விண்வெளியில் மினுமினுத்த இடம்; ஆராய்ச்சியில் வெளியான வியப்பூட்டும் தகவல்!
பூமி கிரகத்திற்கு இருப்பதை போன்றே, சனி கிரகத்திற்கும் நிலவு இருக்கிறது. ஆனால் அவைகள் எண்ணிக்கையில் சற்று அதிகம்-மொத்தம் 62 நிலவுகளை கொண்டு உள்ளது.
பூமி கிரகத்திற்கு இருப்பதை போன்றே, சனி கிரகத்திற்கும் நிலவு இருக்கிறது. ஆனால் அவைகள் எண்ணிக்கையில் சற்று அதிகம் - மொத்தம் 62 நிலவுகளை கொண்டு உள்ளது. அதில் டைட்டான் எனும் ஒரு நிலவும் அடக்கும். கூடுதலான விசித்திரங்களை கொண்டு இருப்பதால் எந்தவொரு சனிக்கோளின் நிலவுகளை காட்டிலும் டைட்டான் ஆனது அதிகம் கவனிக்கப்படுகிறது.
அப்படியானதொரு கவனிப்பில் தான் ஒரு மினுமினுப்பு கண்டு அறியப்பட்டது. டைட்டன் நிலவில் ஏற்படும் பருவகால புயல்களின் அறிகுறிகளை ஆராய்ந்து வந்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு வழியாக ஒரு சிறப்பான ஆதாரம் கிடைத்தது. அதென்ன ஆதாரம்?

காத்திருப்பிற்கான பலன் கிடைத்தது!
டைட்டான் நிலவின் வட துருவத்தில் காணப்பட்ட ஒரு மென்மையாய் பளபளப்பு ஆனது அங்கு மழை பெய்யும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இதன் விளைவாக அதன் வடக்கில் கோடைகாலத்தின் துவக்கமும் கண்டு அறியப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் சனிக்கோளை ஆராயும் நோக்கில், காசினி விண்கலம் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட நாளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்த மிக முக்கியமான மற்றும் முதலுமான ஆதாரம் இதுவாகும்.

பூமிக்கும் டைட்டானுக்கும் உள்ள ஒரு தொடர்பு!
காசினி விண்கலம் ஆனது சனிகோளை அடைந்தபோது, அதன் நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் கோடை காலம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. அதனால் அதன் பருவகால மாற்றங்களின் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆவலுடன் கவனித்து வந்தனர். ஏனென்றால், டைட்டான் ஆனது பூமியிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் கூட, அதன் காலநிலை பல வழிகளில் நம்முடையது போலவே இருக்கிறது.

உலகம் மற்றும் டைட்டான் நிலவு - ஒரு ஒப்பீடு!
டைட்டானில் ஒரு நாள் என்பது 15.9 புவி நாட்கள் ஆகும். நமது நிலவை போன்றே இது சனிகோள் உடன் பலமாக பூட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு வருடம் என்பது 29.5 புவி ஆண்டுகளுக்கு சமம் ஆகும். பூமியின் 23.5 டிகிரி சாய்தளத்துடன் ஒப்பிடுகையில் டைட்டனின் அச்சு 27 டிகிரி ஆகும்.

சிக்காமல் இருந்த ஒரே காலம் மழைக்காலம் மட்டும் தான்!
எனவே டைட்டானில் ஒரு பருவம் சராசரியாக 7.5 புவி ஆண்டுகள் வரை நீடிக்கிறது (சனியின் சுற்றுச்சூழல் விசித்திரத்தன்மை காரணமாக அவை வேறுபடுகின்றன, அது வடக்கு கோடை மற்றும் தெற்கு குளிர்காலத்தை அதிகமாக நீடிக்க செய்கிறது). வசந்தகாலம் ஆனது 2009 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அங்கு நிகழ்ந்த வளிமண்டல மாற்றங்கள் ஆனது தெற்கு குளிர்காலத்தின் ஆரம்பமாக கருதப்பட்டன. ஆனால் வடக்கில் எதிர்பார்க்கப்படும் மழைக்காலம் மட்டும் சிக்காமலேயே இருந்தது.

துல்லியமாக செயல்பட்ட தனித்துவமான கருவி!
அதனால் காசினியின் வெளியீட்டை கவனமாகக் கையாண்ட பிறகு, ஜூன் 7, 2016 அன்று பதிவான புகைப்படத்தில் ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். டைட்டானின் தடிமனான, மங்கலான வழியை கடக்கும் திறன் கொண்ட காசினி விண்கலத்தின் விஷுவல் மற்றும் அகச்சிவப்பு மேப்பிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (விஐஎம்எஸ்) கருவியின் வழியாக குறிப்பிட்ட படம் பெறப்பட்டது.

முன்னால் இல்லை, பின்னால் இல்லை, நடுவில் மட்டும்!
அந்த படத்தில் வளிமண்டல மேற்பரப்பின் சுமார் 120,000 சதுர கிலோமீட்டர் (46,332 சதுர மைல்கள்) பரப்பளவு ஆனது - கிட்டத்தட்ட பென்சில்வேனியாவின் அளவு - அதற்கு முன் மற்றும் அதற்கு பின் எடுத்த அடுத்தடுத்த படங்களில் தோன்றாத விசித்திரமான பிரகாசமான பகுதியாக காட்சி அளித்தது.

மினுமினுக்க என்ன காரணம்?
"ஒட்டுமொத்த பிரகாசம், ஸ்பெக்ட்ரோல் குணாதிசயங்கள் மற்றும் புவியியல் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, சூரிய ஒளியின் காரணமாக பிரகாசிக்கும் ஈரமான இடத்தை போன்றே தான் நிலவின் திடமான மேற்பரப்பு ஆனது மழையின் ஈரப்பதத்தின் விளைவாக பிரதிபலித்து உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு அறிந்து உள்ளனர். மேலும் நிகழ்த்தப்பட்ட பகுப்பாய்வின் படி, அந்த பகுதி மீத்தேன் மழைப்பொழிவை சந்தித்து உள்ளது, அதனை தொடர்ந்து அநேகமாக ஆவியாக போகும் காலத்தையும் கடந்து உள்ளது என்று முடிவுக்கு வந்தனர். இது டைட்டனின் வட அரைக்கோளத்தில் நிகழ்ந்த கோடை மழையின் முதல் ஆதாரம் ஆகும்.

இதனால் என்ன லாபம்?
இதுவரை கண்ணில் சிக்காமல் இருந்த இந்த மழை ஆதாரம் ஆனது டைட்டான் சந்திரனின் காலநிலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். இந்த இடத்தில், மழை ஆதாரத்தை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு தைமாதம் ஆனது என்பதற்கான விளக்கம் விவரிக்கப்படவில்லை.
News Source : www.sciencealert.com


Click it and Unblock the Notifications