3 வண்ணங்களாக மாறும் ஸ்மார்ட் பேண்டேஜ்: இனி கட்டுப்போட தேவையே இல்ல., என்ன சிறப்பம்சம் தெரியுமா?

|

புதுவகை பேண்டேஜ்கள் என்றவுடன் இதை எதற்கு பயன்படுத்துவது என்ற குழப்பம் வேண்டாம். சாதாரணமாக அடிபடும் போது பயன்படுத்தப்படும் பேண்டேஜ்களில் தான் இந்த புதுவகை தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

இதை எதற்கு பயன்படுத்துவது

இதை எதற்கு பயன்படுத்துவது

புதுவகை பேண்டேஜ்கள் என்றவுடன் இதை எதற்கு பயன்படுத்துவது என்ற குழப்பம் வேண்டாம். சாதாரணமாக அடிபடும் போது பயன்படுத்தப்படும் பேண்டேஜ்களில் தான் இந்த புதுவகை தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

இனி காயத்திற்கு கட்டு தேவையில்லை

இனி காயத்திற்கு கட்டு தேவையில்லை

இந்த பேண்டேஜ்களிலினால் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்ற குழப்பம் வேண்டாம் இனி காயத்திற்கு கட்டு என்ற முறையை மாற்றும் விதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பேண்டேஜ்கள் காயத்தை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? சிக்கிய ஆன்லைன் ஏஜெண்டுகள்.!ரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? சிக்கிய ஆன்லைன் ஏஜெண்டுகள்.!

சீன அறிவியல் அகாடமி

சீன அறிவியல் அகாடமி

SMART BANDAGE-கள், சீன அறிவியல் அகாடமி மற்றும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது. விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பேண்டேஜ், காயங்களை வெகுவிரைவில் குணமாக்கவல்லது என கூறப்படுகிறது.

காயத்தில் பாக்டீரியாவின் வீரியம்

காயத்தில் பாக்டீரியாவின் வீரியம்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் காயத்தில் பாக்டீரியாவின் வீரியம் எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கு ஏற்றவாறு இந்த பேண்டேஜ்கள் வேலை செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாக்டீரியாவின் தன்மைகேற்ப 3 வண்ணங்களில் மாறி காயங்களை குணமாக்கும் என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

டிராபிக் சிக்னல்களில் உள்ள 3 நிறங்கள்

டிராபிக் சிக்னல்களில் உள்ள 3 நிறங்கள்

இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களில் டிராபிக் சிக்னல்களில் உள்ள 3 நிறங்கள் காட்டப்படும். அது என்ன 3 கலர்கள் என்று கேட்கலாம் காயத்தில் இருக்கும் பாக்டீரியாவிற்கு ஏற்ப 3 நிறங்களாக மாறும். காயத்தில் ஒட்டப்படும் பேண்டேஜ்கள் பச்சை நிறத்தில் காண்பித்தால் ஓகே பாக்டீரியா குறைவாக உள்ளது என்று அறிந்துக் கொள்ளலாம்.

தொற்று antibiotic மருந்துகள்

தொற்று antibiotic மருந்துகள்

மேலும் ஸ்மார்ட் பேண்டேஜ் மஞ்சள் நிறமாக மாறிவிட்டால் சற்று அதிகமான பாக்டீரியா தொற்று காயத்தில் உள்ளது. இந்த தொற்று antibiotic மருந்துகளால் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் தான் உள்ளது என்பதை விவரிக்கிறது.

பேண்டேஜ் சிவப்பு நிறத்தில் மாறும்

பேண்டேஜ் சிவப்பு நிறத்தில் மாறும்

சிகப்பு என்றால் ஆபத்து தானே. ஆம் ஸ்மார்ட் பேண்டேஜ் சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது என்றால் காயத்தில் antibiotic மருந்துகளால் எளிதாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாக்டீரியாவின் வீரியம் மிக அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

குவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்?குவியும் பாராட்டுகள்., தமிழக அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா., ONLINE TRANSACTION டிக்கெட்?

Reactive oxygen species என்னும் ரசாயனம்

Reactive oxygen species என்னும் ரசாயனம்

சிவப்பு நிறத்தில் மாறும் பட்சத்தில், காயத்தின் மீது சக்தி வாய்ந்த ஒளியை பாய்ச்சி Reactive oxygen species என்னும் ரசாயனத்தை வைத்து பாக்டீரியாக்களின் வீரியத்தை குறைத்து விடலாம். பின்னர் ஸ்மார்ட் பேண்டேஜ்களை காயத்தில் ஒட்டி வீரியம் குறைக்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலிகளின் மீதான ஆய்வுகள் வெற்றி

எலிகளின் மீதான ஆய்வுகள் வெற்றி

மேலும் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களானது எலிகளின் மீதான ஆய்வுகள் மூலம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பேண்டேச்களுக்கு மருத்துவ மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Smart bandage that comes in 3 colors to heal chronic wounds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X