Home
Scitech

வின்ஸ்டன் சர்ச்சில் கட்டிக்காத்த ரகிசயம் அம்பலம்.!!

By Meganathan

சர் வின்ஸ்டன் லியோனார்டு ஸ்பென்சர் சர்ச்சில் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் நோபல் பரிசு உள்பட பல்வேறு பட்டங்கள் மற்றும் விருதுகள் பெற்ற வரலாற்றியலாளர் ஆவார். பிரித்தானிய இராணுவ அதிகாரியாகப் பணியாற்றி ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

தன் பெயரில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை வைத்திருக்கும் சர்ச்சில் அதே அளவு சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் அரங்கேற்றப்பட்ட ஆய்வுகளும், சோதனைகளுமே இதற்குச் சாட்சி எனலாம்.

யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக இருந்த தகவல்கள் பிப்ரவரி 10, 1947 தேதி குறியிட்ட லைஃப் பத்திரிகையின் புகைப்பட ஆதாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..!

01

01

வின்ஸ்டன் சர்ச்சில் தான் பயன்படுத்திய விமானத்தில் தனி அறை ஒன்றை வடிவமைத்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பயன்படுத்தினார். இந்த அறையில் புகைபிடிக்க ஏதுவாகக் காற்றோட்ட அமைப்புகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

02

02

போர்க் காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனி அறையில் சர்ச்சில் அட்லாண்டிக், காசாபிளாங்கா, மாஸ்கோ மற்றும் யால்டா போன்ற பகுதிகளுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயணம் செய்திருக்கின்றார்.

03

03

வின்ஸ்டன் சர்ச்சில் உடல் நிலை மற்றும் அவரது வயதிற்கு 8,000 அடிக்கும் மேல் உயரமாகப் பறப்பது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

04

04

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்டது தான் அழுத்த அறை, அதாவது விமானம் எத்தகையை உயரத்தில் சென்றாலும் குறிப்பிட்ட அறையின் அழுத்தமானது சுமார் 5,000 அடிக்கு ஏற்றவாரு தான் இருக்கும்.

05

05

தான் பயணம் செய்த விமானத்தில் ரகசிய அறை வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இதை தவிர பல்வேறு இதர ரகசிய காரியங்களையும் அரங்கேற்றி இருக்கின்றார்.

06

06

வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்த போது அவர் தலைமையில் உருவாக்கப்பட்ட துறை 'MD1' அல்லது 'சர்ச்சில் டாய் ஷாப்' என அழைக்கப்பட்டது.

07

07

இத்துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததோடு, இத்துறை வித்தியாசமான ஆயுதங்களைத் தயாரித்தது. ப்ரோஜக்டர் இன்ஃபான்ட்ரி ஆன்டி-டேன்க் PIAT (Projector Infantry Anti-Tank) போன்றவை இத்துறையின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

08

08

ப்ரோஜக்டர் இன்ஃபான்ட்ரி கையில் வைத்தே பயன்படுத்தக்கூடிய ஆன்டி-டேன்க் ஆயுதம் ஆகும். லிம்ப்மெண்ட் மைன் காந்தம் மூலம் இலக்குகளைத் தாக்கும், கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்ட பந்தில் வெடிமுந்து நிரப்பப்பட்டு எளிதில் ஒட்டிக் கொள்ளும் கரு மூலம் இலக்குகளை அழிப்பது ஸ்டிக்கி வெடிகுண்டு ஆகும்.

09

09

சர்ச்சில் டாய்ஷாப் சுமார் 26 வித்தியாசமான ஆயுதங்களை ஒன்றிணைத்தது, இதன் மூலம் எதிரிகளைத் திணறடிக்க சர்ச்சில் திட்டமிட்டார்.

10

10

மிகவும் வித்தியாசமான ஆயுதம் என்றால், எவ்வித சோதனையும் இல்லாமல் உடனடியாக அவற்றை அதிகளவு தயாரிக்க உத்தரவிடுவார் சர்ச்சில்.

11

11

புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவதில் அதிக ஆர்வம் கொண்ட சர்ச்சில் தனது டாய்ஷாப் கிடங்கில் பல்வேறு சோதனை மற்றும் புதிய திட்டங்களைத் தீட்டி அதில் பலவற்றை செய்து பார்த்திருக்கின்றார்.

12

12

வின்ஸ்டன் சர்ச்சில் நண்பரான ஃப்ரெட்ரிக் லிண்ட்மேன் கற்பனையில் ஏரியல் மைன்ஃபீல்டு என்ற ஆயுதம் உருவாக்கப்பட்டது, ஆனால் இது பயன்படுத்துவதற்குள் போர் நிறைவு பெற்றது.

13

13

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததும் 'MD1' மூடப்பட்டு அதன் தேவை இல்லாத காரணத்தால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

14

14

இருந்தும் சர்ச்சில் டாய்ஷாப்பில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், 'MD1' பணியாளர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

15

15

இந்தப் பெட்டி தி பாக்ஸ் என அழைக்கப்படுகின்றது. இதில் கார்டுபோர்டு மைன், ஸ்டிக்கி பாம், லிம்பெட் மைன், செயல் இழந்த ஸ்விட்ச் போன்றவை இதில் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Secret Weapons and Gadgets from Winston Churchill's Toyshop Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X