விண்வெளியிலிருந்து கிடைக்கும் சிக்னல்; எப்படி? யார் அனுப்புகிறார்கள்?
அதில் சில மிகவும் அரிதான மீண்டும் மீண்டும் கிடைக்கும் சமிக்ஞைகளும் அடங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
விண்வெளியில் இருக்கும் தொலைதூர மண்டலங்களில் இருந்து "அவ்வப்போது" மர்மமான சமிக்ஞைகள் (சிக்னல்கள்) நமக்கு கிடைக்கிறது என்பது உண்மைதான். அவைகள் பாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (வேகமான ரேடியோ வெடிப்புகள்) அல்லது எப் ஆர் பி-கள் என்று அழைக்கப்படுகிறது.பெயருக்கு ஏற்றது போலவே இந்த ரேடியோ வெடிப்புகள் மிகவும் வேகமானவை. அவைகளின் பூமியின் விண்வெளி தொலைநோக்கியில் வெறும் ஒரு சில மில்லி விநாடிகளுக்கு மட்டுமே பிரகாசமாக காட்சிப்படும், பின்னர் மறைந்து விடுகின்றன.

கடந்த பல தசாப்தங்களில் (10 ஆண்டுகளில்) விடாமல் விண்வெளி ஆராயும் வானியலாளர்கள் டஜன் கணக்கான எப் ஆர் பிக்களை கண்டுபிடித்துள்ளனர். அதில் சில மிகவும் அரிதான மீண்டும் மீண்டும் கிடைக்கும் சமிக்ஞைகளும் அடங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சாத்தியமா? விண்வெளியில் இருந்து நிஜமாகவே சிக்னல்கள் கிடைக்கின்றதா? அப்படி கிடைக்கும் என்றால் அவைகள் எங்கிருந்து வருகிறது? எதனால் வெளிப்படுகிறது? இந்த கேள்விக்கு யாருக்கும் துல்லியமான பதில் கிடையாது. ஆனால், இதற்காக, இப்படி எல்லாம், இதனால் வெளிப்படலாம் என்று ஐந்து கோட்பாடுகள் உள்ளன. அவைகளை தான் கீழே தொகுத்துள்ளோம்.

01. மிக மிக வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம்!
நட்சத்திரங்கள் ஆனது வெடித்து இறக்கும் போது, இறுதியில் அவைகள் மிகவும் வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த நிகழ்வானது, ஒரு காந்த மண்டலம் நிறைந்த இடத்தில் நடக்கும் பட்சத்தில் அந்த பிராந்தியத்தில் இருந்து விசித்திரமான சமிக்ஞைகள் உருவாகலாம் என வானியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
கனடாவில் உள்ள வான்கூவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒரு வானியலாளரான டாக்டர் இங்க்ரிட் ஸ்டேர்ஸ் கூறுகையில்: "காந்த மண்டலம் ஒரு நியாமான காரணமாக இருக்கலாம். இருந்தாலும் இந்த அளவிலான ,மிகவும் சக்திவாய்ந்த சிக்னல்கள் உருவாக்குவதற்காக இயற்பியல் என்னவென்று, இதுவரை யாருக்கும் தெரியாது."

02.இரண்டு நட்சத்திங்கள் இணையும் போது!
நட்சத்திரங்களின் மோதல் - விண்வெளியில் இருந்து சிக்னல்கள் கிடைக்க இன்னொரு காரணம் இதுவாக இருக்கலாம். வானியலாளர் ஸ்ரீஹர்ஷ் டெண்டுல்கர் கனடாவின் மான்ட்ரியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக வாணியலாளரின் ஒரு முக்கிய கோட்பாட்டை அடுக்கோடிட்டு காட்டுகிறார்: "ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் விளைவாக கூட சிக்னல் உருவாகலாம்".
ஆனால் இந்த இடத்தில், இந்த விளைவினால் அழிக்கப்படும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் காஸ்மிக் சமிக்ஞைகள் ஆனது ஒரே ஒரு முறை மட்டுமே காட்சி அளிக்கும். இந்த இடத்தில் மீண்டும் மீண்டும் கிடைக்கும் ஒரே சிக்னல்களின் மீதான குழப்பம் நீள்கிறது. ஆக ஒருமுறை கிடைக்கும் சிக்னல்களுக்கு வேண்டுமானால் இது காரணமாக இருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் கிடைக்கும் சிக்னல்களின் பிறப்பிற்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும்.

03. பிளிட்ஸர்
வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம் ஆனது அதன் சொந்த எடைக்கு கீழ் வீழும் போது ஒரு கருப்பு துளையை (பிளாக் ஹோல் அல்லது கருந்துளை) உருவாக்குகிறது, அதைத்தான் பிளிட்ஸர் என்கிறார்கள். இதன் விளைவாக கூட சிக்னல்கள் உருவாகலாம், மீண்டும் இந்த இடத்தில், குறிப்பிட்ட நட்சத்திரமானது அழிவில் முடிவடைகிறது, எனவே மீண்டும் மீண்டும் கடிக்கவும் சமிக்ஞைகளை இதனாலும் உருவாக்கி இருக்க முடியாது.

04. கருப்பு துளை (பிளாக் ஹோல்)
பிளாக் ஹோல் இருக்கிறதா என்பதே பெரும் சந்தேகம், அப்படி இருக்கும் பட்சத்தில், சிக்னல்கள் உருவாக்க அதுவும் ஒரு காரமான இருக்கலாம். ஆம் பல கோட்பாடுகளின் படி, ஒரு நியூட்ரான் நட்சத்திரம் பிளாக் ஹோலுக்குள் விழுந்தாலோ அல்லது டார்க் மேட்டரை தாக்கினாலோ சிக்னல்கள் உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

05. ஏலியன்கள் அனுப்பலாம்!
ஆம். சிலர் விண்வெளியில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் ஆனது இயற்கையாக தோண்றுகிறது என்பதை முற்றிலும் மறுக்கின்றனர். அவர்கள் நாம் இந்த அண்டத்தில் தனியாக இல்லை, மற்றவர்களும் இருக்கிறார்கள் (வேற்று கிரக வாசிகள்) அவர்களிடம் இருந்து கிடைக்கும் சிக்னல்கள் தான் இவைகள் என்கிறன்றனர்.
டாக்டர் ஸ்டேர்ஸின் கூற்றுப்படி, இந்த காரணம் சாத்தியமாக இருக்க மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது. இது சாத்தியமென்றால், அவர்கள் (ஏலியன்கள்) மிகவும் அழகான விண்வெளி பகுதியின் பல்வேறு தூரங்களை கடந்து இருக்க வேண்டும். ஆக அவர்கள் பல விண்மீன் குழுக்களுடன் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.இம்மாதிரியான நிலைப்பாட்டில், வேறுவிதமான அன்னிய நாகரிகங்களும் கூட, நம்மை போன்றே ஒரேவிதமான சமிக்ஞைகளை உற்பத்தி செய்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் சாத்தியமற்றதாக என்று தோன்றுகிறது, முற்றிலும் முட்டாள்தனமானது."


Click it and Unblock the Notifications








