மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

|

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கொஞ்சம் மிரண்டு போய் உள்ளனர் என்றே கூறலாம்!

ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாக சூரியனுக்கு "பின்னால்" ஒளிந்திருந்த ஒரு "விண்வெளி பொருளை" தற்போது தான் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதென்ன பொருள்? மிரண்டு போகும் அளவிற்கு அதில் என்ன ஆபத்து உள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தலைக்கு மேல் தொங்கும் 1000 கத்திகள்!

தலைக்கு மேல் தொங்கும் 1000 கத்திகள்!

நம்மை போன்ற மிகவும் சாதாரண மனிதர்களின் கண்களுக்கு வேண்டுமானால் வானமும், விண்வெளியும அழகானதாகவும், ரம்மியமானதாகவும் தெரியலாம்.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் கண்கள் ஆனது, அதே வானத்தை.. அதே விண்வெளியை சற்றே வேறு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், அவர்களுக்கு நன்றாக தெரியும் - விண்வெளி என்பது நம் (பூமியின்) தலைக்கு மேல் தொங்கும் 1000 கத்திகளுக்கு சமம் என்று!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

அதில் ஒரு

அதில் ஒரு "கத்தி" தற்போது தான் வெளிப்பட்டுள்ளது!

"பூமியை அழிக்கும் அளவிற்கு வல்லமை கொண்ட ஆபத்துகள்" என்கிற பட்டியலில் விண்கற்களுக்கு ஒரு நிரந்தர இடமுண்டு.

அதனால் தான் நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களும், வானியலாளர்களும் பூமியை கடக்கக்கூடிய விண்கற்கள் மற்றும் சிறுகோள்களை - எப்போதும் - தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!

அப்படியான ஒரு தேடலில், கடந்த பல ஆண்டுகளாக சூரியனுக்கு "பின்னால்" ஒளிந்திருந்த ஒரு ஆபத்தான விண்கல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 3!

ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 3!

சிலியில் (Chile) உள்ள செர்ரோ டோலோலோ இன்டர்-அமெரிக்கன் அப்சர்வேட்டரியில் (Cerro Tololo Inter-American Observatory) உள்ள வானியலாளர்கள், டார்க் எனர்ஜி கேமராவை (Dark Energy Camera - DECam) பயன்படுத்தி விண்கற்களை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது - ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் மூன்று நியர்-எர்த் ஆஸ்ட்ராய்டுகளை (Near-Earth asteroid) அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் அதாவது பூமிக்கு மிகவும் அருகில் உள்ள 3 புதிய விண்கற்களை அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

இத்தனை நாட்கள் இது எப்படி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தன?

இத்தனை நாட்கள் இது எப்படி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தன?

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 3 விண்கற்களுமே சூரியனுக்கு பின்னால், அதாவது சூரியனின் கண்கூசும் ஒளிக்கு பின்னால் மறைந்து இருந்துள்ளன.

இத்தனை நாட்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த இந்த 3 விண்கற்களுமே டார்க் எனர்ஜி கேமராவின் உதவியால் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

அந்த 3 விண்வெளி பாறைகளுக்கும் - 2022AP27, 2021 LJ4 மற்றும் 2021 PH27 என பெயரிடப்பட்டுள்ளது!

கடந்த எட்டு ஆண்டுகளில்.. இப்படி ஒன்று சிக்கியதே இல்லை!

கடந்த எட்டு ஆண்டுகளில்.. இப்படி ஒன்று சிக்கியதே இல்லை!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று விண்வெளி பொருட்களில், 2022AP27 என்கிற விண்கல் ஆனது விண்வெளி ஆராய்ச்சியாளர் மிரட்டும்படி உள்ளது என்றே கூறலாம்!

ஏனென்றால், அது 1.5 கிலோமீட்டர் என்கிற அகலத்தை கொண்டுள்ளது; ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பமான மேற்பரப்பை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பூமி செல்லும் பாதையைக் கடக்கக்கூடிய சுற்றுப்பாதையுடன் - கடந்த எட்டு ஆண்டுகளில் - கண்டறியப்பட்ட மிகப்பெரிய விண்கல்லும் கூட இதுவாகும்!

நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

இது வெறும் சாம்பிள் தான்!

இது வெறும் சாம்பிள் தான்!

இதற்கு முன்னால், 1 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இரண்டு சிறுகோள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், இதெல்லாம் வெறும் 'சாம்பிள்' தான். இதே போன்ற விண்கற்கள் அல்லது இதைவிட பெரிய விண்கற்கள் "இருட்டில்" மறைந்து உள்ளன.

பொதுவாக சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறுகோள்களைக் கண்டறிவது மிகவும் எளிது. ஆனால் பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களைக் கண்டறிவதில் உண்மையான சவால் உள்ளது!

ஏனென்றால்?

ஏனென்றால்?

பூமி மற்றும் வீனஸின் சுற்றுப்பாதைகளுக்குள் - அதே சமயம் உள் சூரிய மண்டலத்தில் - பதுங்கியிருக்கும் விண்வெளி பாறைகள் ஆனது சூரியக் கதிர்களின் பிரகாசமான ஒளியால் மறைக்கப்படுகின்றன.

இதன் விளைவாகவே, "பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் 25 சிறுகோள்கள் மட்டுமே இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் கார்னகி இன்ஸ்டிடியூஷனை சேர்ந்த வானியலாளர் ஆன ஸ்காட் எஸ். ஷெப்பர்ட்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

இனிவரும் காலங்களில் கைகொடுக்க போகும் DECam!

இனிவரும் காலங்களில் கைகொடுக்க போகும் DECam!

"நேற்றுவரையிலாக" கண்களுக்கு புலப்படாமல் ஆட்டம் காட்டி வந்த விண்கற்கள், இனிவரும் காலங்களில் அசால்ட் ஆக கண்டுபிடிக்கப்படும். அதற்கு டார்க் எனர்ஜி கேமராவிற்கு தான் நாம் நன்றி கூற வேண்டும்.

சுருக்கமாக DECam என்று அழைக்கப்படும் டார்க் எனர்ஜி கேமராவானது, மங்கலான விண்வெளிப் பொருட்களை கூட ஆழமான முறையில் புகைப்படம் எடுக்கும் திறனை கொண்டுள்ளது. அந்த திறன் தான் நமக்கும் நம் பூமிக்குமான பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று கூறினால் அது மிகையாகாது!

Photo Courtesy: NASA / Wikipedia

Best Mobiles in India

English summary
Scientists were shocked after finding earth killer asteroid hiding near us with the help of the sun

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X