கொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது! பழங்கால கிராமம் கண்டுபிடிப்பு..

|

இந்த வாரம் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் வருவதற்கு முன்பு வட அமெரிக்காவில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் ஒரு தொல்பொருள் ஆய்வின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

வடமேற்கு புளோரிடாவின் கடற்கரையை ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்து, கி.பி 900 முதல் 1200 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற குடியேற்றத்திற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

200 முதல் 300 பேர் அப்பகுதியில் வசித்திருக்கலாம்

200 முதல் 300 பேர் அப்பகுதியில் வசித்திருக்கலாம் எனவும், அந்த காலகட்டத்தில் மிசிசிப்பியன் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த சிப்பிகளில் இருந்து மணிகள் மற்றும் அலங்கார ஆபரணங்களை உருவாக்கும் பணியை அவர்கள் செய்திருக்கலாம் என நம்பும்படியான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்! விலை என்ன தெரியுமா?

சிடார் கீஸ்

சிடார் கீஸ் வனவிலங்கு புகலிடத்திற்கு வெளியே புளோரிடாவின் வடமேற்கு கடற்கரையில் தம்பாவிற்கும் தல்லஹஸ்ஸிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ற, ராலே தீவில் இந்த குடியேற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்குடியேற்றத்தைக் கண்டுபிடித்த ட்ரோனில் லிடார்(LiDAR) அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒளி கதிர்களை அனுப்பும் லிடார், பின்னர் அந்த கதிர்கள் எவ்வாறு புவிபரப்பில் இருந்து மீண்டும் பிரதிபலிக்கப்படுகின்றன என்பதற்கான வேறுபாடுகளை அளவிட்டு, அப்பகுதியின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கும்.

 கலைப்பொருட்கள்

புளோரிடா பல்கலைக்கழக மானுடவியலாளர் டெர்ரி பார்பர் தலைமையிலான குழு, குறைந்தது 37 குடியிருப்பு இடங்களை அடையாளம் கண்டுள்ள நிலையில், இவையாவும் லோட்பியரிங் கட்டுமானத்தை உணர்த்துகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதிக்கு வந்தபோது, ​​பரந்த அளவிலான கருவிகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் இரண்டு அடி முதல் இரண்டரை அடி வரை மேற்பரப்புக்கு கீழே புதையுண்டிருப்பதைக் கண்டார்கள்.

 சமூகப் பொருளாக

அவற்றில் மட்பாண்ட துண்டுகள், கரி மற்றும் பயிற்சிகளின் எச்சங்கள் மற்றும் கல் மெருகூட்டல் கருவிகள் ஆகியவை அடங்கியிருந்தன. அவையாவும் மணிகள் மற்றும் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பலவிதமான அலங்கார பொருட்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

"கடல் சிப்பிகள் பெரிதும் தேவைப்படும் சமூகப் பொருளாக மாறத் தொடங்கியிருந்த நேரத்தில் அதன் மூலப்பொருளின் மூல இடம் தான் இந்த குடியேற்றப்பகுதி" என்கிறார் பார்பர்.

மணிகள்

சமூக ரீதியாக உற்பத்தி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதில் எங்களுக்கு வழிகாட்டும் வகையில் சமமான சுவாரஸ்யமான கட்டிடக்கலை கொண்ட ஒரு தளத்தில், மணிகள் தயாரித்ததற்கான வலுவான சான்றுகள் எங்களிடம் உள்ளன என்பது இந்த இடத்தை மிகவும் சிறப்பானதாக்குகிறது. இப்போதைக்கு இது போன்ற இந்த ஒரு இடத்தை மட்டுமோ நாம் அறிவோம் என்கிறார் அவர்.

மணிகள் பெரும்பாலும் அப்பகுதியில் பொதுவாக கிடைக்கும் நடுத்தர மற்றும் பெரிய லைட்னிங் வில்க்ஸ்-ன் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

மண் மேடுகளின் விரிவான

பாசிமணிகள், அலங்கார கவர்கள், கோப்பைகள் மற்றும் ஆடைகளுக்கான அலங்காரங்களை தயாரிக்க இந்த சிப்பிகள் பயன்படுத்தப்பட்டன. அவை இல்லினாய்ஸில் உள்ள கஹோகியா வரை வடக்கே அமெரிக்கா முழுவதும் காணப்படுகின்றன.

மண் மேடுகளின் விரிவான அமைப்பைக் கொண்டுள்ளது கஹோகியா பகுதி மிசிசிப்பியன் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பண்டைய நகரத்தின் தளம் என்று நம்பப்படுகிறது .

உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்!

சிப்பி பொருள்களை

மணிகள் மற்றும் சிப்பிகள் மூலம் பெறப்பட்ட பிற பொருட்களின் சரியான முக்கியத்துவம் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் பார்பர் இதுகுறித்து கூறுகையில், "இந்த சிப்பி பொருள்களில் சிலவற்றை உருவாக்கும் செயல்முறையானது ஆன்மீக மற்றும் மத அடிப்படையில் கொண்டு சென்றது. அதாவது அதை தயாரிக்கும் நபர் ஒரு நிபுணர் அல்லது பாதிரியாராக இருந்திருக்க வேண்டும்" என்கிறார்.

‘சிப்பி பொருள்களை உருவாக்கும் செயல்முறையை கட்டுப்படுத்துவதன் மூலம், உயரடுக்கினர் மணிகள் மற்றும் அவை தயாரிக்கும் பிற பொருள்களைச் சுற்றியுள்ள சில அர்த்தங்களையும் கதைகளையும் கட்டுப்படுத்த முடியும்.'

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists discover an ancient Florida village predates Columbus hundreds years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X