மரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்!

ஆனால் வெறும் தக்காளியை "உலகமே அழிந்தாலும் கூட" வாயில் வைக்க மாட்டேன்.

|

"பொதுவாக எனக்கு தக்காளிகளை பிடிக்காது. பிட்ஸா உண்ணுகையில் ஒரு சாஸ் வடிவிலான தக்காளியை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்வேன்.ஆனால் வெறும் தக்காளியை "உலகமே அழிந்தாலும் கூட" வாயில் வைக்க மாட்டேன். தக்காளிகளை பழங்களின் பட்டியலில் இணைத்தது ஒரு உலகளாவிய குற்றம், அது ஒரு சாத்தானின் பழம்" என்று கூறும் உலக கோடிக்கான மக்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களை சங்கத்திற்குள் வரவேற்கிறோம்.

இனி தக்காளி, மிளகாயைப்போல் காரமாக இருக்கும்! ஏன்? எப்படி?

ஆனால், வருத்தம் என்னவெனில் தக்காளிகளை வெறுக்கும் இந்த சங்கம் கூடிய விரைவில் இழுத்து மூடப்படவுள்ளது, கலைக்கப்பட உள்ளது. ஏனெனில் விஞ்ஞானிகளின் குழு ஒன்று, நாம் அனைவரும் தக்காளிகளை காதலிக்க தூண்டும்படியான ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். பெரிதாக ஒன்றுமில்லை -தக்காளிகளின் மரபணுவில் மாற்றங்கள் செய்து அதை ஒரு காரமான பழமாக மாற்ற உள்ளார்கள்.

இதெல்லாம் சாத்தியமா?

இதெல்லாம் சாத்தியமா?

நிச்சயமாக சாத்தியம் தான். பிளான்ட் சயின்ஸ் எனும் இதழில் வெளியிடப்பட்டு உள்ள ஒரு ஆய்வின்படி, தக்காளிகளில், பொறியியல் மரபணு மாற்றம் செய்வதின் மூலம் அதில் உள்ள கேப்சைசின்தனை (capsaicin)வெளிக்கொண்டு வர முடியும். இந்த இடத்தில், கேப்சைசின் என்பது மிளகுகளில் காரம் தரும் ஒரு ஆக்க கூறு என்பது குறிப்பிடத் தக்கது.

மரபணு

மரபணு

மரபணுக்களின் படி, தக்காளியும் மற்றும் மிளகும், நீண்ட காலமாக பிரிந்து வாடும் உறவினர்கள் ஆவார்கள். ஆம் இந்த இரண்டும் பிரிந்து சுமார் 19 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. இந்த வம்சத்தின் காரணமாக, தக்காளி மரபணுக்களில் உள்ள ஓட்டமானது, கார்பன் காபிசினின் கலவையை தயாரிக்கும் மரபணுக்களின் தொகுப்பாக திகழ்கிறது. பொதுவாக, அந்த மரபணுக்கள் மாறாது. (இந்த விடயம் தக்காளிக்கு தெரிந்து இருந்தால் இத்தனை ஆண்டிகளாக பர்கர்களின் மீது ஒரு சோகமான மற்றும் சுவையற்ற பழமாக படுத்து இருந்திருக்காது)

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கருத்துப்படி, மரபணு பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, தக்காளியை ஒரு "உயிரியல் ஆலையாக" மாற்ற முடியும். அதன் வழியாக அவைகளில் காப்சைசின் மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் திறனை வளர்க்க முடியும்.

பீட்ஸா

பீட்ஸா

இது சாத்தியமாகும் பட்சத்தில் நிச்சயமாக, அது நமக்கு மிகவும் பிடித்த பீட்ஸாக்கள் மற்றும் பாஸ்தாக்களின் பாரம்பரியமான சுவைகளை பாதிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகம் வேண்டாம். மறுகையில் ​தக்காளியை ஒரு காப்சைசின் உயிர்வாழ்வாக மாற்றியமைப்பது பல நன்மைகளை அளிக்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

காப்சைசின் கலவைகள்

காப்சைசின் கலவைகள்

காப்சைசின் கலவைகள் ஆனது ஆன்டிஆக்சிடன்களை அதிகமாக கொண்டுள்ளது உடன் ஆன்டிடிமோர் செயல்பாடுகளையும் கொண்டு உள்ளது. அது உடல் வலிகளை நிராவணப்படுத்தும் என்பதும் முக்கியமான மிகவும் வேகமான உடம் எடை குறைப்பை உண்டாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. துரதிருஷ்டவசமாக, மிளகுகள் தக்காளிகளை போன்று மிகவும் எளிதாக வளர முடியாது. ஆக மிளகின் நன்மைகளை தக்காளியில் திணிக்கும் பட்சத்தில், மிளகின் நன்மைகளை - நிறைய காப்சைசின்களை - நடைமுறை ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெற முடியும்.

1994 ஆம் ஆண்டில்

1994 ஆம் ஆண்டில்

மரபியல் பொறியியலின் அடிப்படையில் நன்கு அறியப்பட்ட தாவரங்களில் தக்காளியும் ஒன்றாகும், இன்னும் சொல்லப்போனால் மரபணு மாற்றம் என்கிற வரலாற்றில் தக்காளிகளுக்கு ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. கடந்த 1994 ஆம் ஆண்டில், சுழற்சியை எதிர்க்கும் ஒரு மாற்றமடைந்த தக்காளியை கால்ஜின் உருவாக்கியது (இது ஃப்ளாவர் சாவ்ருக்கு பிரபலமாக அறியப்பட்டது). இது அமெரிக்காவில் உள்ள சூப்பர்மார்க்கெட் அலமாரிகளில் கிடைக்கப்பெற்ற முதல் மரபணு மாற்றப்பட்ட உணவாகும், ஆனால் 1997 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த அளவு லாபம் தரவில்லை என்பதால் அதன் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

நுட்பத்தின் கீழ்

நுட்பத்தின் கீழ்

அது தற்போது வேறொரு வடிவில் மீண்டும் கிளம்பி உள்ளது. இம்முறை எதிர்பார்க்கும் படி, தக்காளியில் உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட நுட்பத்தை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் முழுமையாக நம்புகின்றனர். இந்த நுட்பத்தின் கீழ், தாக்களிகளில் காப்சைசின் உற்பத்தியை நிகழ்த்துவது என்பது வெறும் ஆரமபம் மட்டுமே ஆகும். அடுத்ததடுத்த கட்டங்களில் தக்காளியை பழுக்க வைக்கும் சில வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய உள்ளனர்.

பீட்டா-கரோட்டினை உருவாக்க முடியும்

பீட்டா-கரோட்டினை உருவாக்க முடியும்

தவிர தக்காளிகளை கொண்டு, உணவுத் தொழிலில் இரண்டாவது மிக முக்கியமான இயற்கை வண்ண கலவையான பிக்சினை உருவாக்க முடியும் என்றும், வைட்டமின் ஏ வாக மாறும் பீட்டா-கரோட்டினை உருவாக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆகமொத்தம் - சமீபத்திய காலமாக, குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மரபணு பொறியியல் நுட்பங்கள் ஆனது மிகவும் பொதுவாகி வருவதால், அனைத்து விதமான தாவரங்களிலும், (விலங்குகளிலும் கூட) சிறிய திருத்தங்களை செய்வது எளிது தான் என்பதையும், அது முற்றிலும் சாத்தியம் தான் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளோம்.

Best Mobiles in India

English summary
Scientists want to genetically engineer a spicy tomato: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X