பூமியோடு மோதி வெடிகுண்டை போல வெடித்த விண்கல், வீடியோவில் பதிவானது.!

|

இந்த உலகம் அழிய 7 சாத்தியமான காரணங்கள் இருக்கிறது. அந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் உள்ள காரணம் என்னவென்று தெரியுமா.? - சிறுகோள் மோதல். அதாவது பூமி மீது வேறொரு விண்பொருள் அல்லது சிறுகோள் மோதுவதால் ஏற்படும் பாதிப்பினால் உலகம் அழியும். மீதமுள்ள 6 காரணங்களை கடைசியாக ஆராய்வோம். முதலில், கடந்த ஜூன் 2, 2018 அன்று ஆப்ரிக்காவில் உள்ள பூட்ஸ்வானா பகுதியில் சற்றும் எதிர்பாராத விதமாக விழுந்த ஒரு விண்கல்லை பற்றி பேசுவோம்.

பூமியோடு மோதி வெடிகுண்டை போல வெடித்த விண்கல், வீடியோவில் பதிவானது.!

இந்த விண்கல் மோதலின் மிக மோசமான விஷயம் என்னவெனில், இப்படி ஒரு விண்கல் பூமியை நோக்கி வருகிறது, இது பூமியோடு மோதும் என்பதை, வெறும் எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆக, இந்த பூமி பாதுகாப்பாக இல்லை. இவர்கள் (நாசா உட்பட) கூறும் அதிநவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, நாம் தப்பித்துக்கொள்ள வெறும் 8 மணி நேரத்தை தான் நமக்கு கொடுக்கும்.? அப்படி தானே.?

ஒரு மாபெரும் குண்டுவெடிப்பின் விளைவை காட்டுகிறது.!

யார் செய்த புண்ணியமோ.?! ஆப்ரிக்காவில் நிகழ்ந்த இந்த விண்கல் மோதலில், எந்தவிதமான பெரிய சேதமும் ஏற்படவில்லை. ஆனால் வெளியான வீடியோவில் காட்சிப்படும் விண்கல் மோதல் ஆனது ஒரு மாபெரும் குண்டுவெடிப்பின் விளைவை காட்டுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

யார் நம்மை எச்சரிப்பார்கள்.? யார் நம்மை காப்பாற்றுவார்கள்.?

யார் நம்மை எச்சரிப்பார்கள்.? யார் நம்மை காப்பாற்றுவார்கள்.?

மணிக்கு 38,000 மைல்கள் என்கிற வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கல் பாறையானது வெறும் 6 அடி அகலம் மட்டுமே கொண்டுருந்தது. இருந்தாலும் கூட இந்த அளவிலான ஒரு சிறிய விண்கல்லே இப்படி ஒரு பாதிப்பை கிளப்புகிறது என்றால், விண்வெளியில் சுற்றித்திரியும் நிலவின் அளவிலான சிறுகோள் ஏதேனும் பூமியோடு மோதினால் என்னவாகும்.? யார் நம்மை எச்சரிப்பார்கள்.? யார் நம்மை காப்பாற்றுவார்கள்.? அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவா.? அல்லது நமது இஸ்ரோவா - நிச்சயமாக இல்லை, யாரும் காப்பாற்ற மாற்றார்கள். ஏன் தெரியுமா.?

ஒரு  உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.!

ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.!

முதலில் நாசா எல்லா வகையான விண்கற்களையும் கண்காணிக்கவில்லை, கண்காணிக்காது என்கிற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். பூமிக்கு அருகில் இருக்கும் அல்லது பூமியை நோக்கி வரும் சுமார் 460 அடிக்கும் மேலான அளவில் இருக்கும் விண்பொருட்களை மட்டுமே நாசா கண்காணிக்கும். அதுவும் 90 சதவீத விண்வளி பொருள்களை மட்டுமே கண்காணிக்கிறது.

மீதமுள்ள அந்த 10% சதவீதத்தில்.!?

மீதமுள்ள அந்த 10% சதவீதத்தில்.!?

இந்த இடத்தில், 460 அடிக்கும் குறைவான அளவில் உள்ள விண்கற்கள் பெரிதளவில் கவனிக்கப்படுவதில்லை என்பதையும், கண்டறியப்படாத மீதமுள்ள 10% சதவீதத்தில் (பூமி அளவிலான) பெரிய விண்கற்கள் கூட இருக்கலாம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இம்மாதிரியான அறிவியல்-தொழில்நுட்ப "ஓட்டைக்குள்" வேகமாக புகுந்த ஒரு விண்கல் தான் - ஆப்பிரிக்காவில் விழுந்த அந்த ஆறடி விண்கல். ஆக, டைனோசர் இனம் அழிந்ததற்கு காரணமான ஒரு எரிகல் மோதல் போன்ற நிகழ்வுதான் மனித இனத்தையு அழிக்குமா.? என்பது இங்கு கிளம்பும் ஒரு பொதுவான கேள்வி.!

நாமெல்லாம் கிட்டத்தட்ட முட்டாள்கள்.!

நாமெல்லாம் கிட்டத்தட்ட முட்டாள்கள்.!

டைனோசர் அழிந்ததெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் நடந்தது. இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டிருந்தால், வளர்ச்சியின் மீது சமரசம் செய்துகொண்டிருந்தால், அது கிட்டத்தட்ட ஒரு முட்டாள்த்தனம் தான். ஏனெனில் நாசா உட்பட உலகின் பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிடம், மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல்களானது எங்கு நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு இல்லை.

தெரியுமா.? தடுக்க கூடிய வழிகள் நம்மிடம் இல்லை.!

தெரியுமா.? தடுக்க கூடிய வழிகள் நம்மிடம் இல்லை.!

பூமி கிரகம், நாம் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானதாக இல்லை. நாம் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம், தகர்க்கப்படலாம். பூமி கிரகத்தோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள், பூமி கிரகத்திற்கு அருகில் 'எங்கும் நிறைந்திருக்கிறது' என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு அவைகளால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தடுக்க கூடிய வழிகள் நம்மிடம் இல்லை என்பதும் உண்மையே.!

காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்க்கப்பட்டது.!

காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்க்கப்பட்டது.!

குறுங்கோள்களிடம் இருந்து பூமி கிரகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்க்கப்பட்டது தான் - கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (Planetary Defense Coordination Office). இந்த கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் கீழ் பைர்பால் (Fireball) மற்றும் பொலிட் ரிப்போர்ட்ஸ் சிஸ்டம் (Bolide Reports system) போன்ற அதிநவீன முறைகளை கொண்டு, பூமி கிரகம் மற்றும் பாதுக்காப்பு விடயங்கள் சார்ந்த ஆராயப்பட்டு வருகிறது.

நாசா திணறி வருகிறது.!

நாசா திணறி வருகிறது.!

இருப்பினும் கூட, மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல் நிகழ்வானது எங்கு அதிகம் நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு நாசாவிடம் இல்லை. குறுங்கோள்களின் கவனிக்கத்தக்க நடவடிக்கை பற்றிய தெளிவை பெறுவதில் நாசா மட்டுமின்றி, உலகம் முழுவதும் மற்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் கூட (திணறி வருகிறது), கூடுதல் முயற்சிகளை கையாள வேண்டியிருக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கிறது.!

மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கிறது.!

நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் ப்ஃளைட் மையத்தில் (Marshall Space Flight Center) உள்ள, எரிக்கற்கள் சுற்றுச்சூழல் அலுவலகத்தை (Meteoroid Environment Office) சேர்ந்த ஆய்வாளரான வில்லியம் கூக், விண்கல் மோதல் சார்ந்த புதிய எச்சரிக்கை ஒன்றை விடுக்கிறார். அதாவது, பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள்கள் பூமியுடன் மோதல் நிகழ்த்த மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.

குறுங்கோள் மோதலின் விளைவாக மட்டும் தான் அழியுமா.?

குறுங்கோள் மோதலின் விளைவாக மட்டும் தான் அழியுமா.?

அதற்கு கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலாக நடத்த பொலிட் நிகழ்வுகள், அதாவது பூமியின் வளிமண்டலத்திலேயே சிதைந்து போன (விண்கல்) நிகழ்வுகளை அவர் மேற்கோளிடுகிறார். மேலும் அவர் "பூமியில் 70 சதவிகிதம் கடல் இருப்பதால், பூமியோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்களானது, கடலில் விழ 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது" என்றும் விளக்குகிறார். சரி இந்த பூமி கிரகம், ஏரிகல் அல்லது விண்கல் அல்லது குறுங்கோள் மோதலின் விளைவாக மட்டும் தான் அழியுமா.? என்று கேட்டால் - நிச்சயமாக இல்லை. விண்கல் மோதல் போன்றே பூமியை அழிக்க மேலும் சில ஆபத்தான காரணங்கள் காத்திருக்கின்றன. அவைகள் என்ன.?

சில 'உண்மையான' சக்திகளும் இருக்கத்தான் செய்கிறது.!

சில 'உண்மையான' சக்திகளும் இருக்கத்தான் செய்கிறது.!

'எர்த் எண்ட் பிலிவர்ஸ்' (Earth End Believers) என்ற ஒரு கூட்டமே இருக்கிறது, அதாவது உலகம் மற்றும் அதன் உயிரினங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அல்லது முழுமையாக அழியும் என்று நம்பும் கூட்டம். உலகம் அழியும் கதைகள் எல்லாம் பொழுதுபோகாதவன் கிளப்பிவிட்ட புரளிகள் என்றும் நம்பப்படும் அதே வேளையில், உலகத்தையும் அதன் உயிரினங்களையும் அழிக்க வல்லமை கொண்ட சில 'உண்மையான' சக்திகளும் இருக்கத்தான் செய்கிறது. அவைகள் என்னென்ன.?

01. க்ளோபல் பேன்டிமிக்.!

01. க்ளோபல் பேன்டிமிக்.!

பேன்டிமிக் (pandemic) எனப்படுவது கிட்டத்தட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு (கிரகம் முழுக்க கூட) தொற்றி பரவக்கூடிய ஒரு கொள்ளை நோயாகும். முக்கியமாக, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதைக்கூட அறியாத வண்ணம் தாக்கி கொல்லும் தொற்று நோய்கள் தான் மனித இனத்தை அழிக்கும் வல்லமை பெற்றவைகளாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

02. காமா கதிர் வெடிப்பு.!

02. காமா கதிர் வெடிப்பு.!

இதுவொரு விண்வெளி நிகழ்வாகும். இவ்வகை காமா கதிர் வெடிப்புகள்தான் அண்டத்தில் நடக்கும் மிகவும் பிரகாசமானதொரு விண்வெளி நிகழ்வாகும். மாபெரும் நட்சத்திர வெடிப்புகளால் நிகழும் இந்த காமா கதிர் வெடிப்பானது, பூமியின் அருகாமையில் நடக்கும் பட்சத்தில், அது பூமியின் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி கொண்டவைகளாக இருக்கும். ஓசோன் படலம் அழிக்கப்பட்டால், உயிரினங்கள் "தாங்கிக்கொள்ள முடியாத" கொடிய புற ஊதா கதிர்வீச்சானது பூமியை மெல்ல மெல்ல கொல்லும்.

03. சூரிய மரணம்.!

03. சூரிய மரணம்.!

கிட்டத்தட்ட அனைத்து வகையான உயிர்களுக்கும் தேவையான ஆற்றலை வழங்கி கொண்டிருப்பது சூரியன் தான். அப்படியான சூரியனுக்கும் அதன் பலன்களுக்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்பது தான் நிதர்சனம். எல்லா நட்சத்திரங்களுக்கும் அழிவு உண்டு, சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதால் அதற்கும் அழிவு உண்டு. இன்று தொடங்கி, அடுத்த 5 பில்லியன் ஆண்டுகளில் சூரிய மரணம் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1 பில்லியன் ஆண்டு என்றால் 100 கோடி ஆண்டுகளாகும். ஆக சூரியன் அழிய இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளது, கவலை வேண்டாம்.

04. பைங்குடில் விளைவு நிகழாமை.!

04. பைங்குடில் விளைவு நிகழாமை.!

க்ரீன் ஹவுஸ் எபெக்ட் (Green house Effect) என்பதே பைங்குடில் விளைவு அல்லது பசுமை இல்ல விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கையான விளைவுதான் உயிர்களின் ஆதாரமாகும் என்பதை பள்ளியில் படித்திருப்போம். ஆனால், இந்த விளைவு ஏற்படவில்லை என்றால் என்னவாகும் என்பதை எந்த ஆசிரியரும் சொல்லிகொடுத்திருக்க மாட்டார். பைங்குடில் விளைவில் ஏற்படும் குறைபாடானாது, பூமியை சுற்றி ஒரு தடித்த போர்வையை உருவாக்கும். பின்னர் அது அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கி, உலக வெப்பநிலையை கவலைக்கிடமான விகிதத்திற்கு கொண்டு செல்லும். மற்றும் நிச்சயமாக பூமி வெப்படமடைதல் என்பது கடல் மட்டம் உயர்வு தொடங்கி பூமியை மெல்ல மெல்ல விளிம்பிற்கு கொண்டுசெல்லும்.

05. சூப்பர் வல்கனோ வெடிப்புகள்.!

05. சூப்பர் வல்கனோ வெடிப்புகள்.!

ஒரு சூப்பர் எரிமலை (Super valcano) வெடிப்பானது தட்பவெப்ப நிலையில் தீவிரமான உறுதியற்ற நிலையை உருவாக்க வல்லது. அதாவது சாம்பல் மூட்டம், அதிகப் படியான மேகம் உருவாகுதால், அமில மழைப்பொழிவு, ஓசோன் படல அழிப்பு அல்லது குறைவு, தாவர அழிவு, கடல் சார்ந்த சுற்றோட்ட குழப்பம், கடல்வாழ் உயிரின அழிவு போன்றவைகளை ஏற்படுத்தும். முன்பு, சுமார் 27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் சூப்பர் வல்கனோ வெடிப்பொன்று ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. நுக்லியர் வெடிகுண்டுகள்.!

06. நுக்லியர் வெடிகுண்டுகள்.!

முந்தைய காணரங்களை போன்று, இதுவொரு இயற்கையான நிகழ்வல்ல, இப்பேரழிவிற்கு முழுக்க முழுக்க மனித இனம் தன பொறுப்பேற்றுக்கொள்ளும். உலகின் மாபெரும் விபரீதமான ஆயுதங்களில் முதல் இடத்தில் இருப்பது அணு ஆயுதங்கள். நொடியில் பல நகரங்களை அழிக்க கூடிய சக்தி கொண்ட இந்த குண்டுகளானது, வெடிப்பு சேதம், அணு தாக்கம், நீண்ட கால கதிர்வீச்சு விளைவு, தாவர மரணம், கருப்பு மழை, சாம்பல் மூட்டம், ஓசோன் படலத்தில் அழிவு அல்லது குறைவு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். மனித இனம் வீழாவிட்டாலும் கூட, நிச்சயமாக ஒரு பங்கு அழியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Small Asteroid Strikes Africa Just Hours After It Was Spotted. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more