அடுத்த 80 ஆண்டுகளில் இந்த 10 நகரங்களும் அழியும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

|

ஒருபக்கம் கால நிலை மாற்றத்தின் தாக்கங்கள் பற்றிய அறிவியல் கணிப்புகள் மிகவும் வலுவானதாக இருக்கும் நிலையில், மறுபக்கம் தீவிரப் புயல்களின் அச்சுறுத்தல்கள், பேரழிவு வெள்ளம், ஏரிமலைகள் மற்றும் வறட்சி போன்ற ஆபத்துகளும் வரிசை கட்டி நிற்கின்றன.

அடுத்த 80 ஆண்டுகளில் இந்த 10 நகரங்களும் அழியும் - விஞ்ஞானிகள்.!

ஆகமொத்தம் இந்த உலகின் "ஸ்லோ மோஷன்" அழிவு ஆனது மிகவும் தெளிவான நிலைப்பாட்டின் கீழ் நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகள் வருகிற 2040 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலையை சுமார் 1.5 டிகிரி செல்சியசாக உயர்த்தக் கூடும் என்று காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (IPCC) கணித்துள்ளது. இதன் விளைவாக உலகின் மிகவும் பிரபலமான 10 முக்கிய நகரங்கள் அடுத்த 80 ஆண்டுகளுக்குள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது. அவைகள் எந்தெந்த நகரங்கள்? அதில் நீங்கள் வாழும் நகரமும் இருக்கிறதா? வாருங்கள் பார்ப்போம்!

01. மியாமி

01. மியாமி

சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மியாமி குடியிருப்பாளர்கள் வருகிற 2100 ஆம் ஆண்டுக்குள் பேரழிவு தரும் வெள்ளத்தினை எதிர்கொள்ள நேரிடும் என்கிறது நேச்சர் க்ளைமேட் சேஞ்சில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு. அதற்கு காரணமாக அமெரிக்க கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு காரணமாக இருக்குமாம். இதன் விளைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கி வரவிருக்கும் 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டமானது 6 அடி உயரம் அதிகரிக்குமாம், மேற்கூறியபடி, சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மியாமி குடியிருப்பாளர்கள் பாதிப்பு அடைவார்களாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

02. நியூ ஆர்லியன்ஸ்

02. நியூ ஆர்லியன்ஸ்

இந்த நகரம் நீருக்கடியில் போகலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நியூ ஆர்லியன்ஸ் தான் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் அமெரிக்காவின் நகரங்களில் ஒன்றாக இருக்குமாம். இந்நகரத்தின் கடல் மட்டங்கள் வெறும் 3 அடி உயர்ந்தால் கூட, 100,000 க்கும் மேற்பட்ட நியூ ஆர்லியன்ஸ் குடியிருப்பாளர்கள் - நகரின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு - வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.

03. சிகாகோ

03. சிகாகோ

எந்த நேரத்தில் மற்றொரு மரண வெப்ப அலையை சந்திக்கலாம். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ஆன ரிச்சர்ட் ரூட்டின் கருத்துப்படி, சிகாகோ அமெரிக்காவின் மிகவும் கடுமையான வெப்ப மண்டலங்களில் ஒன்றாகும். 1995-ல், 700 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஆபத்தான வெப்ப அலையை கண்ட இந்த நகரம், அடுத்தகட்டமாக 95 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெப்பநிலை ஆபத்தை சந்திக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சிகாகோவில் எந்த நேரத்திலும் இந்த வெப்பத்தின் அலை மீண்டும் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்ட்டு உள்ளது.

04. துபாய்

04. துபாய்

துபாயின் கோடை கால வெப்பநிலை ஆனது 2070 ஆம் ஆண்டுக்கு பின்னர் 113 டிகிரி பாரன்ஹீட்டை எட்டுமாம். எம்ஐடியின் விஞ்ஞானிகளின் படி, வரும் காலத்தில் அங்கு நிலவப்போகும் காலநிலை மாற்றம் ஆனது மனித உயிர்களை கடுமையாக அச்சுறுத்தும். துபாய் மட்டுமின்றி இதர வளைகுடா நகரங்களும் 2070 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோடையில் 113 டிகிரி பாரன்ஹீட் என்கிற வெப்பநிலையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

05. அபுதாபி

05. அபுதாபி

2070 ஆம் ஆண்டுக்கு பின்னர் அபுதாபியில் தினசரி வெப்பநிலை ஆனது தாங்க முடியாத ஒன்றாகி விடுமாம்.

எம்ஐடி ஆய்வின்படி, தீவிர வெப்பத்தினால் மிகவும் பாதிக்கப்படும் நகரங்களில் அபுதாபியும் ஒன்றாகும். இப்பகுதி கண்ட அதிகபட்ச வெப்பநிலை 126 டிகிரி பாரன்ஹீட் ஆகும். 2070 ஆம் ஆண்டளவில், நகரத்தின் குடியிருப்பாளர்கள் இந்த அளவிலான வெப்பநிலைகளை அடிக்கடி சந்திக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

06. ஷாங்காய்

06. ஷாங்காய்

2070 மற்றும் 2100 க்கு இடையே மிக உயர்ந்த வெப்பநிலைகளை சந்திக்கும். சுமார் 400 மில்லியன் மக்கள் வசிக்கும் வட சீனா சமவெளியான இந்த நகரம், இந்த நூற்றாண்டின் முடிவில் கிரகத்தின் மீது மிகப்பெரிய வெப்பமண்டலங்களில் ஒன்றாக உருமாற உள்ளதாம். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்ட - கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான - ஆய்வின் படி, 2070 மற்றும் 2100 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்த நகரத்தில் கடுமையான வெப்பமண்டலங்களை எதிர்பார்க்கலாம். ஷாங்காய் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நகரமாகும் என்பதும், அங்கு சுமார் 25 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. பெய்ஜிங்

07. பெய்ஜிங்

இந்த நகரம் புகை மேகத்தின் விளைவாக வாழ்வாதாரத்தை இழக்க உள்ளதாம். பெய்ஜிங் வட சீனாவின் ஒரு பகுதியாக உள்ளது, உடன் ஒரு தீவிரமான வெப்பமண்டலங்களில் ஒன்றாகவும் உள்ளது. பல சீன நகரங்களைப் போல பெய்ஜிங்கும் காற்று மாசுபாட்டால் அவதிப்பட்டு வருகிறது. வெளியே செல்லும் போது முகமூடிகள் அணியுமாறு உள்ளூர் மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.உலகின் அனைத்து போர்களையும் வன்முறைகளையும் விட சுமார் 15 மடங்கு மக்கள் காற்று மாசுபாட்டால் கொல்லப்படுகிறார்கள் என்பதும், கடந்த 2015 ஆம் ஆண்டில், 9 மில்லியன் மக்கள் மாசு-தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

08.புதுதில்லி

08.புதுதில்லி

நம் நாட்டின் தலைநகர் வாசிகள் காற்று காரணமாக ஏற்கனவே குமட்டல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் தோல் தடித்தலுக்கும் ஆள் ஆகின்றனர். சமீபத்திய ஆய்வின் படி, இந்திய மக்கள்தொகையில் சுமார் 2% பேர் தற்போது 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை சந்திக்கின்றனர். இந்த நூற்றாண்டின் இறுதியில்,அந்த சதவீதம் அந்த 70% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

09.டாக்கா

09.டாக்கா

கடல் மட்ட அதிகரிப்பானது டாக்கா மக்களை அகதிகளாக்க உள்ளதாம். காலநிலை மாற்றம் வரும்போது வங்கதேசம் மிகவும் பாதிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. வெப்ப அலைகளை மட்டும் அல்ல இந்த நாடு அழிவுகரமான வெள்ளப் பெருக்கு உடனும் போராட வேண்டியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு கோடையில், பங்களாதேஷில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர், 140 பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 700,000 வீடுகள் சேதம் அடைந்தது. ஐ.பி.சி.சி யின் மதிப்பீட்டின் படி நாட்டின் 20 சதவிகித நிலப்பரப்பு ஆனது கடல் மட்ட உயர்வினால் (3 அடி) இழக்கப்படலாம்.

10. லாகோஸ்

10. லாகோஸ்

நைஜீரியாவிலுள்ள லாகோஸ் நகரின் மக்கள் தொகை ஒருபக்கம் அதிகரிக்க மறுபக்கம் கடல்மட்டமும் அதிகரிக்கிறது. ஏற்கனவே லாகோஸ் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலைப்பாட்டில், அதன் மிகவும் குறைந்த நிலப்பகுதி ஆனது வரும் காலத்தில் கடல் மட்ட உயர்வாலும் பாதிக்கப்பட உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் வெள்ளம் காரணமாக 260,000 இறப்புகளை லாகோஸ் சந்திக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists say these 10 major cities could become unlivable within 80 years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X