செவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்! கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...

ஆனால அந்த பனிக்கட்டியின் அம்சங்கள், அது எவ்வளவு சுத்தமானது? எவ்வளவு ஆழம் வரை உள்ளது?

|

செவ்வாயின் பரப்பிற்கு அடியில் மிகப்பெரிய அளவிலான தண்ணீர் பனிக்கட்டி வடிவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால அந்த பனிக்கட்டியின் அம்சங்கள், அது எவ்வளவு சுத்தமானது? எவ்வளவு ஆழம் வரை உள்ளது? என்ன வடிவில் உள்ளது என்பது இன்னும் புவியியல் வல்லுநர்களுக்கு மர்மமாகவே உள்ளது .

செவ்வாயின் அடிப்பரப்பில் பனிக்கட்டி வடிவில் சுத்தமான தண்ணீர்!

விண்வெளி பயணத்திற்கு திட்டமிடுபவர்களுக்கும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கு எதிர்கால பயணிகள், குறுகிய காலமாகவோ அல்லது நீண்டகாலம் அங்கேயே குடியேறவோ அதன் அடிப்பரப்பில் உள்ள பனிகட்டியை பற்றி புரிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனெனில் அடிப்பரப்பு பனிகட்டியைத்தான் குடிநீர், பயிர் விளைக்க அல்லது அதை ஹைட்ரஜனாக மாற்றிஎரிபொருளாக பயன்படுத்த முடியும். பிரச்சனை என்னவெனில் தூசு, பாறைகள் மற்றும் தரைபரப்பில் உள்ள மற்ற சேர்மங்கள் பனிக்கட்டிகளை ஆராய்வதை கடினமாக்குகின்றன.

மார்ஸ்

மார்ஸ்

மார்ஸ் லேண்டர்களால் அந்த கிரகத்தின் பரப்பில் சில சென்டிமீட்டர்கள் மட்டுமே துளையிடவோ அல்லது தோண்டவோ முடியும் மற்றும் ரேடார்களால் தரைபரப்பிற்கு 10 மீட்டர் ஆழத்தில் என்ன உள்ளது என்பதை மட்டுமே ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கமுடியும். ஆனால் புவியியல் அடிப்படையில் இந்த பனிக்கட்டி 20 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் விரிவாக ஆராயமுடியவில்லை.

ரேடார்கள்

ரேடார்கள்

ரேடார்கள் மற்றும் துளையிடும் ரோபோட்கள் போலில்லாமல்,அதிர்ஷ்டவசமாக லேண்ட் இரோட்கள் காலப்போக்கில் தூசு போன்றவற்றால் மூடப்படாத நமது நேரடி பார்வையில் இருக்கும் செவ்வாயில் மேற்பரப்பு அடுக்கை கண்டறிந்து அங்கு பனிக்கட்டிகள் படிந்துள்ளதா என்பதை ஆராயவல்லது.

நாசா

நாசா

தற்போது ஆராய்ச்சியாளர்கள் அதுபோன்ற பகுதி ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். நாசாவின் செவ்வாய் புலனாய்வு விண்கலத்தில் (Mars Reconnaissance Orbiter) உள்ள ஹைரைஸ் எனும் சக்திவாய்ந்த கேமரா மூலம் இதுபோன்ற பலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

100 மீட்டர் ஆழம் வரை

100 மீட்டர் ஆழம் வரை

மண்அரிப்பால் மேற்பரப்பு விலகிய மிகப்பெரிய பரப்பின் அடியில் உள்ள பனிக்கட்டி படலத்தை செவ்வாயின் 8 பகுதிகளில் கண்டறிந்துள்ளதாக புவியியல் வல்லுநர் கோலின் டுன்டாஸ் விரிவாக விளக்கியுள்ளார். எவ்வளவு தண்ணீர் கண்டறியப்பட்டது (செவ்வாயின் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஏராளமான பனிக்கட்டிகள் இருப்பதில் மர்மம் ஏதுமில்லை) என்பதை மட்டும் கூறாமல், எப்படி அதை வெளியே எடுப்பது என்பதையும் விளக்கியுள்ளார்.இந்த பனிக்கட்டிகள் ஒரு மீட்டர் ஆழத்தில் இருந்து 100 மீட்டர் ஆழம் வரை செவ்வாயின் பரப்பில் பரவியுள்ளது. எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடவில்லை எனினும், பனிக்கட்டிகள் கண்டறியப்பட்டுள்ள மற்ற பகுதிகளை விட இங்கு அதிகளவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பனிக்கட்டிகள் மிகவும் தூய்மையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உயிர்வாழ இது மிகவும் அவசியம்

உயிர்வாழ இது மிகவும் அவசியம்

விண்வெளியில் உள்ள இந்த வளங்களை பயன்படுத்துவதை "முன்பிருந்த வள பயன்பாடு"(in-situ resource utilization) என குறிப்பிடும் நாசா, விண்வெளியில் உயிர்வாழ இது மிகவும் அவசியம் என கருதுகிறது.

தூய்மையானதாக இல்லை

தூய்மையானதாக இல்லை

தற்போது கண்டறியப்பட்டுள்ள பனிக்கட்டிகள் மிகவும் தூய்மையானதாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக, சப்லிமிடேசன் என்னும் செயல்முறையின் மூலமாக பனிக்கட்டிகள் சிதைவடைந்து தண்ணீராக சுற்றுப்புற சூழலுடன் கலக்கிறது. இந்த பனிக்கட்டி பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணமாக கடினமாக பகுதிகளில படிந்த பனி,பனிக்கட்டியாக மாறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 விஞ்ஞானி ரிச்சர்ட் ஜூரிக்,

விஞ்ஞானி ரிச்சர்ட் ஜூரிக், "அல்பெடா

"பொதுவாக செவ்வாயில் பிரகாசமாக ஏதேனும் பார்த்தால் அது பனிக்கட்டியாக இருக்கும்" என கூறும் நாசாவின் செவ்வாய் திட்ட அலுவலகத்தின் தலைமை விஞ்ஞானி ரிச்சர்ட் ஜூரிக், "அல்பெடா கணக்கீடுகளின் படி இந்த பகுதிகளில் மிகவும் பிரகாசமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோமீட்டர் கணக்கீடுகளும் இந்த பகுதி பனிக்கட்டிகள் தான் என்றும், பனிகட்டி மண் இல்லை என்றும் உறுதிசெய்துள்ளது" என்பதையும் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
SCIENTISTS DISCOVER CLEAN WATER ICE JUST BELOW MARS' SURFACE: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X