அசாமில் விழுந்த 12 கிலோ விண்கல்.. எடுத்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

|

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, அசாம் (Assam) மாநிலத்தில் உள்ள கோலாகாட் (Golaghat ) என்கிற மாவட்டத்தில் உள்ள கமர்கான் (Kamargaon) என்கிற நகரில், 12 கிலோ எடை உள்ள விண்கல் ஒன்று விழுந்தது. தற்போது அதே ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, அசாமில் விழுந்த அதே விண்கல் ஆனது ஒரு சாதராண விண்கல் அல்ல, மாபெரும் ரகசியம் ஒன்றை தன்னுள் வைத்து இருக்கும் ஒரு விண்கல் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

விண்கற்கள் (Meteorite) எவ்வளவு முக்கியமான ஒரு விண்வெளி பொருள் (Space Object) என்பதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஓஸிரிஸ்-ரெக்ஸ் மிஷனே (OSIRIS-REx Mission) ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அறியாதோர்களுக்கு OSIRIS-REx மிஷன் என்பது, பூமிக்கு அருகில் உள்ள ஒரு விண்கல்லில் இருந்து குறைந்தபட்சம் 60 கிராம் மாதிரியை (Sample) கைப்பற்றி, அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் ஒரு விண்வெளி மிஷன் (Space Mission) ஆகும்.

அசாமில் விழுந்த 12 கிலோ விண்கல்லிற்க்குள் இப்படி ஒரு ரகசியமா?

101955 பென்னு (101955 Bennu) என்று அழைக்கப்படும் ஒரு விண்கல்லில் இருந்தே அந்த 60 கிராம் 'சாம்பிள்' சேகரிக்கப்பட உள்ளது. அதை ஒரு விண்கல் என்று குறிப்பிடுவதை விட, ஒரு பெரிய விண்வெளி பாறை (Space Rock) என்றே குறிப்பிடலாம். ஏனென்றால் அது சுமார் 262.5 மீட்டர் நீளம் கொண்ட, 78 பில்லியன் கிலோ கிராம் எடையுள்ள ஒரு சிறுகோள் (Asteroid) ஆகும். இப்படியான, மிகவும் அபாயகரமான ஒரு விண்வெளி பொருளை நோக்கிய நாசாவின் OSIRIS-REx மிஷன் என்ன ஆனது என்று தெரியுமா?

அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டது! சரியாக 2020 ஆம் ஆண்டில் OSIRIS-REx ஆனது பென்னு சிறுகோளில் இருந்து மாதிரிகளை சேகரித்தது; தற்போது அதை பூமிக்கு கொண்டு வருவதற்கான வழியில் உள்ளது. நாசாவின் கூற்றுபடி, பென்னு சிறுகோளின் மாதிரிகள் வருகிற 2023 ஆம் ஆண்டில் பூமிக்கு வந்து சேரும். இந்த இடத்தில், உங்களுக்குள் 2 கேள்விகள் எழலாம் - "இவ்வளவு ரிஸ்க் எடுத்து விண்கற்களின் மாதிரிகள் சேகரிக்கப்படுவது ஏன்?", "விண்கற்கள் ஏன் இவ்வளவு முக்கியமான விண்வெளி பொருட்களாக பார்க்கப்படுகிறது?". அதற்கான பதில் ஒன்று தான்!

அது என்னவென்றால் - பூமியில் உயிர்கள் தோன்றியது எப்படி? இந்த பூமி உருவானது எப்படி? நாமெல்லாம் எங்கிருந்துது வந்தோம்? என்கிற கேள்விகளுக்கான பதில்கள் விண்கற்களில் தான் புதைந்து உள்ளன. ஆகையால் தான் ஒரு விண்கல், விண்வெளியில் மிதந்தாலும் சரி, அல்லது பூமியில் வந்து விழுந்தாலும் சரி, ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியாது. உயிர்கள் எங்கிருந்து வந்தது என்கிற ரகசியத்தை தேட ஆரம்பித்து விடுவார்கள். அப்படியான தேடலில் அசாமில் விழுந்த 12 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது!

ஏனென்றால், அசாமில் விழுந்த விண்கல் ஆனது "பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின?" என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு பெரிய ஆதாரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்கல்லின் வேதியியல் கலவையானது (Chemical composition) அது நட்சத்திரங்களின் மையத்தில் தொடங்கியது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. அதாவது இந்த விண்கல்லின் தாதுக்களில் (Minerals) சில அரிய வெசிகுலர் ஆலிவைன் (Rare vesicular olivine) மற்றும் பைராக்ஸீன் (pyroxene) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எவ்வளவு முக்கியமான கண்டுபிடிப்பு தெரியுமா?

மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். ஏனென்றால், சூரியக் குடும்பத்திலிருந்து கிடைத்த ஒரு விண்கல்லில் "இதெல்லாம்" (மேற்கண்ட பொருட்கள்) கண்டுபிடிக்கப்படுவது, இதுவே முதல் முறை ஆகும். இந்த ஒரு காரணத்திற்காகவே, அசாம் விண்கல் தொடர்பான இந்த ஆய்வில் ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த விண்கல் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது இன்னொரு சுவாரசியமான விஷயம் ஆகும்.

அசாமில் விழுந்த விண்கல் ஆனது செவ்வாய் மற்றும் வியாழன் இடையே அமைந்துள்ள ஆஸ்ட்ராய்டு பெல்ட்டில் (Asteroid belt) இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அசாமில் விழுந்த விண்கல் ஆனது 6.4 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய விண்கல்லின் சிறிய பகுதியே ஆகும். அந்த பெரிய விண்கல் ஆனது வேறொரு விண்கல் மீது மோதி உள்ளது. அதன் விளைவாக, அதிலிருந்து சிறிய சிறிய துண்டுகள் விண்வெளியில் சிதறவிடப்பட்டுள்ளன. அதிலொரு துண்டு தான் அசாமில் வந்து விழுந்துள்ளது. ஒருவேளை அந்த 6.4 கிமீ நீளமுள்ள விண்கல் ஆனது நேரடியாக பூமி மீது மோதி இருந்தால்.. நாங்கள் இதை எழுதியிருக்க மாட்டோம். நீங்கள் இதை படித்து இருக்க மாட்டீர்கள்!

Photo Courtesy: Dy365

Best Mobiles in India

English summary
Scientists Found Rare Things In Kamargaon Meteorite That Fell in Assam Why Its Very Important

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X