Subscribe to Gizbot

செவ்வாயில் இருக்கும் க்யூரியாசிட்டி ரோவரில் மனித உருவம்..?!

Written By:

2011-ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட எம்எஸ்எல் ஏவுகணை மூலம் செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியோசிட்டி (Curiosity rover) ஆகும்..!

சுமார் 563,000,000 கிலோமீட்டர்கள் பயணித்து வெற்றிகரமாகச் செவ்வாயை வந்தடைந்த க்யூரியாசிட்டி ரோவர் ஆனது செவ்வாயின் புவியியலை ஆராய்தல், செவ்வாயின் காலநிலையை ஆராய்தல், செவ்வாய் உயிர்வாழ்வுக்கு எற்ற கிரகமா என்பதை ஆராய்தல் போன்ற குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆய்வு செய்து வருகிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோதனை :

#1

ரோவரை அனுப்பியது போலவே செவ்வாய்க்கு மனிதர்களையும் அனுப்பிட வேண்டும் என நாசாவும், பிற உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் விண்வெளி விண்கல சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கும் அதே சமயம், ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் அனுப்பப் பட்டு விட்டான் என்று புகைப்பட ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது.

சந்தேகம் :

#2

இதன் மூலம் உலக நாட்டு விண்வெளி முகவர் ஏற்கனவே ரகசியமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறர்கள் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

புகைப்படம் :

#3

பூமிக்கு க்யூரியாசிட்டி ரோவர் மூலம் அனுப்பப்பட்ட ஆய்வு புகைப்படம் ஒன்றில் விண்வெளி வீரரின் நிழல் உருவம் பதிவாகியுள்ளது.

சர்ச்சை :

#4

சரியாக கவனிக்கப்படாமல் நாசாவினால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட சர்ச்சைகளும், சதியாலோனை கோட்பாடுகளும் கிளம்பி உள்ளன.

கேள்வி :

#5

புகைப்படத்தில் உள்ள உருவத்தை பார்க்க அது ஒரு மனித நிழல், அல்லது சாத்தியமான அன்னிய உயிரினம் அல்லது ஒரு விண்வெளி வீரர் உடையாக இருக்க வேண்டும் என்றும் அப்படியானால் அவர் வெளியேறி ரோவர் மீது சாய்ந்து எதோ பழுது பார்த்து கொண்டுருக்க வேண்டும் என்றும் கேள்விகளும் சந்தேகங்களும் கிளம்பி உள்ளன.

விண்வெளி வீரர் நிழல் :

#6

நாசாவின் புதிய ரோவர் புகைப்படங்களை ஆர்வமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் போது மிகவும் வெளிப்படையாக ரோவரை யாரோ சீர் செய்வது போன்ற நிழல் உருவப்படம் காட்சியானது. அது ஒரு விண்வெளி வீரர் நிழல் தான் என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார் யுஎஃப்ஒ தேடலாளர் ஆன ஸ்காட் சி வார்னிங்..!

மறைக்கப்பட்டு வருகிறது :

#7

இதன் மூலம் செவ்வாயில் க்யூரியாசிட்டி ரோவர் ஆனது மனிதனால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் செவ்வாயில் உள்ள பிற அதிநவீன விண்கலங்கள் உலகின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு வருகிறது என்றும் ஸ்காட் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மாபெரும் உண்மை :

#8

பதிவாகியுள்ள புகைப்படத்தில் உள்ள நிழல் உருவத்தின் முதுகு இடுப்பு மற்றும் கால் பகுதிகள் தெளிவாக தெரிவதால் இதில் நிஜமாகவே எதோ ஒரு மாபெரும் உண்மை மறைக்கப் படுகிறது முக்கியமாக அதி விரைவில் செவ்வாயை சென்றடையும் அதிநவீனம் மறைக்கப் படுகிறது என்றும் கூறியுள்ளார் ஸ்காட்..!

ஹெல்மெட் :

#9

பாராநார்மல் க்யூரிசிபில் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோவில் க்யூரியாசிட்டி ரோவரின் நடுவில் ஹெல்மெட் எதுவும் அணியாத ஒரு மனித உருவத்தின் நிழல் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை :

#10

கூர்ந்து ஆராய்ந்ததில் அனைத் உருவத்திற்கு தலை மயிர்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பதிவுகள் ரெட் பிளானட்டில் சாத்தியமான மனித இருப்பை நம்பும் பல சதி கோட்பாட்டாளர்கள் நம்பிக்கையை மேலும் வலுப் படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

#11

காலவெளியில் உள்ள சுரங்கப்பாதை : நம்மை எங்கு கொண்டு செல்லும்..?!


நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..!?


ஹபிள் 'கண்களில்' சிக்கிய மர்மமான, தனித்த - யுஜிசி 4879..!

தமிழ் கிஸ்பாட் :

#12

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : நாசா

English summary
Shock claims astronauts filmed repairing NASA's Curiosity Rover. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot