யாரும் பார்க்க கூடாது, கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள்.!!

By Meganathan
|

எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு. ஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

அந்த வகையில் கூகுள் மறைக்கும் உலகின் சில ரகசிய இடங்களின் தொகுப்பு தான் இது.

1

1

மறைக்கப்பட்ட இடம் #10 : கீயோவ் அணை, தெற்கு கரோலினா

2

2

மனிதர்களால் கட்டமைத்த அணை கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் உதவியோடு ஒகோனீ என்ற அணு நிலையம் இயங்க உதவி வருகின்றது. இதன் பாதிப்பு எந்தளவு இருந்தால் இவ்விடம் பொதுவாக மறைக்கப்படும்.

3

3

மறைக்கப்பட்ட இடம் #09 : வோல்கெல் விமான தளம், நெதர்லாந்து

4

4

மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த விமான தளத்தில் அமெரிக்கா தயாரித்த சுமார் 22 அணு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு பி61 வெப்பாற்றல் வெடி குண்டுகள் மற்றும் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் வீசப்பட்டதை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த அதிபயங்கரமான வெடி குண்டுகள் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

5

5

மறைக்கப்பட்ட இடம் #08 : பேக்கர் ஏரி, நுனாவட்

6

6

கனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் விசித்திர நடவடிக்கைகள் அரங்கேறுவதாக கூறப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் இப்பகுதி கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

7

7

மறைக்கப்பட்ட இடம் #07 : கேஸ்கேடு, அமெரிக்கா

8

8

இப்பகுதியானது வாஷிங்டன் மற்றும் ஆரிகான் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளதாகவும், இங்கு அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய ஹார்ப் அதாவது ஹை ஃப்ரீக்வன்ஸி ஆக்டிவ் ஆரோரல் ரிசர்ச் ப்ரோகிராம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

9

9

மறைக்கப்பட்ட இடம் #06 : ரஷ்யாவின் மர்ம பகுதி

10

10

ரஷ்யாவில் இப்படி ஒரு இடம் இருப்பதே பலருக்கும் தெரியாது. இப்பகுதியானது சைபேரியாவின் துந்த்ராவின் அருகில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பல்வேறு மூடப்பட்ட நகரங்கள் இருக்கின்ற, இங்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு மர்மமான முறையில் எண் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

11

11

மறைக்கப்பட்ட இடம் #05 : ஹங்கேரி எண்ணெய் நிறுவனம்

12

12

கூகுளில் இருந்து இந்த நிறுவன கட்டிடங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட போதும், இதனினை மற்ற மேப்களை பயன்படுத்தும் போது தெளிவாக காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13

13

மறைக்கப்பட்ட இடம் #04 : ஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து

14

14

இந்த அரண்மனையை சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது, ஆனால் இதன் கட்டிடம் மட்டும் கூகுளில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

15

15

மறைக்கப்பட்ட இடம் #03 : கோலோனல் சான்டர்ஸ்

16

16

கென்டக்கி வகை வறுத்த கோழி வகைகளை கண்டறிந்தவர் என்ற பெருமையை கொண்டவராக அறியப்படுகின்றார், ஆனால் இவர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் சென்று கேஎஃப்சி உணவகத்தை தேடும் போது கோலோனல் முகம் மங்கலான படி இருப்பதை காண முடியும்.

17

17

மறைக்கப்பட்ட இடம் #02 : பேபிலான், ஈராக்

18

18

கூகுள் மங்கலாக காணப்படும் இந்த பழைமை வாய்ந்த நகரம் ஆகும். இப்பகுதியினை சதாம் ஹூசைன் பல கோடி செலவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

19

19

மறைக்கப்பட்ட இடம் #01 : அலெக்ஸி மில்லர்

20

20

ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் சிஇஒ'வான மில்லர் தனது இல்லம் கூகுளில் இருந்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Secret Places Google Earth is Hiding From us Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X