ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

|

கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று விண்வெளியில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. பார்ப்பதற்கு வேண்டுமானால் அந்த விண்வெளி நிகழ்வு மிகவும் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அது விபரீதமான நிகழ்வு ஆகும்.

பூமிக்கு மேலே "ஓட்டை விழும்" அளவிற்கு நவம்பர் 3 ஆம் தேதியன்று அப்படி என்ன நடந்தது? "எது" உள்ளே வந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அந்த இரவு என்ன நடந்தது?

அந்த இரவு என்ன நடந்தது?

நவம்பர் 3 ஆம் தேதி என்ன நடந்தது? எங்கே ஓட்டை விழுந்தது? அந்த ஓட்டை வழியாக உள்ளே நுழைந்த விசித்திரமான ஒளி எதனால் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறியும் முன்னர் - சூரிய சுழற்சி (Solar cycle) என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அப்போது தான் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்களை உங்களால் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

சூரிய சுழற்சி என்றால் என்ன?

சூரிய சுழற்சி என்றால் என்ன?

சூரிய சுழற்சி (Solar Cycle) என்பது சூரிய காந்த செயல்பாட்டு சுழற்சி (solar magnetic activity cycle), சூரிய புள்ளி சுழற்சி ( sunspot cycle) அல்லது ஸ்க்வாப் சுழற்சி (Schwabe cycle) என்றும் அழைக்கப்படுகிறது.

சூரிய சுழற்சி என்பது ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் நடக்கும் ஒரு சுழற்சி ஆகும். இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால் ஒவ்வொரு 11 வருடமும் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தான் சூரிய சுழற்சி என்கிறார்கள்!

உச்சத்தில் நுழையும் போது உக்கிரமாக இருக்கும்!

உச்சத்தில் நுழையும் போது உக்கிரமாக இருக்கும்!

சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடுகளின் அடிப்படையிலேயே சூரிய சுழற்சி அளவிடப்படுகிறது.

அப்படியாக நாம் இப்போது 11-ஆண்டு கால சூரிய சுழற்சியின் "நடுவில்" இருக்கிறோம். இதன் விளைவாக இது கடந்த சில மாதங்களாகவே சூரியனின் செயல்பாடும், சூரிய வெளிப்பாடும் அதிகரித்துள்ளது.

இது வெறும் ஆரம்பம் தான். சூரியன் அதன் சூரிய சுழற்சியின் உச்சத்தில் நுழையும் போது (அதாவது 11-வது ஆண்டை நெருங்கும் போது) இன்னும் உக்கிரமாக இருக்கும்!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

புயலை கிளப்பி விடும்!

புயலை கிளப்பி விடும்!

சூரியன் அதன் சூரிய சுழற்சியின் உச்சத்தை அடையும் போது, அது ஜியோமேக்னெட்டிக் புயல்களை (Geomagnetic storms) தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனொரு பகுதியாக, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று சூரிய புயல் (Solar Storm) ஒன்று "சத்தம் போடாமல்" பூமியை தாக்கி உள்ளது. அப்போதுதான் பூமிக்கு "மேலே" ஓட்டையும் விழுந்தது, அந்த "விசித்திரமான ஒளியும்" உள்ளே நுழைந்துள்ளது!

எங்கே ஓட்டை விழுந்தது?

எங்கே ஓட்டை விழுந்தது?

லைவ் சயின்ஸ் வழியாக வெளியான தகவலின்படி, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று ஒரு சூரிய புயல் பூமியை தாக்கி உள்ளது.

அதுமட்டுமன்றி அந்த சூரிய புயல் ஆனது பூமியின் காந்த மண்டலத்தில் (Earth's magnetosphere) ஓட்டை ஒன்றையும் போட்டுள்ளது. அறியாதோர்களுக்கு காந்த மண்டலம் என்றால் பூமியை சுற்றியுள்ள காந்தப்புலம் (magnetic field ) ஆகும்.

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

தற்காலிகம் தான் ஆனாலும் ஊடுருவல் நடந்து விட்டது!

தற்காலிகம் தான் ஆனாலும் ஊடுருவல் நடந்து விட்டது!

இந்த நிகழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்ட ஓட்டை ஆனது தற்காலிகமானதாகவே இருந்தது தான்

ஆனாலும் கூட அந்த ஓட்டை, ஆபத்தான சூரியத் துகள்கள் (Solar particles) நம் கிரகத்திற்குள் ஊடுருவிச் செல்லும் அளவிற்கு நீண்ட காலம் நீடித்தது!

அப்போது தான் மிகவும் விசித்திரமான மற்றும் பிரமிக்க வைக்கும் வகையிலான அரிய இளஞ்சிவப்பு அரோராக்கள் (Rare pink auroras) வானத்தில் தோன்றியது!

கிட்டத்தட்ட 6 மணி நேரம்!

கிட்டத்தட்ட 6 மணி நேரம்!

ஸ்பேஸ்வெதர் வலைத்தளத்தின் கூற்றுப்படி, நவம்பர் 3 அன்று பூமியைத் தாக்கிய G-1 கிளாஸ் சோழர் ஸ்ட்ராம் (G-1 class solar storm) ஆனது கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது மற்றும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்ட ஒரு விரிசலின் விளைவாக சூரியக் காற்று உள்ளே நுழைந்தது.

சூரிய புயலால் உருவான இந்த அரிய நிகழ்வானது, நார்வேயில் மிகவும் வலுவாக தெரிந்துள்ளது. மேலும் இந்த அரோராக்கள் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகவும் வலிமையான இளஞ்சிவப்பு அரோராக்களாகவும் பார்க்கப்படுகிறது.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

அரோராஸ் என்றால் என்ன?

அரோராஸ் என்றால் என்ன?

அரோரா என்பது துருவ விளக்குகள் (Polar lights) என்றும் அழைக்கப்படுகிறது, இது பூமியின் வானத்தில், இயற்கையாக ஏற்படும் ஒரு வகையான ஒளி காட்சி ஆகும். இது உயர்-அட்சரேகை பகுதிகளில் (high-latitude regions) அதிகம் காணப்படுகிறது!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றுப்படி, அரோராக்கள் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் நிகழ்கின்றன. மிகவும் அரிதாக - விண்வெளியின் வானிலையானது பூமியுடன் "தொடர்புகொள்ளும்" போதும் கூட இது ஏற்படும்!

Photo Courtesy: Markus Varik / Greenlander, NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Silently a solar storm hit the earth make temporary hole in magnetic field which caused pink auroras

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X