வேற்று பிரபஞ்சத்திலிருந்து பூமியை தாக்கிய மர்ம சக்தி.! 1000 மடங்கு பெருசு.! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்.!

|

பிரபஞ்சம் (Universe) மிகவும் பெரிதானது.! நம்முடைய பூமி (Earth) கிரகமானது பால் வழி விண்மீன் (Milky Way Galaxy) மண்டலத்தில் அமைத்துள்ளது. இதே போல, இந்த பிரபஞ்சத்தில் இன்னும் சில விண்மீன் மண்டலங்கள் நமக்குத் தெரிந்தும்; தெரியாமலும் ஒளிந்திருக்கிறது. இதை நாசா (NASA) போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் கண்காணித்து வருகின்றன - இதுவரை இல்லாத அளவிற்கு விஞ்ஞானிகள் (Scientists) ஒரு புதிய நிகழ்வைப் பிரபஞ்சத்தில் கண்டு மிரண்டு போய் உள்ளனர்.!

பூமியை தாக்கிய மிகப்பெரிய மர்ம சக்தி.!

பூமியை தாக்கிய மிகப்பெரிய மர்ம சக்தி.!

நமது பால் வழி விண்மீன் மண்டலத்திற்கு (milky way galaxy) அருகிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் (nearby galaxies) இருந்து பூமி சமீபத்தில் "ஒரு அசாதாரண தீவிரமான மர்ம ஆற்றல் வெடிப்பால்" தாக்கப்பட்டதைக் கண்டு மிரண்டுள்ளனர்.

நம்முடைய பூமி கிரகத்தைத் தாக்கிய இந்த மர்ம சக்தி மிகவும் பெரியது என்பதைத் தாண்டி - இது பிரபஞ்சத்தைப் (universe) பற்றிய நமது புரிதலை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர் என்பதே கவனிக்கத்தக்கது.

50 வினாடிகள் நீடித்த மர்மமான ஆற்றல் வெடிப்பு.!

50 வினாடிகள் நீடித்த மர்மமான ஆற்றல் வெடிப்பு.!

அப்படி என்ன ஆனது.! எங்கிருந்து இந்த மர்ம ஆற்றல் நமது பூமி கிரகத்தைத் தாக்கியது? உண்மையிலேயே இது என்னது? என்பது போன்ற தெளிவான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

கடந்த ஆண்டு, 50 வினாடிகள் நீடித்த ஒரு மர்மமான ஆற்றல் வெடிப்பை விஞ்ஞானிகளால் நம்முடைய பிரபஞ்சத்தில் கண்டுபிடித்தனர்.

இது பூமியை நோக்கி வந்து, தாக்கிச் சென்றது. இது காமா-கதிர் வெடிப்பு (Gamma ray burst) அல்லது காமா-ரே பர்ஸ்ட் (GRB) என்று அழைக்கப்படுகிறது.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்.! இறந்த பின்னும் பேசுராங்களா? திடுக்கிடும் உண்மை.!தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்.! இறந்த பின்னும் பேசுராங்களா? திடுக்கிடும் உண்மை.!

பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு.!

பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு.!

இதுவரை இல்லாதா அளவில், இது பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை விஞ்ஞானிகள் பிரபஞ்ச விகிதத்தில் ஒரு அரிய நிகழ்வு (rare event of cosmic proportions) என்று குறிப்பிடுகிறார்கள்.

இயற்கையாகவே, விஞ்ஞானிகள் இந்த காமா ரே பர்ஸ்ட் வெடிப்பு எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்து கொள்ள, தீவிரமான ஆய்வில் களமிறங்கினர். இறுதியில், அவர்கள் கண்ட காட்சி, அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.!

எதனால் இந்த ராட்சஸ சக்தி வெளிப்பட்டது? கிலோனோவா என்றால் என்ன?

எதனால் இந்த ராட்சஸ சக்தி வெளிப்பட்டது? கிலோனோவா என்றால் என்ன?

காரணம், இந்த சக்தி வாய்ந்த காமா ரே பர்ஸ்ட் ஒரு நியூட்ரான் நட்சத்திரம் (neutron star) மற்றொரு கச்சிதமான பொருளுடன் இணையும் போது உருவாகியுள்ளது என்பதை கண்டறிந்தனர்.

இது ஒரு ராட்சஸ கருந்துளை (Giant blackhole) அல்லது மற்றொரு நியூட்ரான் நட்சத்திரத்துடன் இணையும் போது ஏற்படும் ஒரு அரிய நிகழ்வு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த பர்ஸ்ட் வெடிப்பு ஒரு கிலோனோவாவிலிருந்து (Kilonova) வெடிப்பு தோன்றியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!

பிரபஞ்சத்தின் மர்மங்களின் வழிகளைத் திறக்க உதவுமா?

பிரபஞ்சத்தின் மர்மங்களின் வழிகளைத் திறக்க உதவுமா?

இத்தகைய நீண்டகால GRB-களின் தோற்றப் புள்ளியை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்ற ஆய்வை விஞ்ஞானிகள் துவங்கியுள்ளனர்.

காரணம், இது பிரபஞ்சத்தின் மர்மங்களின் வழிகளைத் திறக்க உதவும் என்றும், இதன் மூலம் உருவாகும் கனமான கூறுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறியவும் முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த GRB இருந்து வந்த விண்மீன் கூட மர்மமாக இருக்கிறது.

இது ஏன் முற்றிலும் வித்தியாசமானது? அரிதானது?

இது ஏன் முற்றிலும் வித்தியாசமானது? அரிதானது?

ஏனெனில் இது மிகவும் இளமையாக உள்ளது மற்றும் இன்னும் நட்சத்திரங்களை உருவாக்கும் செயல்பாட்டில் இதில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கிலோனோவா நிகழ்வை நடத்திய அருகிலுள்ள அறியப்பட்ட மற்ற விண்மீன்களுக்கு நேர் எதிரானது.

இந்த நிகழ்வு நீண்ட காமா-கதிர் வெடிப்பிலிருந்து நாம் முன்பு பார்த்த எதையும் போலல்லாமல் தெரிகிறது என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜிலியன் ரஸ்டினேஜாட் கூறியுள்ளார்.

உங்க WhatsApp-ல் இனி தெரியாமல் கூட இந்த தப்ப செஞ்சுடாதீங்க.! மீறினால் அக்கவுண்ட் Block.!உங்க WhatsApp-ல் இனி தெரியாமல் கூட இந்த தப்ப செஞ்சுடாதீங்க.! மீறினால் அக்கவுண்ட் Block.!

50-வினாடி நீடித்த அளவிற்கு இந்த பிரபஞ்சத்தில் இது பெரியதா?

50-வினாடி நீடித்த அளவிற்கு இந்த பிரபஞ்சத்தில் இது பெரியதா?

இந்த காமா கதிர்கள் பாரிய நட்சத்திரங்களின் வீழ்ச்சியால் உருவாகும் வெடிப்புகளை ஒத்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் வரை, நாம் கவனித்த மற்ற அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட நியூட்ரான் நட்சத்திர இணைப்புகள் எல்லாம் வெறும் இரண்டு வினாடிகளுக்கும் குறைவான வெடிப்புகளுடன் காணப்பட்டது.

ஆனால், இந்த வெடிப்பு 50-வினாடி நீடித்துள்ளது.

பூமியை விட 1000 மடங்கு பெரியது.!

பூமியை விட 1000 மடங்கு பெரியது.!

அந்த அளவிற்கு இது மிகவும் பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியை விட 1000 மடங்கு பெரியது.!

இதுவரை யாரும் பார்த்திடாத ஒரு பெரிய நட்சத்திரத்தின் சரிவால் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு
நாசாவின் நீல் கெஹ்ரெல்ஸ் ஸ்விஃப்ட் அப்சர்வேட்டரி (NASA's Neil Gehrels Swift Observatory) மற்றும் ஃபெர்மி காமா-ரே விண்வெளி தொலைநோக்கி (Fermi Gamma-Ray Space Telescope) மூலம் டிசம்பர் 2021 இல் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

1 ரீசார்ஜ் பிளான் 15 OTT இலவசம்.! இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த Airtel & Jio பிளானை பாருங்க.!1 ரீசார்ஜ் பிளான் 15 OTT இலவசம்.! இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த Airtel & Jio பிளானை பாருங்க.!

இதன் விளைவாக பிரபஞ்சத்தில் தங்கம் உருவானதா?

இதன் விளைவாக பிரபஞ்சத்தில் தங்கம் உருவானதா?

அன்றிலிருந்து விஞ்ஞானிகள் தீவிரமாகப் பதில்களைத் தேடி வருகின்றனர். இந்த குறிப்பிட்ட கிலோனோவா பூமியின் நிறையில் சுமார் 1,000 மடங்கிற்கும் அதிகமான தனிமங்களை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டிய ஒரு விசித்திரமான விலை என்னவென்றால், இந்த வெடிப்பு அதன் மண்டலத்தில் உள்ள இடங்களில் தங்கத்தை விளைவு பொருளாக உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Scientists Spotted Intense Blast Of Gamma Ray Burst Energy Hits Earth From Nearby Galaxy in Universe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X