விஞ்ஞானிகள் அசத்தல்: பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி கண்டுபிடிப்பு.!
அமெரிக்கா கூட்டு விஞ்ஞானிகள் தற்செயலாக நொதி ஒன்றை தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது, இதனை அழிக்க உலக நாடுகள் அனைத்தும் தவித்து வருகிறது என்பது குறிப்பிடித்தக்கது, இந்நிலையில் அமெரிக்கா கூட்டு விஞ்ஞானிகள்
தற்செயலாக நொதி ஒன்றை தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.குறிப்பாக பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை, மேலும் இவை கிரேக்க மொழியில் "பிளாஸ்டிக் கோஸ்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.

பிளாஸ்டிக்:
பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. மேலும் காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேனீர் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா:
பிரித்தானியாவில் இருக்கும் portsmouth பழ்கழைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய புதிப்பிக்கத்தக்க ஆற்றல் துறையிரும் இந்த பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அப்போது ideonella sakaiensis என்ற பாக்டீரியா polyethylene terephthalate என்ற பிளாஸ்டிக்கை உண்டு வாழ்வதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர்.

பெட்வேஸ்:
அதன்பின்பு நடந்த சோதனையில் பிளாஸ்டிக்கை செரிக்கும் திறன் பெட்வேஸ் என்ற நொதிக்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவந்தது, மேலும் அதனுடைய வேதி அமைப்பில் விஞ்ஞானிகள் சில மாற்றத்தை கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6வாரங்கள்:
பொதுவாக பிளாஸ்டிக் சிதைவதற்கு 100ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று நிலையில்,தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த நொதியானது ஆறே வாரங்களில் பிளாஸ்டிக்கை சிதைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நொதி:
பிளாஸ்டிக் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் தொடங்கி பெரிய கார் பாகங்கள் வரையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத பொருள்களே இல்லை என்றாகி விட்டது. குறிப்பாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நொதி பல்வேறு இடங்களில் பயன்படும் வகையில் உள்ளது, மேலும் ஆறுகள், மற்றும் கடல் போன்ற இடங்கள் கூட பிளாஸ்டிக் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications