செவ்வாயில் உறைந்த நிலையில் ஏராளமான தண்ணீர்! இதோ நாசாவின் ஆதராம்.! வீடியோ.!
பூமியை போல இல்லாமல், இக்கிரகத்தின் சாய்வு மற்றும் கோளப்பாதையின் விளைவாக இந்த பனிப்பாறைகள் உருவாகியுள்ளதாக முடிவுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த கண்டுபிடிப்பு கூறியுள்ளது.
செவ்வாயின் மேற்பரப்பில் புதைந்துள்ள பிரம்மாண்ட பனிக்கட்டி வடிவிலான தண்ணீர் படுகையானது, மறைந்துள்ள துருவ பனிப்பாறைகளுக்கு சான்றுகள் என விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் செவ்வாய் புலனாய்வு விண்கலன்(Mars Reconnaissance Orbiter) மூலம் பெறப்பட்ட ராடார் தகவல்களின்படி செவ்வாயின் தரைப்பரப்பில் மண்ணிற்கு கீழே புதைந்துள்ள பனிப்பாறைகள் அக்கிரகத்தில் சுமார் ஒரு மைல் ஆழத்திற்கு நீண்டுள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

பனிப்பாறைகள்
பூமியை போல இல்லாமல், இக்கிரகத்தின் சாய்வு மற்றும் கோளப்பாதையின் விளைவாக இந்த பனிப்பாறைகள் உருவாகியுள்ளதாக முடிவுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்த கண்டுபிடிப்பு கூறியுள்ளது.

சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீரை கொண்டிருக்கும் என்கின்றனர்
செவ்வாயின் தரைப்பரப்பின் மண்ணிற்கு கீழே படிந்துள்ள பனிக்கட்டியின் அளவு மிக பிரம்மாண்டமானது என சொல்லும் விஞ்ஞானிகள், அவை உருகியிருந்தால் அந்த திரவமானது அக்கிரகம் முழுவதும் சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீரை கொண்டிருக்கும் என்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம்
'நாங்கள் இவ்வளவு அதிகமான பனிக்கட்டி வடிவிலான தண்ணீரை கண்டுபிடிப்போம் என எதிர்பார்க்கவில்லை. இவை துருவ பனிப்பாறைகளுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் உள்ள மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் ஆகும்' என்று கூறுகிறார் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜியோபிசிக்ஸ் நிறுவன பட்டதாரி ஆராய்ச்சி உதவியாளராகவும், புதிய ஆய்வின் முதன்மை எழுத்தாளராகவும் இருக்கும் ஸ்டீஃபனோ நெரோசி.
கடந்த பனிக்கட்டி காலங்களில் செவ்வாயில் உருவான பனிப்பகுதிகளின் அடுக்குகள், சூரியனின் கதிர்வீச்சிலிருந்தும் வெப்பமான காலங்களிலும் மணல் பரப்பால் பாதுகாக்கப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள்
விஞ்ஞானிகள் செவ்வாயின் கடந்தகால பனிப்பொழிவு நடவடிக்கைகளை நீண்ட காலமாக ஆய்வு செய்திருக்கையில்,அக்கிரகம் சாய்ந்திருப்பதும், நிலையுள்ளாமல் நகர்வதும் அல்லது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேலாக சூரியனை விட்டு தள்ளியிருப்பதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என கண்டறியப்பட்டுள்ளன. இவை இல்லையெனில் பனிப்பகுதிகள் முற்றிலும் செவ்வாயிலிருந்து மறைந்துபோயிருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக அந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள் கிரகத்தின் மேற்பரப்பின் உள்ளே இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு வயதுள்ளவை
ஆச்சர்யமளிக்கும் விதமாக இந்த புதைக்கப்பட்ட துருவப் பனிப்பாறைகளில் மறைந்திருந்த மொத்த நீரின் அளவானது, செவ்வாயின் அட்சரேகைகளில் காணப்படுகிற பனிப்பாறைகள் மற்றும் புதைக்கப்பட்ட பனி அடுக்குகளில் உள்ள மொத்த தண்ணீருக்கு இணையானது மற்றும் இவையனைத்தும் கிட்டத்தட்ட ஒரு வயதுள்ளவை என நெரோஸ்ஸி கூறுகிறார்.
பூமியில் உயர்வாழ்வது போல அங்கு சாத்தியமா ?
செவ்வாய் தோற்றம் இன்று எப்படி இருக்கின்றது என்பது மட்டுமில்லாமல், கடந்த காலங்களில் அந்த சிவப்பு கிரகத்தின் பருவநிலை எப்படி இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, இன்று பூமியில் உயர்வாழ்வது போல அங்கு சாத்தியமா என தெரிந்துகொள்ள முயல்கின்றனர்.
நமக்கு செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருக்க வேண்டும் என்றால், துருவங்களில் உள்ள தண்ணீர் மற்றும் உலகளாவிய அளவில் கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் நெரோஸ்ஸி.

மனிதர்களை விண்வெளியில் குடியமர்த்துவதற்காற வாய்ப்புகள்..
நாம் உயிர் வாழ்வதற்கான அனைத்து சரியான நிலைகளையும் கொண்டிருந்தாலும் , பெரும்பாலான தண்ணீர் துருவங்களில் பூட்டப்பட்டிருந்தால், பூமத்திய ரேகைக்கு அருகே போதுமான திரவ நீரை பெறுவது கடினமாக இருக்கும் என்கிறார்.
மனிதர்களை விண்வெளியில் குடியமர்த்துவதற்காற வாய்ப்புகள் இன்னும் தீவிரமாகி வருவதால், மனிதர்களுக்கான செவ்வாயின் வசிக்கும் தன்மை குறித்து ஆராய்வது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக ஆர்வத்தைத் தருகிறது.
செவ்வாயில் மனிதர்களின் வாழ்விடத்திற்கான கருத்தை வடிவமைத்து 3D மாடலை தயாரித்த ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் நாசா $ 500,000 வெகுமதிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்-க்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முதன்முதலாக மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் விண்வெளிப் பயணத்திற்காக தீவிரமாக பணியாற்றிவருகிறது.


Click it and Unblock the Notifications