ஒருவழியா சிக்கிடுச்சு.. செவ்வாய் கிரகத்திற்கு "அருகில்" விஞ்ஞானிகள் கண்ணில் தென்பட்ட விசித்திரம்!

|

"இதற்கு முன்னால் இப்படி ஒன்றை பார்த்ததே இல்லை!" என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களே கூறும் அளவிற்கு ஒரு விசித்திரமான கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் செவ்வாய் (Mars) கிரகத்திற்கு "அருகில்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதென்ன கட்டமைப்பு? விசித்திரம் என்று கூறும் அளவிற்கு அது எப்படி உள்ளது? செவ்வாய் கிரகத்திற்கு அருகில் என்றால் எவவ்ளவு அருகில்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பயம் மற்றும் பீதி!

பயம் மற்றும் பீதி!

சரியாக, 1877 ஆம் ஆண்டில் அமெரிக்க வானியலாளர் ஆன ஆசாப் ஹால், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் இரண்டு "விண்வெளி பொருட்களை" கண்டுபிடித்தார்.

அதற்கு - டீமோஸ் (Deimos) மற்றும் போபோஸ் (Phobos) என்று பெயரிடப்பட்டது. அதாவது கிரேக்க மொழியில் போபோஸ் மற்றும் டீமோஸ் என்றால் - பயம் மற்றும் பீதி என்று அர்த்தம்!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

மர்மமான தோற்றம்!

மர்மமான தோற்றம்!

போபோஸ் மற்றும் டீமோஸ் என்பது செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் இரண்டு நிலவுகள் ஆகும்.

1877 க்கு பிறகு, அதாவது இந்த இரண்டு நிலவுகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான முறை நாம் அவைகளை "கவனித்து" இருந்தாலும் கூட, அந்த இரண்டு நிலவுகளின் தோற்றமும் (அதாவது அவைகள் எப்படி உருவானது என்பது) இன்னுமும் ஒரு மர்மமாகவே உள்ளது.

அந்த மர்மத்தை உடைக்க ஆரம்பித்த விஞ்ஞானிகள்!

அந்த மர்மத்தை உடைக்க ஆரம்பித்த விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான போபோஸ் எப்படி உருவானது என்கிற மர்மத்தை உடைக்கும் நோக்கத்தின் கீழ் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (European Space Agency) ஆனது ஒரு தரமான வேலையை செய்துள்ளது.

அதாவது, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆனது அதன் மார்ஸ் எக்ஸ்பிரஸில் (Mars Express) உள்ள மார்சிஸ் (MARSIS) என்கிற கருவியை மேம்படுத்தியுள்ளது. அறியாதோர்களுக்கு மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்றால் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு விண்கலம் ஆகும்!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

மிகவும் நெருக்கமாக சென்ற போது!

மிகவும் நெருக்கமாக சென்ற போது!

முன்னதாக மார்சிஸ் (MARSIS) என்கிற கருவியானது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்தபடியே தான் ஆய்வு செய்யும் திறனை கொண்டிருந்தது.

ஆனால் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மேம்பாட்டின் விளைவாக அது மிகவும் நெருக்கமான தொலைவில் இருந்தபடியே ஆய்வுகளை நிகழ்த்தும் திறனை பெற்றது. அதனை தொடர்ந்து, மார்சிஸ் கருவியை கொண்டுள்ள மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் ஆனது ​​போபோஸ் நிலவிற்கு மிகவும் நெருக்கமாக பறந்துள்ளது.

வீசுவதும்.. பிரதிபலிப்பதும்!

வீசுவதும்.. பிரதிபலிப்பதும்!

மிகவும் நெருக்கமாக பறந்தது என்றால்.. மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமானது, போபோஸ் நிலவிற்கு நெருக்கமாக பறக்கும் போது இரண்டிற்கும் இடையே இருந்த தூரம் - வெறும் 83 கிலோமீட்டர்கள் மட்டுமே ஆகும்!

வழக்கமாக, மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள மார்சிஸ் கருவியானது செவ்வாய் கிரகத்தின் மீதும், போபோஸ் நிலவின் மீதும் குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை (Low-frequency radio waves) செலுத்தும்.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

சிலது மட்டும் ஆழமாக செல்லும்!

சிலது மட்டும் ஆழமாக செல்லும்!

செவ்வாய் மற்றும் போபோஸ் நோக்கி அனுப்பப்படும் அலைகளில் பெரும்பாலானவை, செவ்வாய் கிரகம் மற்றும் போபோஸ் நிலவின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும்.

ஆனால் ​​சில அலைகள் மட்டும் இன்னும் ஆழமாக பயணித்து மேற்பரப்பிற்கு கீழே உள்ள பல்வேறு பொருட்களின் அடுக்குகளுக்கு இடையே உள்ள எல்லைகளுக்கு (boundaries between layers of different materials) சென்று பின்னர் பிரதிபலிக்கும்!

விசித்திரமான கட்டமைப்பு!

விசித்திரமான கட்டமைப்பு!

பிரதிபலித்து "மீண்டு வரும்" சமிக்ஞைகளை (Signals) ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாய் கிரகத்திற்கு கீழே என்ன உள்ளது? போபோஸ் நிலவிற்கு கீழே என்ன உள்ளது என்பதை விஞ்ஞானிகளால் அறிந்துகொள்ள முடியும். அதாவது மேற்பரப்பிற்கு கீழே உள்ள கட்டமைப்பை வரைபடமாக்க முடியும்!

அப்படியான ஒரு ஆய்வில் தான் செவ்வாய் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான போபோஸில் இருந்து திரும்பிய சமிக்ஞைகளை வைத்து பார்க்கும் போது.. அதனுள் ஒரு "விசித்திரமான கட்டமைப்பு" இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை!

இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை!

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, போபோஸ் சந்திரனின் மேற்பரப்பிற்கு கீழே முன் எப்போதும் அறியப்படாத கட்டமைப்புகள் இருப்பதற்கான சாத்தியமான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அது போபோஸின் தோற்றத்தை சுற்றியுள்ள மர்மத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!

போபோஸ் மட்டுமல்ல டீமோஸ் கூட ஒரு மர்மம் தான்!

போபோஸ் மட்டுமல்ல டீமோஸ் கூட ஒரு மர்மம் தான்!

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான போபோஸ் மட்டுமல்ல, இன்னொரு நிலவான டீமோஸின் தோற்றம் கூட ஒரு மர்மம் தான்!

ஏனென்றால் சில விஞ்ஞானிகள் - இந்த இரண்டு நிலவுகளுமே, செவ்வாய் கிரகத்தால் "கைப்பற்றப்பட்ட" சிறுகோள்கள் என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர் - இவைகள் விண்கல் மோதலின் போது செவ்வாய் கிரகத்தில் இருந்து பிளந்து வந்த "பொருட்கள்" என்று நம்புகின்றனர்.

எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த "அடேங்கப்பா" வேலை!

எது உண்மை?

எது உண்மை?

போபோஸும் டீமோஸும் - செவ்வாய் கிரகத்திற்கு துளியும் சொந்தமில்லாத சிறுகோள்களா அல்லது செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியா? என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

ஏனென்றால், போபோஸ் மற்றும் டீமோஸும் தோற்றமானது அவைகளை சிறுகோள்கள் என்று கூறுகிறது, ஆனால் அவைகள் செவ்வாய் கிரகத்தை சுற்றும் விதம் வேறுவிதமாக கூறுகிறது!

எது உண்மை என்பதை கண்டறிய.. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கும், மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்திற்கும், அதில் உள்ள மார்சிஸ் கருவிக்கும் இன்னும் சில காலம் எடுக்கலாம். அதுவரையிலாக காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை!

Photo Courtesy: ESA, NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Scientists found strange structures inside the Mars Moon Phobos using MARSIS instrument

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X