ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

|

கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றாத குறையாக விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் கூட.. "அடச்சே.. இது எப்படி தப்பித்தது? அதுவும் இவ்வளவு அருகாமையில் இருந்தும் கூட இது எப்படி நம் கண்ணில் படாமல் தப்பியது?" என்கிற மிரட்சியில் உள்ளனர்.

மிரட்சியடையும் அளவிற்கு.. இத்தனை நாட்களாய் கண்ணில் படாமல் "எது" தப்பியது? தற்போது "எது" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மிகவும் அருகாமையில் உள்ளது என்றால்.. எவ்வளவு அருகாமையில் உள்ளது? அது ஆபத்தானதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பரீட்சயமானது.. அதே சமயம் மிகவும் ஆபத்தானது!

பரீட்சயமானது.. அதே சமயம் மிகவும் ஆபத்தானது!

உங்களில் சிலருக்கு பிளாக் ஹோல் (Black hole) என்கிற வார்த்தை மிகவும் பரீட்சயமானதாக இருக்கலாம். தமிழில் அதை கருந்துளை என்றும் கூறுவார்கள்.

இரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிளாக் ஹோல்களை பிரபஞ்சத்தின் பெரிய மோசமான வில்லன்கள் என்றே கூறலாம். ஏனென்றால் - பிளாக் ஹோல்கள் சக்தி அளப்பரிய முடியாதது!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

ஒளியை கூட விட்டு வைக்காமல்

ஒளியை கூட விட்டு வைக்காமல் "தின்னும்"!

பிளாக் ஹோல்கள் என்பது விண்வெளி நேரத்தின் (region of spacetime) ஒரு பகுதியாகும். அங்கு புவியீர்ப்பு மிக மிக வலுவாக இருக்கும்.

எவ்வளவு வலுவாக இருக்கும் என்றால் - அது துகள்களை (Particles) கூட விட்டு விடாது. அவ்வளவு ஏன்? கருந்துளைகள் ஆனது ஒளியை (Light) கூட கடந்து செல்ல அனுமதிக்காது.

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்!

எதையும் "விழுங்கும்" ஒரு மாபெரும் சக்தியாக கருதப்படும் பிளாக் ஹோல்களில் ஒன்று - நமக்கு மிகவும் அருகாமையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதாவது பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு பிளாக் ஹோலை வானியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதைவிட ஒரு திகிலான தகவல் என்னவென்றால் பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது நமது சூரியனை விட 10 மடங்கு பெரியதாக உள்ளதாம்.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

பழையதை விட 3 மடங்கு அதிகம்!

பழையதை விட 3 மடங்கு அதிகம்!

புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது, பூமியில் இருந்து 1600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓபியுச்சஸ் விண்மீன் குழாமில் / கூட்டத்தில் (Ophiuchus constellation) அமைந்துள்ளது.

முன்னதாக மோனோசெரோஸ் விண்மீன் கூட்டத்தில் (Constellation of Monoceros) கண்டறியப்பட்ட பிளாக் ஹோல் தான், பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கருந்துளையாக அடையாளம் காணப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள பிளாக் ஹோல் ஆனது, முன்னதாக கண்டறியப்பட்ட ஒரு பிளாக் ஹோலை விட மூன்று மடங்கு அதிக நெருக்கமாக உள்ளது!

ஆச்சரியமான ஒற்றுமை!

ஆச்சரியமான ஒற்றுமை!

புதிதாக கண்டறியப்பட்ட பிளாக் ஹோல் ஆனது, ஹவாயில் உள்ள சர்வதேச ஜெமினி ஆய்வகத்தின் (International Gemini Observatory) இரட்டை தொலைநோக்கிகளில் (twin telescopes) ஒன்றான ஜெமினி நார்த் தொலைநோக்கி (Gemini North telescope) மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இந்த கண்காணிப்பில், வானியலாளர்கள் ஒரு ஆச்சரியரிமான ஒற்றுமையை கண்டுபிடித்து உள்ளனர். அது என்னவென்றால், குறிப்பிட்ட பிளாக் ஹோலை ஒரு நட்சத்திரம் சுற்றி வருகிறது.

அந்த நட்சத்திரத்திற்கும் பிளாக் ஹோலிற்கும் இடையே உள்ள தூரமானது நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்துடன் ஒற்றுபோகிறது!

எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த "அடேங்கப்பா" வேலை!

இந்த பிளாக் ஹோல் நம்மையும், நம் பூமியையும் உறிஞ்சுக்கொள்ளுமா?

இந்த பிளாக் ஹோல் நம்மையும், நம் பூமியையும் உறிஞ்சுக்கொள்ளுமா?

உண்மைதான்! பிளாக் ஹோல்கள் மிகவும் ஆபத்தானவைகள் தான் மற்றும் அது எல்லாவற்றையும் உறிஞ்சுக்கொள்ளும் தான்!

ஆனால் கருந்துளைகளால் நமக்கும், நாம் வாழும் பூமிக்கும் ஆபத்து உள்ளதா என்று கேட்டால் - இல்லை என்கிற தீர்க்கமான பதிலே கிடைக்கும்!

காட்டுக்குள் போனால் தான் வேட்டையாட படுவோம்!

காட்டுக்குள் போனால் தான் வேட்டையாட படுவோம்!

பிளாக் ஹோல்கள் ஆனது காட்டில் புலிகளுக்கு சமமானது. அதாவது நாம் காட்டில் இறங்காத வரையிலாக புலிகளிடம் சிக்கிக்கொள்ள மாட்டோம். அதே போல புலிகள் நம் வீட்டிற்குள் வந்து நம்மை வேட்டையாட போவதும் இல்லை.

நமது சூரிய குடும்பத்திற்கு ஆபத்து உண்டாக்கும் அளவிலான தூரத்தில் எந்த கருந்துளையும் இல்லை, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பிளாக் ஹோல் கூட 1600 ஒளியாண்டுகள் தொலைவில் தான் உள்ளது.

அதை நோக்கி ஒரு ராக்கெட்டை ஏவினால்..?

அதை நோக்கி ஒரு ராக்கெட்டை ஏவினால்..?

அறியாதோர்களுக்கு, ஒரு ஒளி ஆண்டு என்றால் 9 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். 1600 X 9 ட்ரில்லியன் கிமீ என்று கணக்கிட்டு பார்க்கும் போது.. அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு கருந்துளைகளால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்!

இன்னும் ஒரு படி மேலே சென்று, 1500 ஒளியாண்டுகள் என்கிற தூரத்தில் உள்ள ஒரு பிளாக் ஹோலை நோக்கி நாம் ஒரு ராக்கெட்டை ஏவினால்.. அது குறிப்பிட்ட பிளாக் ஹோலை சென்றடைய ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்ல.. சுமார் 30 மில்லியன் ஆண்டுகள் ஆகும்!

அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!

நம் சூரியனே ஒரு கருந்துளையாக மாறினால் என்ன செய்வது?

நம் சூரியனே ஒரு கருந்துளையாக மாறினால் என்ன செய்வது?

அறிவியல் பூர்வமாக இது ஒரு நல்ல கேள்வி! ஆனால் உண்மை என்னவென்றால் நமது சூரியன் ஒரு பிளாக் ஹோல் ஆக மாற வாய்ப்பே இல்லை. ஏனென்றால், அது ஒரு பிளாக் ஹோல் ஆக மாறும் அளவிற்கு பெரியதாக இல்லை!

ஒருவேளை நமது சூரியனின் இடத்தை ஒரு கருந்துளை எடுத்துக்கொண்டாலும் கூட பூமி உறிஞ்சப்படாது.

ஏனென்றால்?

ஏனென்றால்?

ஒரு பிளாக் ஹோல் ஆனது சூரியனை போன்ற அளவில் இருந்தால், அது சூரியனை போன்ற ஈர்ப்பு விசையைத் தான் கொண்டிருக்கும்.

அப்படி இருக்கும் போது, அதனால் பூமியையும் நமது சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களையும் "இழுக்க" முடியாது. ஆக எல்லாமே தற்போது நடப்பது போலவே தான் நடக்கும்.

ஆனால் நாம் அனைவருமே அதிக வெளிச்சத்தை பார்க்க மாட்டோம். இருட்டில் தான் சுற்றிக் கொண்டிருப்போம், எப்போதுமே மிகவும் குளிராக இருக்கும்!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
shocking discover near our earth astronomers found new black hole which is 10 times bigger than sun

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X