பேஸ் 211, ஆப்பரேஷன் ஹைஜம்ப் : கிரங்கடிக்கும் நாஸி ரகசியங்கள்.!?

By Meganathan
|

இரண்டாம் உலகப் போரின் போது நாஸிக்கள் மிகவும் விசித்திரமான சோதனைகளை மேற்கொண்டனர். இவை பெரும்பாலும் மற்ற உலக நாடுகள் அறிந்திராத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் உலகத்தை வென்றிட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.

நாஸி சகாப்தத்தின் போது பல்வேறு ரகசிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன அவற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ஆய்வு தான் நியூ ஸ்வாபியா மற்றும் பேஸ் 211. இந்த ஆய்வுகள் அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்டன.

இடம்

இடம்

நியூ ஸ்வாபியா அண்டார்டிகாவின் 20° கிழக்கு மற்றும் 10° மேற்கு பகுதியின் குயின் மௌத் லாந்தில் அமைந்துள்ளது. இந்த இடம் ஜெர்மன் அண்டார்டிகா ஆய்வுப் பயணத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

பசுமை

பசுமை

நியூ ஸ்வாபியா பகுதியில் சுத்தமான வெந்நீர், பனி இல்லா இடங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளிட்டவை இருந்தது. அறிவியல் கூற்றுகளின் படி இந்த இடம் முற்றிலும் உறைந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புவியியலாளர்கள்

புவியியலாளர்கள்

வெப்ப நீரூற்று மற்றும் புவிவெப்ப மூலங்களினால் இந்தப் பகுதியில் தாவரங்கள் உருவாகியிருக்கலாம் என ஜெர்மன் அண்டார்டிகா ஆய்வு பயணத்தில் கலந்து கொண்ட புவியியலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு

நூற்றாண்டு

சுமார் அரை நூற்றாண்டு காலமாக நாஸிக்களின் ரகசிய ஆய்வு மற்றும் ஸ்டேஷன் 211 குறித்த தகவல்கள் ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் மர்மமாகவே நீடித்தன.

ஸ்டேஷன் 211

ஸ்டேஷன் 211

பல்வேறு வதந்திகளின் படி ஸ்டேஷன் 211 உண்மையில் இருந்தது மேலும் இது உண்மையென்றால் இன்றும் குயின் மௌத் லாந்து மலைப்பகுதிகளில் பனியில்லா இடங்களில் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

எனினும் பலர் இன்றும் அண்டார்டிகா சென்று அங்கு ரகசிய தளம் இருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றே தெரிவிக்கின்றனர். அசாதாரண கூற்றுகளுக்கு என்றும் அதிகளவு ஆதாரம் தேவைப்படும் என்பே உண்மை.

ஆதாரம்

ஆதாரம்

உண்மையில் அண்டார்டிகாவில் இரகசிய தளம் இருந்ததைச் சுற்றி மனதை உறையச் செய்யும் கதைகளும், தளங்களை நேரில் பார்த்த ஆதாரங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் அண்டார்டிகாவில் அசைந்து கொடுக்காத கோட்டை ஒன்று நிச்சயம் இருக்கின்றது என்கின்றன.

ஆப்பரேஷன் ஹைஜம்ப்

ஆப்பரேஷன் ஹைஜம்ப்

பல்வேறு எழுத்தாளர்களும் 1946-47 ஆம் ஆண்டுகளில் துருவ கண்டுபிடிப்பாளரான அட்மிரல் பேர்டு நாஸிக்களின் ரகசிய தளங்களை தேடினார் என்கின்றனர். இந்தத் தேடல் 'ஆப்பரேஷன் ஹைஜம்ப்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேடலில் அதிகளவு போர் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.

போர்க் கப்பல்

போர்க் கப்பல்

ஆப்பரேஷன் ஹைஜம்ப் திட்டத்தில் மொத்தம் 13 கப்பல்கள், விமான துணை, விமானம் தாங்கிகள், நீர்மூழ்கிகள், இரண்டு வெடிகுண்டுக்கப்பல்கள் மற்றும் சுமார் 4700 வீரர்கள் ஈடுபட்டனர். இந்தத் திட்டம் வழக்கமான பயிற்சி தான் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் பலர் இதை ஏற்க மறுத்தனர்.

நிறுத்தம்

நிறுத்தம்

ஆப்பரேஷன் ஹைஜம்ப் திட்டமிடப்பட்டதை விட ஆறு மாதங்கள் முன்பாகவே நிறுத்திக்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 19, 1947 ஆம் ஆண்டு அட்மிரல் பேர்டு 1000 மணிக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.

தகவல்

தகவல்

சிறிய மலைப்பகுதியை கடந்து வடக்கு திசையில் பயணிக்கின்றோம். மலைப்பகுதியைத் தொடர்ந்து சிறிய ஆறு தெரிகின்றது. இங்கு ஏதோ தவறாக இருக்கின்றது. நாங்கள் பனியில் மீது இருக்க வேண்டும், எங்களது வழிசெலுத்தல் கருவி தொடர்ந்து சுழல்கின்றது. இவ்வாறு அட்மிரல் பேர்டு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

கோட்பாடு

கோட்பாடு

ஸ்டேஷன் 211, அட்மிரல் பேர்டு மற்றும் அவர் கண்டறிந்தவற்றை சுற்றி பல்வேறு சதியாலோசனை கோட்பாடுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றது. மேலும் பேர்டு நீல நிற தோல் கொண்ட மனிதர்களைப் பார்த்ததாகவும் கூறப்படுகின்றது.

கருத்து

கருத்து

அட்மிரல் பேர்டு சர்வதேச செய்தியாளர் லீ வான் அட்டாவிற்கு வழங்கிய பேட்டியில் பல விசித்திரமான தகவல்களை வழங்கியது உண்மை எனப் பலரும் நம்பினர். இந்தப் பேட்டி குறித்த செய்தி குறிப்பு மார்ச் 5, 1947 ஆம் ஆண்டின் எல் மெர்குரியோ என்ற செய்தித்தாளில் வெளியானது.

குழப்பம்

குழப்பம்

அட்மிரல் தெரிவித்த கருத்துக்களாக வெளியான செய்தி உண்மை தானா, அண்டார்டிகாவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆபத்துகள் இருக்கின்றதா என்ற குழப்பம் இன்றும் நீடிக்கின்றது. இவை உண்மையெனில் நாஸிக்களும் இதற்கு உடந்தையா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

தேடல்

தேடல்

உண்மையில் அட்மிரல் நாஸிக்களின் ரகசிய தளங்களை தான் தேடினாரா அல்லது தடுமாறினாரா என யாராலும் உறுதியான தகவலை வழங்க முடியவில்லை.

மலை

மலை

எனினும் ஆய்வாளர்கள் பனி இல்லாத மலைப்பகுதிகளை 1956 மற்றும் 1960 ஆம் காலகட்டத்தில் கண்டறிந்தனர். இதனை நார்வேவை சேர்ந்த ஆய்வுக் குழு குவின் மௌத் லாந்து பகுதிகளை விரிவாக ஒப்பிட்டிருக்கின்றது. அவர்கள் ஸ்டேஷன் 211 தளம் இருப்பதாகக் கூறப்படும் மலைப்பகுதிகளை கண்டறிந்தனர்.

Best Mobiles in India

English summary
Secrets about Nazi Antarctic fortress, Base 211 and Operation Highjump Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X