சந்திராயன்-2 வெற்றி சதவீதம் சிவன் கூறிய கருத்து என்ன தெரியுமா?

|

சந்திராயன்-2 வெற்றி சதவீதம் குறித்து சிவன் புதிய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், அது தனது சொந்த கருத்து அல்லவும் எனவும் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதற்கான குழு ஆராய்ந்து இந்த முடிவை கூறியுள்ளது என்று தெளிவாக அவர் கூறியுள்ளார்.

சந்திராயன்-2 98 சதவீதம் வெற்றி

சந்திராயன்-2 98 சதவீதம் வெற்றி

சந்திராயன் 2 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக சிவன் கூறியுள்ளார். இது தனது சொந்த கருத்து அல்ல எனவும அவர் கூறியதோடு, இதற்கான குழு ஆராய்ந்து மதிப்பீடு செய்து கருத்து என்றும் அவரே தெளிவும் படுத்தியுள்ளார்.

நிலவின் தென்துருவம்

நிலவின் தென்துருவம்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதில் இருந்து ஆர்பிட்டர் வெற்றிகரமாக பிரிந்து, பிறகு, நிலவின் தென்துருவப்பகுதியில், அதாவது 2.1 கி.மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் உடனான சிக்னலை இஸ்ரோ விண்வெளி மையம் இழந்தது.

கூடுதல் சலுகையோடு அன்லிமிடெட் பிராட்பேண்ட்டை வழங்கி தெறிக்க டாடா ஸ்கை.!கூடுதல் சலுகையோடு அன்லிமிடெட் பிராட்பேண்ட்டை வழங்கி தெறிக்க டாடா ஸ்கை.!

 நாசா மூலம் ஹலோ மெஸ்சேஜ்

நாசா மூலம் ஹலோ மெஸ்சேஜ்

இஸ்ரோவும் பல்வேறு முயற்சிகளை கொண்டது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆர்பிட்டர் மூலம் கண்காணிப்பட்டது. அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது. பிறகு, இந்நிலையில் சக்தி வாய்ந்த தனது ஆண்டானாக்கள் மூலம் நாசா விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற மெஸ்சேஸை அனுப்பியது. அதிர்வெண் மூலம் அனுப்பட்ட சிக்னலுக்கு நிலவு மட்டும் பிரதிபலிப்பு செய்திருந்தது. ஆனால் கடைசி வரைக்கும் விக்ரம் லேண்டரை

உயிர் பிக்க முடியவில்லை.

மாஸ் தள்ளுபடியில் அமேசான் இன்டியன் ஃபெஸ்டிவல் சேல்- டாப் 5 டிவிகள்.!மாஸ் தள்ளுபடியில் அமேசான் இன்டியன் ஃபெஸ்டிவல் சேல்- டாப் 5 டிவிகள்.!

 98 சதவீதம் வெற்றி

98 சதவீதம் வெற்றி

இதுகுறித்து ஆங்கில நாளிதழக்கு அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டர் தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த திட்டக்குழு தொடக்கம் முதல் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது வரை அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்தது. மேலும், அந்த குழு 98 சதவீதம் இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளது என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

விரைவில் அறிக்கை தாக்கல்

விரைவில் அறிக்கை தாக்கல்

இது என்னுடைய கருத்து மட்டும் இல்லை. அந்த குழுவின் கருத்துப்படி சந்திராயன்-2 98சதவீதம் பெற்றுள்ளது என்று கருத்து தெரிவித்தேன். மேலும், இந்த குழு இதுதொடர்பான இறுதி அறிக்கையை விரைவில் திட்ட மேலாண்மை அலுவலகத்தில் தாக்கல் செய்யும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காது! ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப் - காரணம் இதோ!வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காது! ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப் - காரணம் இதோ!

ஆதித்தியா-1 திட்டம் தயார்

ஆதித்தியா-1 திட்டம் தயார்

சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பும் ஆதித்தயா எல் 1 திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2021 ஆண்டு டிசம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Shiva said the Chandrayaan-2 spacecraft was 98 percent successful : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X