மான்கள் வழியாக பரவ தொடங்கும் ஸோம்பி வைரஸ்? பீதியில் விஞ்ஞானிகள்!

ஏனெனில் அந்த ஸோம்பி கலாச்சாரம் ஆனது நம்மிடையே ஒரு சிறப்பான இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

|

ஸோம்பி (மிருதன் - அதாவது மிருகமாகி போனா மனிதன்) பற்றிய அதிக விளக்கம் நமக்கு தேவைப்படாது. ஏனெனில் அந்த ஸோம்பி கலாச்சாரம் ஆனது நம்மிடையே ஒரு சிறப்பான இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதாவது பிரபல மற்றும் முக்கிய காமிக் கதைகளில், டிவி தொடர்களில் மற்றும் திரைப்படங்களின் ஒரு பகுதியாக உள்ளது.

 உலகம் முழுக்க ஸோம்பி வைரஸ் பரவ வாய்ப்பு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

எனினும், இந்த ஸோம்பி கதைகள் சார்ந்த விடயங்களின் மீது ஆர்வம் கொண்ட பெரும்பாலான மக்கள் (ஸோம்பி ரசிக பெருமக்கள்), இது உண்மையில் நடக்க கூடிய ஒரு பேரழிவு என்பதை அறிந்து இருக்க வாய்ப்புகள் இல்லை. அவர்கள் இதை ஒரு அறிவியல் புனைகதைகளாகவே பார்த்து வருகின்றனர். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது என்று எச்சரித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதன் பின்னணியை அலசும் தொகுப்பே இது!

ஸோம்பி பரவல் எப்படி ஏற்படும்?

ஸோம்பி பரவல் எப்படி ஏற்படும்?

ஸோம்பி பரவல் எப்படி ஏற்படும் என்பது பற்றிய எண்ணற்ற விவாதங்கள் உள்ளன. அந்த விவாதங்களின் முடிவானது ஒரு புள்ளியை நோக்கி செல்கின்றன - ஸோம்பி வைரஸ் ஆனது பல சந்தர்ப்பங்களில், அது நன்கு நிறுவப்பட்ட மற்றும் விஞ்ஞானத்தால் ஆதரிக்கக்கூடிய நம்பத்தகுந்த சூழலின் கீழ் தான் உருவாகும், பரவும்!

தொற்றுநோய்

தொற்றுநோய்

ஸோம்பி பரவல் ஆனது இரண்டு வழிகளின் கீழ் பரவலாம், ஒன்று வைரஸ் வழியாக மற்றொன்று மற்ற நோய்களில் ஏற்படும் வியத்தகு மாற்றங்களின் வழியாக பரவலாம். இதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு - ராபீஸ் வைரஸ், இது மிகவும் கடுமையான மற்றும் ஆபத்தான நோய் ஆகும். பெரும்பாலும் இது, நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி மற்றும் அதன் வழியிலான எச்சில் வழியாக பரவுகிறது.


அந்த தொற்றுநோய் ஆனது, மைய நரம்பு மண்டலத்திற்கு சென்று உடலில் பல அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் பதட்டம், அமைதியின்மை, குழப்பம், மயக்கம், பக்கவாதம், தடையற்ற தசை சுருக்கங்கள், கட்டுப்பாடற்ற வியர்வை அல்லது உமிழ்வு ஆகியவைகள் அடங்கும். ஆனால் மிகவும் ஆபத்தான அறிகுறிகளாக கோபம், அதிகரித்த கிளர்ச்சி, வன்முறை ஆகியவைகள் ஆகும் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

ராபீஸ் வைரஸ்

ராபீஸ் வைரஸ்

ஆக, ராபீஸ் வைரஸ் மட்டுமே ஒரு ஸோம்பி பரவலை ஏற்படுத்த போதுமான சக்தியை கொண்டு உள்ளதா? ஆக எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு ஸோம்பி எனும் ஒரு அச்சுறுத்தல் உருவாகலாம் என்பது உண்மைதானா? - உண்மைதான். ஆனால் அதற்கு ராபீஸ் வைரஸ் மட்டுமே ஒரு காரணமாக இருக்காது. ​​"மான் ஸோம்பி வைரஸ்" எனும் ஒரு ஆபத்தான தொற்று நோயும் காரணமாக இருக்காலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஆனது அமெரிக்காவில் 24 மாநிலங்களுக்கு பரவி, பின் மனிதர்களுக்கும் பரவியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மான் ஸோம்பி வைரஸ்

மான் ஸோம்பி வைரஸ்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் படி, இந்த நாட்பட்ட கொடிய நோய் ஆண்டது ஜனவரி மாதம் முதல் 24 மாநிலங்களில் மற்றும் இரண்டு கனேடிய மாகாணங்களில் உள்ள மான் வகைகளை பாதித்துள்ளது.

"நாங்கள் தெரியாத பிராந்தியத்தில் நிலவும் ஒரு சூழ்நிலையின் கீழ் இருக்கிறோம்" என்று மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம், அமெரிக்க செய்தித்தாள் ஆன யூஎஸ்ஏவிடம் கூறி உள்ளார். கடந்த வாரம் ஓஸ்டர்ஹோம், இந்த வைரஸினால் ஏற்படும் சாத்தியமான மனித பாதிப்புகள் பற்றி அவரது மாநில அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மனிதர்களுக்கு பரவினால் என்னவாகும் ?

மனிதர்களுக்கு பரவினால் என்னவாகும் ?

இதுவரையிலாக, இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எந்தவொரு பதிவும் / நிகழ்வுகளும் இல்லை. ஆனால், இந்த வைரஸ் ஆனது மான்களை தவிர்த்து வேறு விலங்குகளுக்கு அனுப்பப்படலாம் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அதாவது இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மான் இறைச்சி சாப்பிடுவது மூலம் இது மக்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடன் மற்ற சில வாய்ப்புகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட 7,000 முதல் 15,000 வரையிலான விலங்குகள் நுகரப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை ஆனது - ஓஸ்டெல்லோமின் கூற்றுப்படி - ஆண்டுதோறும் 20 சதவிகிதம் அதிகரித்து கொண்டே போகிறது.


இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவினால் என்னவாகும் என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகளால் பதில் அளிக்க முடியவில்லை. மான்களை பொறுத்தவரை உடல் திரவங்கள், திசுக்கள், சுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவு போன்ற வழிகளினால் தான் இந்த வைரஸ் பரவி உள்ளது. மனிதர்களுக்கு உள்ளேயும் அப்படியே பரவலாம் என்று நம்பப்படுகிறது.

தவிர்க்க முடியாத ஸோம்பி பேரழிவு!

தவிர்க்க முடியாத ஸோம்பி பேரழிவு!

சந்தேகத்திற்கு இடமில்லாமல், ஸோம்பி பற்றிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தாலும் கூட, அது உண்மையாக நடக்கும் போது நிலைமை காட்சிப்படுத்தப்படுவதை விட மிக மிக மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதெல்லாம் நடக்குற விடயமா? என்று கூறி, நம்மில் பெரும்பாலான மக்கள் இந்த அசாதாரண சூழ்நிலையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றாலும் கூட, அமெரிக்காவின் பென்டகன் ஸோம்பி என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. எவ்வளவு திவீரம் என்றால், கடந்த 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறை சாத்தியமான ஸோம்பி பேரழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தை தயாரித்து, அதற்கு "சிஓஎன்ஓபி 8888" என்று பெயரும் வைத்துள்ளது. அது மூன்று பகுதிகளிலுள்ள ஒரு 31-பக்க ஆவணமாகும். முதல் பகுதியானது, ஸோம்பி பரவளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஒரு தற்காப்பு திட்டம் ஆகும. இரண்டாவது, ஸோம்பி அச்சுறுத்தலைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் ஆகும். மூன்றாவது, இராணுவச் சட்டத்தின் மூலம் சமுதாயத்தை மீட்டெடுப்பது ஆகும்.


ஆக இது தான் அந்த ஸோம்பி பேரழிவின் ஆரம்பமா? தப்பிக்க அல்லது பாதுகாத்து கொள்ள உங்களிடம் எந்த திட்டமும் இல்லை என்றால், தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்!

Best Mobiles in India

English summary
Scientists warn that a zombie virus of animal origin could spread to humans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X