இனி பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டாம்; தின்றால் போதும்! என்ன?

ஏன் பிளாஸ்டிக் அழிய மறுக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம். பின்னர் நாம் தலைப்பிற்குள் செல்வோம்.

|

பிளாஸ்டிக் (நெகிழி) என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்? ஆனால் அந்த நெகிழி உருவாக்கம் பெற்ற பின்னணி என்ன? ஏன் பிளாஸ்டிக் அழிய மறுக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம். பின்னர் நாம் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டாம்; தின்றால் போதும்! என்ன?

நெகிழி அல்லது பிளாஸ்டிக் உருவாக பிரதான காரணம் - செலவுகள் தான். அதனால் தான் இது "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்று அழைக்கப்டுகிறது. "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து தான் பிளாஸ்டிக் எனும் சொல் உருவானது. பிளாஸ்டிக் ஒரு பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அதாவது அழுத்தம் தந்தால் வளைந்தும் கொடுக்காமல், உடைந்தும் போகாத பொருட்களை பிசைவு கொள்ளும் பொருட்கள் என்று கூறுவார்கள், எடுத்துக்காட்டிற்கு களிமண்ணை கூறலாம் அதுவும் ஒரு பிசைவு கொள்ளும் பொருள் தான். ஆனால் சிக்கல் என்னவெனில் களிமண் அழியும் ஆனால் பிளாஸ்டிக் அழியாது. ஆனால் இப்போது அதற்கான தீர்வு ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன?

தீர்வை கண்டுபிடிக்க முயற்சி!

தீர்வை கண்டுபிடிக்க முயற்சி!

உலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிளாஸ்டிக்குகள் மிகவும் ஆபத்தானவைகள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ், அரசாங்கங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது தடை போன்ற சட்டங்களை கொண்டு வந்த நிலைப்பாட்டில், விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அது தற்போது வெற்றி கண்டுள்ளது - அதுவும் புழுக்களின் உதவியுடன்!

மிகவும் எதிர்பாராத கண்டுபிடிப்பு!

மிகவும் எதிர்பாராத கண்டுபிடிப்பு!

ஆம், நீங்கள் படித்தது சரி தான். புழுக்கள் தான் பிளாஸ்டிக்கை அழிக்க போகிறது, அதாவது அவைகளை தின்று தீர்க்க போகிறது. சில எதிர்பாராத நேர்மறையான முடிவுகளை வழங்கி உள்ள கண்டுபிடிப்பு மிகவும் எதிர்பாராத கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து நமது கிரகத்தை சுத்தம் செய்ய உள்ள அந்த சிறிய ஜீவராசிகளை பற்றியும், அவைகளின் சக்தியை பற்றியும் அலசுவோம்!

உண்மையில் மெழுகுப்புழு என்று அழைக்கப்படும்!

உண்மையில் மெழுகுப்புழு என்று அழைக்கப்படும்!

பிளாஸ்டிக் புதைகுழியை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் இந்த புழுக்கள் ஆனது உண்மையில் மெழுகுப்புழு என்று அழைக்கப்படும் கேட்டர்பில்லர்கள் ஆகும். இதற்கு முன்னர் வளர்ப்பு வகையை சார்ந்த பல்லிகளுக்கு உணவாகவும், சில ஆராய்ச்சிகளில் பாலூட்டிகளுக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த புழுக்கள், கிரகத்தின் அழிவை தடுக்க உதவும் என்கிற விடயமா சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பல துளைகளை கண்டு உள்ளார்!

பல துளைகளை கண்டு உள்ளார்!

அதாவது இந்த கம்பளிப்பூச்சிகளுக்குள், பிளாஸ்டிக் செரிமானம் அடைவது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. தேனீ வளர்ப்பவர் மற்றும் பேராசிரியர் ஆன பெட்ரிக்கா பெர்டோச்சினி (Federica Bertocchini) என்பவர் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் இந்த மெழுகு புழுக்களை போட்டு வைக்க, சிறுது நேரம் கழித்து அந்த பிளாஸ்டிக் பையில் பல துளைகளை கண்டு உள்ளார். இவ்வண்ணமே இந்த புழுக்களால் பிளாஸ்டிக்கை உண்ண முடியும் என்கிற உண்மை வெளிப்பட்டு உள்ளது.

வேதியியல் பிணைப்பை உடைக்கும் திறனை கொண்டுள்ளது!

வேதியியல் பிணைப்பை உடைக்கும் திறனை கொண்டுள்ளது!

பின்னர், சுமார் 100 மெழுகு புழுக்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பையைச் சேதப்படுத்தும் அடிப்படையின் கீழ் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 40 நிமிடங்களுக்கு பிளாஸ்டிக் பையில் ஓட்டைகள் விழ தொடங்கின, சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு பிளாஸ்டிக்கின் வெகுஜனத்தில் 92 மில்லிகிராம் குறைந்து இருந்தது. இந்த ஆராய்ச்சியின் கீழ், மெழுகு புழுக்கள் உண்மையில் பிளாஸ்டிக்கின் வேதியியல் பிணைப்பை உடைக்கும் திறனை கொண்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை!

உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை!

ஆராய்ச்சியாளர்கள் இந்த புழுக்களை தனிமைப்படுத்தி, இந்த என்ஸைம் என்னவென்பதையும், இதன் செரிமானம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் புரிந்து கொண்டதற்கு பிறகு, பிளாஸ்டிக் எனும் மாபெரும் உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலைக்கு நாம் நெருக்கமாவோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Scientists Discovered Worms That Can Save Our Planet by Eating Plastic : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X