Home
Scitech

உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.!

சீனா: சீனா நாட்டைச் சேர்ந்த சின்ஹுவா செய்தி ஊடகம் சென்ற வியாழன் அன்று உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

சீனா: சீனா நாட்டைச் சேர்ந்த சின்ஹுவா செய்தி ஊடகம் சென்ற வியாழன் அன்று உலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை, ஆங்கிலம் மற்றும் சீனா என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது.

சின்ஹுவா- ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை

சின்ஹுவா நிறுவனம் மற்றும் தேடு பொறி நிறுவனமான சோகோவ் நிறுவனத்துடன் இணைந்து, வ்யூஜென் இல் நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் இந்த புதிய ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

நிஜ மனிதன் போன்ற தோற்றம்

நிஜ மனிதன் போன்ற தோற்றம்

இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்துடனும், அப்படியே மனிதர்கள் போன்ற பாவனையில் செய்திகளை மனிதன் போலவே வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் இடைவேளை இன்றி 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் செய்திகளை தொகுத்து வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உருவம் மற்றும் குரல்

உருவம் மற்றும் குரல்

சின்ஹுவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் திரு.ஜாங் ஜஹோவின், உருவம் மற்றும் அவரின் குரல் வளம் தான் இந்த ஏ.ஐ செய்தி தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் தானாகவே ஊடகத்திலிருந்து தானாகவே செய்திகளை எடுத்து வாசிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

டெலிப்பிரொம்ட்டார் பார்த்து செய்திகளைத் தொகுத்து வழங்கும் ரோபோட்

டெலிப்பிரொம்ட்டார் பார்த்து செய்திகளைத் தொகுத்து வழங்கும் ரோபோட்

அதுமட்டுமின்றி, டெலிப்ரோம்ப்டர் திரையில் வரும் எழுத்துக்களை மனிதர்கள் போலவே பார்த்து, அவற்றைப் பிழை இல்லாமல் படித்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. டெலிப்பிரொம்ட்டார் என்பது தொகுப்பாளர் செய்திகளைப் பிழை இல்லாமல் தொகுத்து வழங்குவதற்காக டிவியில் அச்செய்திக்கான வார்த்தைகள் முறையே காட்சி அளிக்கப்படும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்

வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்

எலன் மாஸ்க் சொன்னது போல, ஏ.ஐ உருவாக்கம் வேதம் ஓதி சாத்தனை வரவழைப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதே போல் 24 மணி நேரம் ஓய்வு இல்லாமல் உழைக்கும் இது போன்ற ரோபோட்டினால் கூடிய விரைவில், அனைவர்க்கும் வேலை வாய்ப்பு இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தான் நிதசனமான உண்மை.

Best Mobiles in India

English summary
Search Chinas Xinhua unveils the worlds first AI news anchor : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X