எலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு: குவியும் பாராட்டுக்கள்.!

கேசவ் சிங் தனது குழுவினருடன் சேர்ந்து எலிகளை வைத்து ஆய்வு செய்து வந்தார். மேலும் எலிகளை முழுமையாக கண்காணித்து வந்தார்.

|

இன்றைக்கு நவீன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தினமும் அரங்கேறி வருகிறது. மருத்துவம், விண்வெளி, வாகனம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியரின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது.

எலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு:

இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி அந்த அளவுக்கு இந்தியர்களின் கண்டுபிடிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கிறது. இந்தியர்களின் கண்டுபிடிப்புகளுக்கு வெளிநாட்டிலும் நோபல் பரிசு கிடைப்பது உலக அளவில் இந்தியாவின் பெருமையை உற்றுநோக்க வைக்கிறது.

கேசவ் சிங்:

கேசவ் சிங்:

அமெரிக்காவில் வசிப்பர் தான் கேசவ் சிங். இந்திய வசம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அந்த நாட்டில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றி வருகிறார்.

எலியை வைத்து ஆய்வு:

எலியை வைத்து ஆய்வு:

கேசவ் சிங் தனது குழுவினருடன் சேர்ந்து எலிகளை வைத்து ஆய்வு செய்து வந்தார். மேலும் எலிகளை முழுமையாக கண்காணித்து வந்தார். அப்போது அவருக்கு வயதான எலியின் தோல் சுருக்கங்களை போக்க ஏதாவது கண்டு பிடிக்க முனைப்பு காட்டினார்.

டிஎன்ஏவில் மாற்றம் செய்ய முடிவு:

டிஎன்ஏவில் மாற்றம் செய்ய முடிவு:

எலியின் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கினார். பிறகு ஆய்வுகளின் அடிப்படையில் அவருக்கு நல்ல பலன்கள் கிடைத்தன.

மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ:

மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ:

அவர் தற்போது மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்வதால் எலிகளின் முடி உதிர்வையும், வயது மூப்பையும் தடுக்க முடியும். மீண்டும் எலியை இளமை நிலைக்கு கொண்டு வர முடியும் என்று கண்டுபிடித்து நிரூபித்துள்ளார்.

மனிதர்களுக்கு பயன்படும்:

மனிதர்களுக்கு பயன்படும்:

எந்த ஒரு ஆய்வும் மனிதர்களை வைத்து செய்யப்படும் முன்பே எலிகளை வைத்துதான் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ளதால், இது மனித இனத்திற்கும் முக்கியமாக பயன்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பாராட்டுகள் குவிக்கின்றது:

பாராட்டுகள் குவிக்கின்றது:

எலியின் தோல் சுருக்கம் மற்றும் வயது முதிர்வை தடுக்க முடியும் என்று கண்டறிந்த கேசவ் சிங்கிற்கு உலகம் முழுவதும் இருந்து அனைத்து விஞ்ஞானிகள் உட்பட தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் பேராசிரியர் கேசவ் சிங் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Scientists reverse aging associated skin wrinkles and hair loss in a mouse model: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X