குள்ள கிரகங்களின் மர்மம் ஒன்றை கட்டவிழ்த்து விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றன.!

இவ்வகை குள்ள கிரகங்கள் - சொந்த கிரகங்களை இழந்த நட்சித்திரங்களா.? அல்லது அண்டத்தின் தொலைந்துபோன கிரகங்களா.?

|

முக்கிய நட்சத்திர வரிசைகளின் பெரும்பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் சிறியதாக மற்றும் குறைந்த ஒளி வீசும் நட்சத்திரமாக இருக்கும் விண்பொருளைத்தான் குள்ள கிரகம் என்கிறோம்.

குள்ள கிரகங்களின் மர்மம் ஒன்றை கட்டவிழ்த்துள்ள விஞ்ஞானிகள்.!

விண்வெளியின் பல புரியாத புதிர்களுள் மிகவும் வெளிப்படையான குழப்பம் எதுவென்று கேட்டால் - ப்ரவுன் ட்ராப் எனப்படும் குள்ள கிரகங்களை சுட்டிக்காட்டலாம். இவ்வகை குள்ள கிரகங்கள் - சொந்த கிரகங்களை இழந்த நட்சித்திரங்களா.? அல்லது அண்டத்தின் தொலைந்துபோன கிரகங்களா.? என்ற தெளிவுகள் ஏதுமில்லை.

வியாழனைக் காட்டிலும் பெரியதாக உள்ளது

வியாழனைக் காட்டிலும் பெரியதாக உள்ளது

இருண்ட அண்டத்தில் சுற்றி அலைந்துகொண்டிருக்கும் இவ்வகை கிரகங்கள் மிகுந்த குழப்பமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது மட்டும் வெளிப்படை. சில குள்ள கிரகங்கள் வியாழனைக் காட்டிலும் பெரியதாக உள்ளது மறுபக்கம் நட்சத்திரங்களை விட சிறியதாகவும் உள்ளது, பளபளப்பை வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

ஒளி உமிழ்வுகள் நடத்தை

ஒளி உமிழ்வுகள் நடத்தை

குள்ள கிரங்கங்களின் வினோதமான 'ஒளி உமிழ்வுகள் நடத்தையை மேலும் அதிகமாய் புரிந்துகொள்ளும் முனைப்பில் தொலைநோக்கி தரவு மூலம் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று நடத்திய ஆய்வொன்றின் கீழ் சில தெளிவுகளை நாம் பெற்றுள்ளோம்.

ஒளி வளைவு

ஒளி வளைவு

சில குளிர்ந்த பழுப்பு குள்ள கிரகங்களை ஒன்றரை ஆண்டாக, ஆயிரம் சுழற்சிகளுக்கும் மேலாக கண்காணிக்கப்பட்டதின் விளைவாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சரியமான முடிவிற்கு வந்துள்ளனர். பழுப்பு குள்ள கிரகங்களை சுற்றி அமைந்துள்ள ஒளி வளைவுகளை, அதாவது இது காலப்போக்கில் எவ்வளவு வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அதன் புரியதா மர்மங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.

சீரற்ற தன்மை

சீரற்ற தன்மை

இது சார்ந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் சில குழப்பமான வடிவங்களைக் கண்டறிந்துள்ளனர், இரண்டு தொடர்ச்சியான சிகரங்களைப் பிளவுபடுத்துகின்ற சிகரங்களையும், விரைவாக ஏற்படும் வெளிச்ச குவியல்களையும், சீரற்ற தன்மை போன்ற தோற்றங்களையும் கண்டறிந்துள்ளனர்.

பிரகாசமான புள்ளிகளின் பட்டைகள்

பிரகாசமான புள்ளிகளின் பட்டைகள்

தால்

ஸ்பிட்ஸர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Spitzer Space Telescope) மூலம் பெறப்பட்ட தரவுகளை சேகரித்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் சில சிறந்த பொருத்தமான (ப்ரவுன் ட்ராப்களுடன் பொருந்தும்) மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த கிரகங்கள் பற்றி ஏற்கனவே நன்கு அறியப்பட்ட - பளபளப்பில் மாற்றங்கள், அதன் சுற்று, அதன் பிரகாசமான புள்ளிகளின் பட்டைகள் போன்ற - அம்சங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த குள்ள கிரகங்கள் நெப்டியூன் கிரகத்துடன் பலவகையில் ஒற்றுப்போவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான புரிதல்

அதிகப்படியான புரிதல்

நிச்சயமாக, இந்த ஆய்வு மாதிரிகளின் அடிப்படையில் உருவானது தான், நேரடி கண்காணிப்பு அல்ல மற்றும் சாத்தியமான இதர விளக்கங்களுக்கும் வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது. உடன் இவ்வகை ஆய்வுகள் வெறும் குள்ள கிரகங்களை மட்டுமின்றி எக்ஸோபிளானட் சார்ந்த அதிகப்படியான புரிதல்களையும் வழங்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Scientists Think They've Solved an Important Mystery About Brown Dwarfs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X