Just In
- 18 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 20 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 27 min ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
- 2 hrs ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
Don't Miss
- News
"மதுபோதை.." புது மாப்பிள்ளை விபத்தில் பலி! மூன்றே நாளில் விதவையான இளம்பெண்! கண் முன்னே நடந்த கொடூரம்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
சூரியன் மற்றும் பூமியை ஒத்த கிரக இணை கண்டுபிடிப்பு!
மனிதர்கள் உயிர்வாழ சாத்தியமுள்ள ஒரு வசிப்பிட எக்ஸோப்ளானெட் மற்றும் அதன் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இணையானது மற்ற அறியப்பட்ட கிரக-நட்சத்திர ஜோடியை விட நமது பூமி மற்றும் சூரியன் இணையை ஒத்த அம்சங்களுடன் காணப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படும் வரை ஒரு கிரக வேட்பாளராகக் கருதப்படுகிற இந்த கிரகம், திரவ மேற்பரப்பு நீர் இருப்பதை அனுமதிக்கும் வகையில் அதன் நட்சத்திரத்திலிருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள் என்னவெனில் இதில் உயிரினங்கள் வாழ சாத்தியமுள்ளது.

பூமி போன்ற இந்த கிரகம், நமது கிரகத்தின் அளவை விட 1.9 மடங்கு பெரியது.
"இது பூமி கிரகத்தினை போல இரு மடங்கிற்கும் குறைவான அளவுடைய மற்றும் அதன் சூரிய வகை ஹோஸ்ட் நட்சத்திரத்தின் கலவையாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் நமக்கு பழக்கமானதாகவும் இருக்கிறது" என்று இந்த புதிய ஆய்வின் முதன்மை எழுத்தாளர் ரெனே ஹெல்லர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

சூரிய குடும்ப ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் அவரது குழு கடந்த வாரம் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் இந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த கிரக வேட்பாளர் KOI-456.04 என அழைக்கப்படுகிறார். மற்ற தொலைநோக்கிகளால் அதன் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டால், இந்ந எக்ஸோபிளானட் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே அறியப்பட்ட சுமார் 4,000 கிரகங்களின் குழுவில் சேரும்.
கெப்லர் -160 என அழைக்கப்படும் நட்சத்திரத்தை பூமியை ஒத்த இந்த கிரகத்துடன் சேர்த்து இரண்டு கிரகங்களை சுற்றி வருவதாக மற்ற ஆராய்ச்சிகள் முன்பு கண்டறிந்தன. ஆனால் புதிய ஆய்வில் இரண்டு கூடுதல் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எக்ஸோபிளேனட்டை வாழக்கூடியதாக மாற்றுவது எது?
ஒரு கிரகத்தை வாழ்விடமாகக் கருதுவதற்கு, அது ஒரு நிலையான நட்சத்திரத்தை திரவ நீருக்கு ஏற்ற வெப்பநிலையை பராமரிக்கிற தூரத்தில் சுற்ற வேண்டும்.
நமது பால்வீதி அண்டமானது 10 பில்லியன் பூமி போன்ற கிரகங்களைக் கொண்டிருக்கக்கூடும் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரையில் சுமார் 4,000 மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெரும்பாலான எக்ஸோப்ளானெட்டுகள் உயிரினங்கள் இருக்க தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இதுவரை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட வாழ தகுதியான கிரகங்களில் பெரும்பாலாவை நிலையில்லா சிவப்பு குள்ள நட்சத்திரங்களை சுற்றிவருகின்றன. இந்த சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் சூரியனை விட சிறியவை மற்றும் மங்கலானவை. மேலும் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுபவை. அவை சில சமயங்களில் அவற்றைச் சுற்றியுள்ள கிரகங்களை எரிக்கக்கூடிய அதிக ஆற்றல் கொண்ட நெருப்பை வெளியிடுகின்றன.
சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றிவரும் அறியப்பட்ட வெளி கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட மிகப் பெரியவை, வழக்கமாக நெப்டியூன் அளவுடையவை (பூமியின் நான்கு மடங்கு). இந்த பெரிய கிரகங்கள் அவற்றின் வளிமண்டலங்களில் அதிகப்படியான ஹைட்ரஜனைப் பிடிக்க முனைவதால், இதுபோன்ற வாயு பூதங்கள் திரவ நீரைத் தக்கவைக்காது.

நம்பிக்கையளிக்கும் புதிய கிரகம்
அக்டோபர் 2018 இல் நாசா ஓய்வு பெற்ற கெப்லர் விண்வெளி தொலைநோக்கியிலிருந்து காப்பகப்படுத்தப்பட்ட தரவுகளை வானியலாளர்கள் மறுபரிசீலனை செய்த பின்னர் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எக்ஸோப்ளானட்-வேட்டை ஜோதியை இந்த தொலைநோக்கி டெஸ் செயற்கைக்கோள் தொலைநோக்கிக்கு கைமாற்றிய பின்னர், அது ஆகஸ்ட் 2018 இல் அதன் ஆய்வுகளை தொடங்கியது.
KOI-456.04 பூமியின் அளவை விட இரண்டு மடங்கு இருப்பதால், அதன் வளிமண்டல நிலைமைகள் நம்முடையதைப் போலவே இருக்கின்றன. கூடுதலாக இந்த கிரகம் சுற்றும் நட்சத்திரம் சூரியனின் அளவை விட 1.1 மடங்கு அதிகமாகும். அதன் மேற்பரப்பு வெப்பநிலை 5,200 டிகிரி செல்சியஸ் (சூரியனை விட 300 டிகிரி மட்டுமே குறைவு) மற்றும் நமது சூரியனைப் போலவே இந்த நட்சத்திரமும் புலப்படும் ஒளியை வெளியிடுகிறதுஇந்த அமைப்பு நமது சூரிய குடும்பத்திலிருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
KOI-456.04 இன் வளிமண்டலம் பூமியைப் போன்றது எனும்போது ஒரு லேசான பசுமைஇல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. அதாவது அதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக இருக்கும். இது பூமியின் சராசரியான 15 டிகிரி செல்சியஸுடன் ஒப்பிடலாம் என்று மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்கால விண்வெளி தொலைநோக்கிகள் இந்த கிரகத்தை மேலும் ஆராயலாம். நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் கனேடிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை 2021 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பிளாட்டோ விண்வெளி தொலைநோக்கி, சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் பூமி போன்ற கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தும்.
Source:sciencealert.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470