எங்கிருந்து வருகிறது? 40 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத மர்ம ஒளி! ஒருவழியாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பதில்!

|

இது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல், சுமார் 40 ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், வானியலாளர்களையும் குழப்பி வந்த மர்மமான ஒளி ஆனது.. ஒருவழியாக எங்கிருந்து வருகிறது? எப்படி, எதனால் உருவாகிறது? என்கிற பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்!

அதென்ன ஒளி? உண்மையில் அது எங்கிருந்து வருகிறது? இதோ விவரங்கள்:

விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கிய ஒரு விஷயம்!

விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கிய ஒரு விஷயம்!

நாம் இங்கே பேசும் மரம்மான ஒளிக்கும், இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் புதிரான மற்றும் விசித்திரமான "விண்வெளி பொருள்" ஆன கருந்துளைக்கும் (Black Holes) ஒரு சம்பந்தம் உள்ளது!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன், சில கருந்துளைகளின் புகைப்படங்களை நாம் கைப்பற்றியிருந்தாலும் கூட, பிளாக் ஹோல்கள் என்பது வானியலாளர்களுக்கு மத்தியில் இன்னமும் கூட ஒரு பெரிய மர்மமாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக - அந்த மரம் ஒளி.. விஞ்ஞானிகளின் "மண்டையை காய விடுகிறது" என்றே கூறலாம்!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

அதென்ன ஒளி?

அதென்ன ஒளி?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் "தோராயமாக" கண்டுபிடிக்கப்பட்ட பிளாக் ஹோல்கள் ஆனது எதுவுமே தப்பிக்க முடியாத அளவிற்கு மிகவும் வலுவான ஈர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

அதாவது ஒரு பிளாக் ஹோலிற்கு அருகில் செல்லும் அல்லது அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட உறிஞ்சிக்கொள்ளப்படுவதில் இருந்து தப்பிக்க முடியாது!

அந்த அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த பிளாக் ஹோல்களில் இருந்து பிரகாசமான ஒளி வெளிப்படுவது எப்படி? எதையுமே விட்டுவைக்காத பிளாக் ஹோல்களில் இந்த அளவிற்கு தீவிரமான ஒளி உருவாவது எப்படி? என்கிற கேள்விக்கு - நேற்று வரையிலாக - விடை கிடைக்காமலேயே இருந்தது!

அந்த மர்ம ஒளி எங்கிருந்து வருகிறது?

அந்த மர்ம ஒளி எங்கிருந்து வருகிறது?

நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astronomy) வழியாக வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை ஆனது, கருந்துளைகள் அவற்றின் ஒளியை எவ்வாறு உருவாக்குகின்றன என்கிற மர்மத்தின் மீது இருந்த திரையை விளக்கி உள்ளது!

அந்த ஆய்வறிக்கையின்படி, ஒரு பிளாக் ஹோலின் ஜெட் (Black Hole's Jet) ஆனது ஒளித் துகள்களின் (Light particles) வேகத்தை பிரமிக்கத்தக்க வேகத்திற்கு (Velocity) அதிகரிக்கும். அப்போது ஏற்படும் அதிர்ச்சிகளின் விளைவாகவே பிளாக் ஹோல்களில் இருந்து ஒளி வெளிப்படலாம்!

விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!விண்வெளியில் தெரிந்த திட்டுத்திட்டான மேகங்கள்.. அதற்கு பின்னால் என்ன இருந்தது? NASA சொல்லும் பதில்!

மொத்தம் 3 வகை.. ஒவ்வொன்றும் ஒரு விதம்!

மொத்தம் 3 வகை.. ஒவ்வொன்றும் ஒரு விதம்!

1. ப்ரிமார்டியல் பிளாக் ஹோல்ஸ் (Primordial Black holes) - இவ்வகை கருந்துளைகள் ஆனது அளவில் மிகவும் சிறியதாக இருக்கும்.

2. ஸ்டெல்லார் பிளாக் ஹோல்ஸ் (Stellar Black Holes) - இது மிகவும் பொதுவான கருந்துளைகள் ஆகும். இவைகள் அளவில் நமது சூரியனை விட 20 மடங்கு பெரியதாக இருக்கும்.

3. சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்ஸ் (Supermassive Black Holes) -இருப்பதிலேயே மிகப்பெரிய கருந்துளைகள் என்றால் அது சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல்கள் தான். இது நமது சூரியனை விட 1 மில்லியன் மடங்கு பெரியதாக இருக்கும்!

பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கிறது!

பிரபஞ்சம் முழுக்க நிறைந்து இருக்கிறது!

நமது பால்வீதியின் (Milky Way) மையத்தில் உள்ளதை போலவே, பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாலான விண்மீன் திரள்கள் ஆனது மிகப்பெரிய கருந்துளைகளை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன.

அந்த கருந்துளைகளில் இருந்து வரும் மர்மமான ஒளி ஆனது அதன் உள்ளே நடக்கும் செயல்பாட்டிலிருந்து தான் வருகிறது என்று விஞ்ஞானிகள் இப்போது நம்ப தொடங்கி உள்ளனர்.

இந்த நம்பிக்கை, பிளாக் ஹோல்கள் மீதான மேலதிக கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவது மட்டுமின்றி, இந்த பிரபஞ்சம் தொடர்பான புதிய ஆராய்ச்சிகளுக்கான கதவுகளையும் திறக்கும்!

Best Mobiles in India

English summary
Scientists solved one of the biggest space mystery This is how black holes create their own light

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X