அதிசயம்: புதைபடிமத்தில் இருந்து படைக்கப்பட்ட ரோபோ விலங்கு.!
படிமத்தில் கிடைத்த விலங்கானது ஒரு நான்கு கால் பிராணி. அது டைனோசர்கள் இந்த பூமியில் தோன்றிய காலத்திற்கு முன்பே உயிர் வாழ்ந்துள்ள ஒரு மிகவும் தொன்மையான விலங்கு.
பழங்காலங்களை பற்றி அறிவதற்கு புதைப்படிமங்களின் பங்கு அறிவியலில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பண்டையக்காலத்தில் இயற்கை பேரழிவு நடந்து, அச்சமயத்தில் உயிரினங்கள் அழிந்த போது, சிலவற்றின் உடல்கள் அழியாமல் கற்குழம்பால், கற்படிவங்களாக மாறியது, அவையே புதைப்படிமங்கள் என்றைக்கப் படுகின்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற, 290 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு புதைப்படிவத்திலிருந்து அறிவியலார்கள் ஒரு ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள் என்றல் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழத்தில் பணியாற்றி வரும் ஜான் யாகட்டுரா என்ற உயிரியல் வல்லுநர் 290 வருடங்களுக்கு முந்தைய படிமங்கள் மற்றும் பண்டைக்கால தடங்களை உபயோகித்து பண்டைய கால விலங்கை பிரதிபலிக்கும் ஒரு இயந்திர விலங்கினை உருவாகியுள்ளார். அந்த இயந்திர விலங்கு பண்டை கால விலங்கு எவ்வாறு நகர்ந்ததோ அதே போலவே நகரவல்லது.
படிமத்தில் கிடைத்த விலங்கானது ஒரு நான்கு கால் பிராணி. அது டைனோசர்கள் இந்த பூமியில் தோன்றிய காலத்திற்கு முன்பே உயிர் வாழ்ந்துள்ள ஒரு மிகவும் தொன்மையான விலங்கு. இந்த விலங்கு ஒரு ஸ்டெம் அமினோட் என அறிவியலாளர்களால் நம்பப்படுகிறது. ஸ்டெம் அமினோட் என்பது உலகில் முதலில் தோன்றிய முதுகுத்தண்டு உள்ள முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் ஒரு உயிரினம் ஆகும். இவையே பின்நாட்களில் உருவான பாலூட்டிகள்,ஊர்வன மற்றும் பறவைகளுக்கு முன்னோடியாக இருந்துள்ளன.

அறிவியலாளர்களால் கருத்துப்படி, ஆம்பிபியஸ் எனப்படும் நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரனங்கள் முதன்முதலில் பூமியின் நிலப்பரப்பிற்கு 350 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வந்திருக்கக்கூடும் என நம்புகின்றனர். அதேசமயத்தில் உலகின் முதல் முதுகுத்தண்டு உள்ள உயிரினம் சுமார் 310 மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே பூமியில் உருவாகிவிட்டது.
அறிவியலாளர் யாகட்டுரா, தன ஆராய்ச்சிக்கு கிடைத்த கிடைத்த ஓராபேட்ஸ் பாப்ஸ்டி (Orabates pabsti) என்ற படிமத்தை "அழகாக பாதுகாக்கப்பட்ட மற்றும் தெளிவான நிலையில் உள்ள எலும்புக்கூடு" என்று விவரிக்கிறார். படிமத்திலிருந்து இயந்திர விலங்கை உருவாக்க யாகட்டுரா-விற்கு ஒரு இயந்திர வல்லுனரின் உதவி தேவைப்பட்டது. அதற்க்காக உதவிக்கு வந்தவர் சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள லாசன்னே நகரத்தில் இயங்கி வரும் சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த காமிலோ மெலோ என்பவர் ஆவார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய இயந்திர விலங்கானது பண்டை கால விலங்கின் அசைவுகளை துல்லியமாக செய்து காட்டியது. இவர்களின் இந்த ஆராச்சி பற்றிய முடிவுகள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
மேலே விவரிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கு பின்பு, ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, பண்டைக்கால உயிரினத்தின் ஒரு முழு நீள மாதிரியை செய்தது. இந்த மாதிரி செய்த அறிஞர்கள் குழுவில் ஒருவரான யாகட்டுரா "நாங்கள் மிகவும் கவனமாக நேர்த்தியாக பண்டைக்கால உயிரினத்தின் ஒவ்வொரு எலும்புகளையும் வடிவமைத்து உள்ளோம்" என்று கூறினார். வடிவமைப்பதோடு நில்லாமல், ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த மாதிரியை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினர். அவர்கள் செய்த மாதிரியை, பண்டைக்கால மிருகத்தின் பண்புக்கூறுகளுடன் ஒப்பிட்டு பார்த்து மாதிரியின் அசைவுகளை துல்லியமாக சரி செய்து முடித்தனர்.
மேல சொன்ன அணைத்து நடைமுறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் குழு மறுபடியும் சிறிது பெரிதுபடுத்தப்பட்ட மிருக மாதிரியில் செய்து பார்த்தனர். அந்த மாதிரிக்கு அவர்கள் இட்ட பெயர் ஒரோபோட் (OroBOT) என்பதாகும். இந்த தானியங்கின் விலங்கில் நிறைய மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமதுஇல்லாமல், விலங்கினை உருவாக்க தேவைப்பட்ட மோட்டாருக்கு தேவையான அனைத்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு உதிரிபாகங்கள் எல்லாமுமே 3D தொழில்நோட்பத்தை பயன்படுத்து உருவாக்கப்பட்டவை. இயந்திர வல்லுநர் மெலோ "இந்த விலங்கு மாதிரி எங்களுக்கு நிழல் உலக இயந்திரவியலை, புவி ஈர்ப்பு மற்றும் மற்றும் உராய்வு விசையின் மூலம் அறிந்துகொள்வற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
இந்த இயந்திர மாதிரி விலங்கு அறிவியல் அறிஞர்களுக்கு, பண்டைய காலத்தை சேர்ந்த பல தகவல்களை அறிவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக குறிபிடிக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில், வரலாற்றிக்கு முந்தைய நில வாழ் உயிரினங்களை தற்பொழுது நம்பப்படுவதை விட சிறந்த முறையில் இடம் பெயரும் திறன் பெற்றிருந்ததாக அறிவியலாளர்கள் குழு ஆணித்தரமாக நம்பியது. பண்டைய கால விலங்கானது ஓரளவிற்கு நிமிர்ந்து நடந்தது, அதே சமயம் அது தானாக காலை ஊன்றி நடக்கும் போது அதன் அடிவயிறோ வாலோ தரையில் படாமல் இருந்திருக்கும் என மெலோ கூறுகிறார்.

அமெரிக்காவின் சான் பெர்னார்ட்டினோவில் உள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் ஸ்டூவர்ட் சுமிகா என்ற ஒரு தொல்லுயிரியலாளர் மற்றும் ஓராபேட்ஸ் புதைபடிவ ஆராய்ச்சி குழுவின் ஒரு உறுப்பினர் இந்த ஆராய்ச்சியை "அற்புதமான ஆய்வு" என்று வியந்தார். இந்த ஆராய்ச்சியில் இவர் பங்குகொள்ளவில்லை, எனினும் "இந்த ஆராய்ச்சி நீண்ட காலத்திற்கு முன்பு பண்டை காலத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இது ஒரு கால இயந்திரம் அல்ல, ஆனால் யாகட்டுரா-வும் அவரின் சகா ஊழியர்களும் நமக்கு பண்டை காலத்தை பற்றி அறிய ஒரு தந்திர உத்தியை கற்று கொடுத்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்காக உருவாக்கப்பட்ட அணுகுமுறையை மற்ற விஞ்ஞானிகளால் அவர்களது வேலைகளில் பயன்படுத்தப்படலாம், மேலும் இந்த மாதிரிகளை சிறிது மேம்படுத்துவதன் மூலம் பரிணாம வளர்ச்சியை பற்றி சிறந்த முறையில் தெரிந்து கொள்ள முடியும். அதாவது எவ்வாறு உயிரினங்கள் பறக்க ஆரம்பித்தன, எவ்வாறு உணவை விலங்கினங்கள் உட்கொள்ள ஆரம்பித்தன போன்ற பல கேள்விகளுக்கு, ஆராய்ச்சியின் முடிவில் விடை கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications