மனதில் நினைப்பதைப் படமாக்கும் திட்டம் : ஆய்வாளர்கள் தீவிரம்.!!

By Meganathan
|

யாருக்கும் தெரியாமல் நம் மனதிற்கு மட்டும் தெரிந்தவற்றை தான் ரகசியம் என்பார்கள். அறிவியல் ஆர்வலர்களின் புதிய ஆய்வு இதற்கும் ஆப்பு வைக்க நினைக்கின்றது. ரகசியமே இருக்கக் கூடாது என்ற நோக்கில் நம் மனதில் நினைப்பவற்றை திரையில் மற்றவர்களும் பார்க்க வைக்கும் திட்டத்தில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

ஆரிகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் மனித மூளையை ஸ்கேன் செய்து அவர்கள் மனதில் நினைப்பவற்றை கண்டறியும் அமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

படம்

படம்

முதற்கட்டமாக மனிதர்கள் தங்களது மனதில் நினைக்கும் முகங்களை மறுஉருவாக்கம் செய்யும்படி குறிப்பிட்ட அமைப்பினை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கருத்து

கருத்து

'ஒருவரின் மனதினுள் ரகசியமாக இருப்பவற்றை, அவர்களின் மனதில் இருந்து எடுக்க முடியும்' என ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நரம்பியல் ஆய்வாளரான பிரைஸ் குல் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வில் மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் சுமார் வெவ்வேறு நிறங்களில் முன்பின் தெரியாத 1,000 பேர் முகம் கொண்ட புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் FMRI இயந்திரம் மூலம் காண்பிக்கப்பட்டன.

மாற்றம்

மாற்றம்

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கும் போது அவர்களின் மூளையில் பாயும் ரத்த ஓட்டத்தினால் ஏற்படும் மாற்றங்களை FMRI இயந்திரம் கண்டறியும்.

மென்பொருள்

மென்பொருள்

FMRI இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூளையின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும். ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பார்க்கும் ஒவ்வொரு புகைப்படமும் கணித விளக்கம் மூலம் கன நேரத்தில் அறிந்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எண்

எண்

முகத்தில் இருக்கும் குறிப்பிட்ட அசைவுகளை ஆய்வாளர்கள் மொத்தம் 300 எண்களை செட் செய்து செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த எண்களைச் செயற்கை நுண்ணறிவு கோடு வடிவில் பார்க்கும்.

சோதனை

சோதனை

முதற்கட்ட செயற்கை நுண்ணறிவு பயிற்சியில் முகங்களில் ஏற்படும் அசைவுகள் நரம்பியில் முறைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை ஆய்வாளர்கள் சோதனை செய்தனர்.

இயந்திரம்

இயந்திரம்

செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்டளவு முக பாவனைகளை அறிந்த பின் இதனை ஆய்வாளர்கள் FMRI இயந்திரத்தில் பொருத்தி ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பார்க்கும் முகங்களைப் பிரதிபலிக்கச்செய்யும் சோதனை நடத்தப்பட்டது.

படம்

படம்

இம்முறை ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட படங்கள் இல்லாமல் வேறு புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. இருந்தும் இந்த இயந்திரம் ஓரளவு சரியான படங்களை மறு உருவாக்கம் செய்தது.

Best Mobiles in India

English summary
Scientists have invented a mind-reading machine that visualises your thoughts Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X