கடல் மட்ட உயரம் 8 அடி உயரும்.! கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.! அதிர்ச்சி தகவல்.!

  கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு, எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இன்னும் கூட எடுக்கப்படவில்லை என்றால், உலக கடல் மட்டம் நிச்சயம் 2100 ஆம் ஆண்டில் எட்டு அடிக்கு உயரும் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  கடல் மட்ட உயரம் 8 அடி உயரும்.! கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.!

  அதுமட்டுமில்லாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், 2300 ஆம் ஆண்டில் நிச்சயம் 50 அடிக்குக் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நாடுகள் கடலுக்குள் மூழ்கி அழியும் நிலை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

  இந்த மாதம் துவக்கத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி சார்பில் இந்த அதிர்ச்சி அளிக்கும்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  2100 நிச்சயம் பேர் ஆபத்து

  அந்த அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டில் நிச்சயம் பேர் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வின் அளவை வைத்து, கணக்கிட்டுப் பார்த்தபோது, உலக மக்களின் எதிர்கால நிலை பேர் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  ராபர்ட்.ஈ.கோப்

  உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு, ஆபத்து நிச்சயம் கடல் மட்ட உயர்வினால் தான் நிகழப்போகிறது என்று பூமி, பெருங்கடல், மற்றும் வளிமண்டலவியல் அறிவியல் ஆராய்ச்சி மண்டலத்தின் இயக்குனர் ராபர்ட்.ஈ.கோப், பத்திரிகை கலந்தாய்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  ஆபத்தை ஏற்படுத்தும் உண்மை

  உலக மக்கள் தொகையில் பதினொரு சதவிகிதம், கடல் மட்டத்தின் 33 அடிக்கு மேல் தான் வாழ்கிறது, இதன் பொருள் இவர்களுக்குச் சிறிய கடல் மாற்றம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலையைப் பாதிப்படைய செய்யும் என்பதே உண்மை.

  கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு காரணம்

  இருப்பினும், உமிழ்வுகள் குறைவாக இருந்தால், விளைவுகளும் பாதிப்புகளும் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது வரை கணக்கிடப்பட்ட மிதமான உமிழ்வு மதிப்பீட்டை வைத்து கணக்கு செய்து பார்த்தால் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 முதல் 2.8 அடி வரை உயரும் என்று தெரியவந்துள்ளது.

  அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும்

  அதனைத் தொடர்ந்து 2150 ஆம் ஆண்டில் 2.8 முதல் 5.4 அடி வரையும், 6 முதல் 14 அடி வரை கடல் மட்டம் உயர்ந்து உலகில் பத்தி நாடுகள் கடலுக்கும் மூழ்கி அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் ஏற்பட இருக்கும் அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.!

  மிச்சிகன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரத்தில் அறிய வகை விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், உலகின் ஆறாவது மிகப் பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய வகை விண்கல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கட்ட ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

  விவசாயி நிலத்தில் விண்கல்

  மிச்சிகன் பகுதியில் வசிக்கும் டேவிட் மாசுரேக் என்ற விவசாயின் நிலத்தில் தான் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவிட் மாசுரேக், இந்த நிலத்தை விவசாயத்திற்காக 1988 இல் வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.

  30 ஆண்டு

  இந்த விண்கல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டேவிட் இன் வாசல் படி அருகே, வெறும் தடுப்பு கல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். சிறு தினங்களுக்கு முன்பு தான் தோட்ட வேலைக்காகக் கற்களை இடம் மற்றும் பொது இதன் வடிவம் வித்தியாசமாக இருப்பை உணர்த்த டேவிட் அருகில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

  74 லட்சம் விண்கல்

  23 பவுண்ட் எடை கொண்ட விண்கல்லை, மிச்சிகன் பல்கலைக்கழத்தில் உள்ள புவியியலாளர் மோனா சர்பிஸ்கு ஆய்வு செய்து, அது உண்மையான விண்கல் என்பதை உறுதி செய்து டேவிட் இடம் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

  1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

  இந்த அறிய வகை விண்கல்லில் இரும்பு மற்றும் நிக்கல் துகள்கள் அதிகம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விண்கல் 1930ஆம் ஆண்டில் பூமிக்கு வந்துள்ளது என்ற தகவல்களுடன் அடுத்த கட்ட ஆய்வுகளில் ஏதேனும் அறிய வகை புது கூறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

  டேவிட் இந்த விண்கல்லை விற்று, அதில் வரும் பணத்தில் பாதியை மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Seas Could Rise 8 Feet by 2100 Without Urgent Action to Curb Climate Change : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more