செவ்வாயில் வீரர்களுக்கு எலும்பு முறிய வாய்ப்பா? தோல் மற்றும் எலும்பு பிரிண்ட் செய்யும் 3D தொழிநுட்பம்..

|

பூமிக்கு அப்பால் மனிதக்குலத்தை அழைத்துச் செல்லும் பொதுவான இலக்கை நோக்கி முன்னணி நாடுகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், விண்வெளி பயணத்தில் எதிர்பாராத ஆச்சரியங்கள் பல நடக்க வாய்ப்புள்ளது. அதேபோல், விண்வெளியில் சில நேரங்களில் பேரழிவுகள் கூட நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது. அந்த ஆபத்துகளை எதிர்கொள்வதற்குப் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் காயங்களைச் சரி செய்ய புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதா?

விண்வெளியில் எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதா?

விண்வெளி வீரர்களைச் செவ்வாய் கிரகத்தில் பயணம் செய்ய தயார்ப்படுத்தும் முயற்சியில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் களமிறங்கி தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்த சவாலான விண்வெளி பயணத்தில் களமிறங்கும், விண்வெளி வீரர்களின் உடல் மற்றும் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காரணம், பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைந்த புவியீர்ப்பு விசையில் உள்ள விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழக்கிறார்கள். இதனால், விண்வெளியில் எலும்பு முறிவு போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

3D பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் எலும்பை பிரின்டிங் செய்ய முடியுமா?

3D பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் எலும்பை பிரின்டிங் செய்ய முடியுமா?

இந்த சிக்கலை விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் எளிதாகச் சமாளிக்கும் வகையில், புதிய 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 3D பிரின்டிங் மூலம் வீடு கட்டுவது, ஆயுதம் செய்வது, தேவையான வடிவமைப்பை அப்படியே உருவாக்குவது போன்ற செயல்பாடுகளில் இந்த 3D பிரின்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முதல் முறையாக மருத்துவ அவசரக் காலங்களில் பயன்படுத்தக் கூடிய 3D பிரின்டிங் எலும்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

3D பயோபிரிண்டிங் எங்கு அதிகம் தேவைப்படும்?

3D பயோபிரிண்டிங் எங்கு அதிகம் தேவைப்படும்?

இதை 3D பயோபிரிண்டிங்கை நடைமுறை என்று அழைக்கிறார்கள். இது தொழில்நுட்பத்தை ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்பும் முன் பூமியில் செயற்கை எலும்பு மாதிரியை உருவாக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியம் அல்லது குறைந்த புவியீர்ப்பு விசையில் உள்ள விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழக்கிறார்கள். இதனால், செவ்வாய் கிரகத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அங்குதான் அதிகம் தேவைப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

99 விண்வெளி பொருட்களை உருவாக்கும் பணி

99 விண்வெளி பொருட்களை உருவாக்கும் பணி

விண்வெளி பயணத்தில் எடை முக்கிய பங்கு வகிக்கும். இந்த பணிகளில் மருத்துவ பொருட்களைக் குறைக்கும் நம்பிக்கையில் இந்த வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. 180க்கும் மேற்பட்ட பயணங்களைத் தொடங்க உதவிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் விட்டுச்சென்ற கலைப்பொருட்கள் மூலம் ஐரோப்பாவின் பிரபஞ்ச பயணத்தைப் பட்டியலிட 99 பொருட்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நூர்ட்விஜில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தால் இந்த 3D பிரின்டிங் செய்யப்பட்ட எலும்பு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு பயனர்கள் 'இதை' உடனே அப்டேட் செய்ய வேண்டும்..இல்லையென்றால் 'இந்த' திட்டத்தில் சேர முடியாது..ரேஷன் கார்டு பயனர்கள் 'இதை' உடனே அப்டேட் செய்ய வேண்டும்..இல்லையென்றால் 'இந்த' திட்டத்தில் சேர முடியாது..

விண்வெளி வீரர்களிடமிருந்து எடுக்கப்படும் 'பயோ-இங்க்'

விண்வெளி வீரர்களிடமிருந்து எடுக்கப்படும் 'பயோ-இங்க்'

மனித இரத்த பிளாஸ்மாவின் ஊட்டச்சத்து நிறைந்த 'பயோ-இங்க் (Bio ink)'யைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் அவர்களுக்குத் தேவையான தோல் அல்லது எலும்பை பயோபிரிண்ட் செய்ய இந்த தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. இந்த பயோ-இங்க் விண்வெளி வீரர்களிடமிருந்தே எடுக்கப்படும். 'மைனஸ் 1G' ஈர்ப்பு விசையில் தலைகீழாக வேலை செய்வதன் மூலம், விண்வெளியில் இதைச் செய்ய முடியும் என்று குழு காட்டியது. 2019 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தின் போது விண்வெளி வீரர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 3D அச்சிடும் மனித திசுக்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு உள் உறுப்புகளையும் 3D பயோபிரிண்டிங் மூலம் அச்சிட அடுத்து திட்டமா?

முழு உள் உறுப்புகளையும் 3D பயோபிரிண்டிங் மூலம் அச்சிட அடுத்து திட்டமா?

"இந்த மாதிரிகள் விண்வெளிக்கு 3D பயோபிரிண்டிங்கை நடைமுறைப்படுத்துவதற்கான லட்சியமான எண்ட்-டு-எண்ட் சாலை வரைபடத்தின் முதல் படிகளைக் குறிக்கின்றன. இந்தத் திட்டம் உபகரணங்கள், அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் மலட்டுச் சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைப்படும் உள் வசதிகளை ஆராயும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மிகவும் சிக்கலான திசுக்களை உருவாக்கும் திறன் கொண்ட இந்த தொழில்நுட்பம் இறுதியில் முழு உள் உறுப்புகளையும் அச்சிட்டு உருவாக்கும்" என்று ESA கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Scientists Produce 3D Printed Bone And Skins For Astronauts To Be Used On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X