2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு:மிக துயரமான மரணம்-அதிர்ச்சி தகவல்

|

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான உடல் எச்சங்கள் ரோம் பேரரசின் பாம்பீ பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது எஜமானர் மற்றும் அடிமையின் எழும்புக் கூடுகளாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் உடல் எச்சங்கள்

இருவரின் உடல் எச்சங்கள்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பலியான இருவரின் உடல் எச்சங்கள் ஒருவருக்கொருவர் முதுகில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை சுமார் 6.5 அடி ஆழத்தில் இருந்து இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெசுவியல் எரிமலை வெடிப்பு

வெசுவியல் எரிமலை வெடிப்பு

ரோம் பேரரசில் ஏறக்குறைய சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியல் எரிமலை வெடித்து சிதறியது. இதில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு பணக்காரர் மற்றும் அவரது ஆண் அடிமையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரம்

எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரம்

இதை பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கிபி 79-ல் வெசுவியல் எரிமலை வெடித்து பண்டைய ரோமானிய நகரத்தின் பாம்பீ பகுதி அழிக்கப்பட்டது. அப்போது குடிமக்கள் அனைவரும் உயிரிழந்தனர் அந்த பகுதி முழுவதும் எரிமலை சாம்பலால் மூடப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்து கொள்ள இடம் தேடி இருக்கலாம்

மறைந்து கொள்ள இடம் தேடி இருக்கலாம்

வெசுவியல் எரிமலை வெடித்ததில் பல இடங்கள் சாம்பலால் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பின்போது இருவரும் மறைந்து கொள்ள இடம் தேடிக் கொண்டிருந்திருக்கலாம் எனவும் அப்போது எரிமலை குழம்பால் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வு

அந்த பகுதியில் பெரிய மாளிகையாக இருந்து ஒரு இடத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இருவரின் உடல் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் எஜமானராக வாழ்ந்திருக்கலாம் எனவும் அவருக்கு அடிமையாக இன்னொருவர் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

உடல் எச்சங்கள் ஆய்வு

உடல் எச்சங்கள் ஆய்வு

கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்களை ஆய்வு செய்த போது இருவரும் ஆண்கள் எனவும் ஒருவருக்கு வயது 18 முதல் 25 வயது வரை இருக்கலாம் எனவும் மற்றொருவர் வயது 30 முதல் 40 வயது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Pic Courtesy: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Skulls and Bones of Humans who Lived 2000 Years Ago have been Found in Pompeii

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X