மின்காந்த ஆற்றலை குவிக்கும் கீசா பிரமிடு!

சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று இயற்பியல் தத்துவங்களின் அடிப்படையிலான முறைகளை செயல்படுத்தி, ரேடியோ அலைகளுக்கு மின்காந்த அலைகளாக பதிலளிக்கும் மிகப்பெரிய பிரமிடு-ஐ ஆராய்ந்துள்ளனர்.

|

சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று இயற்பியல் தத்துவங்களின் அடிப்படையிலான முறைகளை செயல்படுத்தி, ரேடியோ அலைகளுக்கு மின்காந்த அலைகளாக பதிலளிக்கும் மிகப்பெரிய பிரமிடு-ஐ ஆராய்ந்துள்ளனர். அதிர்வுகள் ஏற்படும் நிலையில் இந்த பிரமிடு-ஆல், அதன் உட்புற பகுதிகள் மற்றும் அடிமட்ட பகுதிகளில் மின்காந்த ஆற்றலை குவிக்கமுடிகிறது என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

மின்காந்த ஆற்றலை குவிக்கும் கீசா பிரமிடு!

இந்த ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி இதே போன்ற விளைவுகளை அதற்குரிய வரம்பிற்குள் மறுஉருவாக்கம் செய்யக்கூடிய நானோ துகள்களை வடிவமைக்க இந்த ஆய்வு குழு திட்டமிட்டுள்ளது.

எகிப்து

எகிப்து

இது போன்ற நானோ துகள்களை எடுத்துக்காட்டாக சென்சார்கள் மற்றும் அதிக திறன் வாய்ந்த சோலார் செல்கள் போன்றவற்றை உருவாக்க பயன்படுத்தலாம். அப்ளைடு பிசிக்ஸ் என்னும் ஆய்வுக்கட்டுரையில் இந்த ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளது.

என்னதான் எகிப்து பிரமிடுகளை சுற்றி பல்வேறு பழங்கதைகள்,தொன்மங்கள் மற்றும் புனைவுகள் இருந்தாலும், அதனுடையை கட்டமைப்புகள் பற்றி சிறு அறிவியல் பூர்வமான தகவல்களும் உள்ளன. எப்படி இந்த அதிசய பிரமிடு ஒரே ஒத்திசைவுநீளம் கொண்ட மின்காந்த அலைகளுடன் ஊடாடுகிறது என்பதில் இயற்பியலாளர்கள் ஆர்வம் கொண்டனர். ஒத்திசைவு நிலையில் இந்த பிரமிடானது அதன் உட்புற பகுதிகள் மற்றும் மூன்றாவது முடிக்கபடாத அறை உள்ள அடிப்பகுதியில் மின்காந்த ஆற்றலை குவிக்கிறது என இந்த கணக்கீடுகள் காட்டுகின்றன.

600 மீட்டர் வரை

600 மீட்டர் வரை

இயற்பியலின் எண்கணிதம் மற்றும் பகுப்பாய்வு வழிமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரமிடில் உள்ள ஒத்திசைவானது 200 முதல் 600 மீட்டர் வரை நீளம் கொண்ட ரேடியோ அலைகளால் தூண்டப்படுவதாக முதலில் ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.பின்னர் அவர்கள் பிரமிடில் இருந்து வரக்கூடிய மின்காந்த மாதிரியை உருவாக்கி, அழிவு ஏற்படும் இடத்தை கணக்கிட்டனர். அலை ஆற்றலின் எந்த பகுதியை ஒத்திசைவு நிலையில் பிரமிடு உட்கொள்ளும் அல்லது வெளியிடும் என்பதை கணக்கிட இந்த மதிப்பீடுகள் உதவும். கடைசியாக இதே சூழ்நிலையில், பிரமிடின் உட்புறம் மின்காந்த பகிர்மானத்தை ஆய்வாளர்கள் அடைந்தனர்.

டை எலக்ட்ரிக் நானோ

டை எலக்ட்ரிக் நானோ

இந்த முடிவுகளை விளக்கும் விதமான, ஆராய்ச்சியாளர்கள் பன்முக பகுப்பாய்வை நடத்தினர். ஒரு சிக்கலான பொருள் மற்றும் மின்காந்த ஆற்றல் இடையே நடைபெறும் ஊடாட்டத்தை கண்டறிய இயற்பியலில் இந்த முறை பரவலாக பயன்படுகிறது. அந்த பொருளால் சிதறடிக்கும் ஆற்றலானது, எளிய பன்முக கதிரியக்கமாக மாற்றப்படுகிறது. அந்த முழு பொருளால் சிதறடிக்கப்படும் ஆற்றலும், இந்த பன்முக கதிரியக்கத்தின் தொகுப்பும் ஒன்றாக இருக்கும்.

ஒளி மற்றும் டை எலக்ட்ரிக் நானோ துகள்கள் இடையேயான உறவு பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களை இந்த பிரமிடு கவர்கிறது. நானோ துகள்களால் சிதறடிக்கப்படும் ஒளியானது, அவற்றின் அளவு, வடிவம் மற்றும் அந்த பொருளின் குறியீட்டை சார்ந்தது. இந்த காரணிகளை மூலம், சிதறடிக்கும் ஒத்திசைவை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்தி நானோ அளவில் ஒளியை கட்டுப்படுத்தும் கருவியை உருவாக்கலாம்.

நானோ சென்சார்

நானோ சென்சார்

"எகிப்து பிரமிடுகள் எப்போது அதிகளவு கவனத்தை ஈர்க்கக்கூடியவை. ஆராய்ச்சியாளர்களாக நாங்களும் ஆர்வத்துடன், ரேடியோ அலைகளை ஒத்திசைவாக மாற்றும் பொருளாக பிரமிடை பார்த்தோம். ஆனால் பிரமிடு பற்றிய கட்டடமைப்பு தகலல்கள் இல்லாததால், யூகத்தின் அடிப்படையில் பணியாற்றினோம். எடுத்துக்காட்டாக, பிரமிடில் எந்தவொரு துவாரங்களும் இல்லை என்றும், சாதாரண சுண்ணாம்பு கற்களை கொண்டு உள்ளும் வெளியும் கட்டப்பட்டதாக யூகித்தோம். இதன் வாயிலாக, பல்வேறு ஆச்சர்யமூட்டும் முடிவுகளையும், செயல்பாடுகளையும் கண்டறிந்தோம்"என்கிறார் இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆண்ட்ரே.

இந்த முடிவுகளை பயன்படுத்தி இதேபோன்ற விளைவுகளை நானோ அளவில் மறுஉருவாக்கம் செய்ய ஆராய்ச்சியாளர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர். "சரியான மின்காந்த பண்புகள் கொண்ட பொருளை தேர்ந்தெடுப்பதன் மூலம், பிரமிடுகளில் உள்ள நானோ துகள்களை பெற்று சிறப்பான நானோ சென்சார் மற்றும் திறமையான சேலார் செல்களை தயாரிக்க முடியும்" என்கிறார் ஐடிஎம்ஓ பல்கலைகழக இயற்பியல் போராசிரியர் முனைவர் போலினா.

Best Mobiles in India

English summary
Scientists Reveal The Great Pyramid Of Giza Can Focus Electromagnetic Energy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X