக்கைகளின்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் அக்டோபர் 24 ஆம் தேதி நிறுவனத்தின் அர்ப்பணிப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆரம்பத்தில் சியோமி (Xiaomi), ரியல்மி (Realme) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) முதன்மை ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) சீரிஸ், ஒன்பிளஸ் 12 (OnePlus 12), சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14 series), விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் iQOO 12 தொடர் போன்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரெட்மேஜிக் சமீபத்தில் அறிமுகப்படுத்திய நுபியா ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ+ (Nubia Redmagic 8s Pro+) ஸ்மார்ட்போன் தான் 24ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் போன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Snapdragon 8 Gen 3 Chipset Spotted On Geekbench With Nubia Redmagic 9 Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X