இன்று வானில் நிகழும் அதிசியம்: நீல நிலவை பார்க்க நீங்கள் தயாரா?

|

வெளிவந்த தகவலின்படி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ப்ளூ மூன் நிகழ்வு இன்று நிகழ இருக்கிறது.ப்ளூ மூன் விளக்கம் மற்றும் அவை தெரியும் காலங்கள் குறித்து பார்க்கலாம்.

இரண்டு அல்லது மூன்று

குறிப்பாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ப்ளூ மூன் நிகழ்வு இன்று ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடியும் இதனை பார்க்க முடியும்.

ன்று நாசா அமைப்பு விள

மேலும் ப்ளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா அமைப்பு விளக்கி உள்ளது.

மாஸ்டர்பீஸ் டிவி அறிமுகம் செய்த வியூ: விலைய கேட்ட தலை சுத்திரும்!

மாதத்தில் வரும் இரண்டு பவு

ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே ப்ளூ மூன் ஆகும். மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது.

மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா,

இந்த ப்ளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும். இதை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹண்ட் என்பவர். மேலும் ப்ளூ மூனை ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

அசத்தலான எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

உதவியுடன் நிலவை எடுத்தால் சற்று

டெலிபோட்டோ உதவியுடன் நிலவை எடுத்தால் சற்று பெரிதாக காட்டும் என அவர் கூறியுள்ளார். இந்த ப்ளூ மூனை தவறவிட்டால் அடுத்து வரும் 2023 ஆகஸ்ட் 31-ம் தேதியும், 2026 மே 31-ம் தேதியும், 2028 டிசம்பர் 31-ம் தேதியும் இது மீண்டும் தோன்ற உள்ளது.

அளவை பொறுத்தவரை

ப்ளூ மூன் அளவை பொறுத்தவரை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தெரிந்த சூப்பர் மூனை விட அளவில் சிறியதாக இருக்கும். குறிப்பாக ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும்பட்சத்தில் அதை ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sky gazers set to witness Blue Moon today and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X