Just In
- 4 min ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 1 hr ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 4 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
Don't Miss
- News
EV துறையில் 2030-க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
- Finance
Economic survey 2023:அரசின் மூலதன செலவு இலக்கு எட்டப்படலாம்.. ஆய்வறிக்கையில் குட் நியூஸ்!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!
ஏலியன் (Alien) இருக்கிறதா? இல்லையா? என்பதை பல தசாப்தங்களாக நாம் தேடி வருகிறோம். நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஏலியன் உயிர் அடையாளங்களைத் தேடி நாசா (NASA) போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மிகவும் தீவிரமாகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஒரு சமீபத்திய ஆராய்ச்சி ப்ரோக்கோலி (Broccoli) மூலம் ஏலியன் உயிர்களுக்கு இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.

மனிதர்கள் ஒரு ஏலியன் தாவரத்தையா விரும்பி உண்கிறார்கள்?
ஆம், சரியாக தான் படித்தீர்கள். பூமியில் மனிதர்களால் அதிகம் உண்ணப்படும் தாவரத்திற்கும், வேற்று கிரகத்தில் வாழும் உயிர்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படியானால், பூமியில் இத்தனை ஆண்டுகளாக மனிதர்கள் ஒரு ஏலியன் தாவரத்தையா விரும்பி உண்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதல்லவா?

உண்மையை புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் கொஞ்சம் அறிவியலை தொட்டுவிட்டார்கள்.!
வாருங்கள் உண்மையை பார்க்கலாம்.! - மனிதர்களால் பூமியில் அதிகம் உண்ணப்படும் ப்ரோக்கோலி, விசித்திரமான கிரகங்களில் உயிர்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு வகையான வாயுக்களை வெளியிடுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இது நம்புவதற்குச் சற்று கடினமாக இருந்தாலும், இது தான் உண்மை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ப்ரோக்கோலிக்கும் - ஏலியனிற்கும் என்னப்பா தொடர்பு?
ப்ரோக்கோலி, ஆல்கா என்று அழைக்கப்படும் - பாசி மற்றும் பூமியில் உள்ள பல்வேறு தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அதன் இறுதி நிலையை அடையும் போது அல்லது வாயுக்களாக மாற்றும் போது ஒருவகை நச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த செயல்முறை மெத்திலேஷன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நாம் மெத்திலேட்டட் மற்றும் மீத்தேன் தொடர்பான வாயுவைக் குறிப்பிடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோக்கோலி to ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் to ஏலியன் உயிர்கள்.!
இப்போது, புகழ்பெற்ற ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பில் (James Webb Space Telescope) உள்ள கருவிகளைப் பயன்படுத்தி, வேற்றுக்கிரகங்களில் இத்தகைய வாயுக்கள் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். ரிவர்சைடில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி மைக்கேலா லியுங்கின் புதிய ஆய்வு, இதைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த வாயுக்களை வெளியேற்றாத உயிரினமே இந்த பிரபஞ்சத்தில் இல்லையா?
அவருடைய கூற்றின் படி, இந்த வாயுக்களை வெளியேற்றாத உயிருள்ள ஒரு உயிரினம் இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்று அவர் கூறுகிறார். அதாவது, உயிர் அற்ற ஒரு பொருளால் இந்த வாயுக்களை உருவாக்க முடியாது என்று அவர் கூறுகிறார். உயிர் உள்ள எதோ ஒரு பொருளின் இறுதி நிலையில் இருந்து இந்த வாயுக்கள் வெளியாகின்றன என்பதனால் ஏலியன் உயிர்களைக் கண்டறிய இவை மிகவும் முக்கியமானவை.

ஏலியன் உயிர்களை தேடி கண்டுபிடிக்க புதிய கோட்பாடு
இந்த அடையாளங்களை வைத்து, நாம் வேற்று கிரகங்களில் உயிர்களுக்கான தடயங்களைத் தேடி, ஏலியன் உயிர்களைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார் மைக்கேலோ. பூமியில் மெத்திலேஷன் மிகவும் பரவலாக உள்ளது.
இதே போல வேற்றுக்கிரகத்தில் உள்ள உயிர்களும் இதைச் செய்யும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கோட்பாடு உண்மையில் ஏலியன் உயிர்களைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாய் அமையப்போகிறது.

உயிர் உள்ள செல்களில் இருந்து வெளிவரும் வாயுக்கள்
உயிர் உள்ள பொருளில் பெரும்பாலான செல்கள் தீங்கு விளைவிக்கும் வாயு பொருட்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளன. அதை தடயமாக வைத்து, ஏலியன் உயிர்களின் அடையாளங்களை வேற்று கிரகத்தில் நாம் உற்று நோக்கிப் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தகைய வாயுக்கள் சில நேரங்களில் எரிமலை வெடிப்பிலிருந்தும் வெளியேற்றப்படுகிறது.

இதை வைத்து எப்படி ஏலியன் உயிர்களை கண்டுபிடிக்க முடியும்?
இருந்தாலும், உயிருள்ள உயிரினங்கள் மெத்திலேட்டட் வாயுக்களை உற்பத்தி செய்கின்றன என்பதே அதிகளவில் உண்மையாக இருக்கிறது.
இந்த வாயுக்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்புக் கதிர்களில் காட்டப்படுகின்றன, ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் மிதக்கும் வாயுத் துகள்களைக் கண்டறியும் போது இந்த வாயுக்களைத் தேடினால் உயிர்களை அடையலாம் காணலாம் என்று விஞ்ஞானிகள் குறிக்கின்றனர்.

வேற்று கிரகங்களில் வாழும் உயிர்களை கண்டறிய இதிலும் சிக்கல் இருக்கிறதா?
ஆனால், அனைத்து வாயுக்களும் சமமாக இல்லை என்பதே ஒரு சிறிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. Space.com விளக்கியது போல், உயிரியல் மூலங்களிலிருந்து மீத்தேன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் கூட, அவை விரைவில் அழிந்து போகக்கூடியவை. மறுபுறம், மீதைல் புரோமைடு (ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் அதிக நேரம் தங்காத வாயு) உயிரின் மிகவும் விரும்பப்பட்ட குறியீடாகக் காட்சியளிக்கிறது.

இதற்காக James Webb Space Telescope எக்ஸோப்ளானெட்டின் அருகில் எவ்வளவு முறை ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
மெத்தில் புரோமைடு மிகவும் கண்டறியக் கூடியது, ஆனால் விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மெத்தில் குளோரைடையும் தேடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இது ஒரு நேரடியான செயல்முறை அல்ல.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் சக்தி வாய்ந்த கருவிகள் (NIRSpec கருவி போன்றவை) கூட, மெத்திலேட்டட் வாயுக்களின் தடயங்களைக் கண்டறிய, ஒரு எக்ஸோப்ளானெட்டின் அருகாமையில் நூறு பயணங்களுக்கு மேல் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

மனிதக்குலத்தைத் தவிர வேறு உயிர்கள் இருக்கிறதா? இல்லையா?
ஆனால், ஒரு வேலை இப்படி அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது அநேகமாக அந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதைக் குறிக்கும் - பல நூற்றாண்டுகளாக மனிதக்குலத்தைத் தவிர வேறு உயிர்கள் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும். பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா? இல்லையா? நம்முடன் ஏலியன் உயிர்கள் எங்கோ மறைந்து உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470