Home
Scitech

அண்டார்டிகா ஆய்வில் சிக்கியது பெரிய மர்மம்: கிளம்பியது சர்ச்சை.!

இந்த அடுக்கானது தற்போது அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் அதிகளிவில் மிதந்துசென்று பரந்த பெருங்கடலில் சேர்வதை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.

அண்டார்டிக்காவின் உறைந்த நிலப்பரப்பிற்கு கீழே வெகு ஆழத்தில், இக்கண்டத்தின் மிகப்பெரிய பனிஅடுக்கை சுற்றி உருகும் அமைப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழங்கால டெக்டானிக் தட்டுகளின் கட்டமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 பிரம்மாண்ட ரோஸ் அடுக்கு பனிப்பகுதி

பிரம்மாண்ட ரோஸ் அடுக்கு பனிப்பகுதி

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு மறைந்திருந்த இந்த பாறை, பிரம்மாண்ட ரோஸ் அடுக்கு பனிப்பகுதியைச் சுற்றி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த அடுக்கானது தற்போது அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் அதிகளிவில் மிதந்துசென்று பரந்த பெருங்கடலில் சேர்வதை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.

பாறையின் உயரம்

பாறையின் உயரம்

அண்டார்டிக்காவின் அடியில் உள்ள இப்பாறையின் உயரம், தடிமன், உட்கட்டமைப்பு காந்த மற்றும் புவியியல் சமிக்ஞைகளை அளவிடும் தனித்துவமான ஸ்கேனிங் அமைப்பான, ஐஸபாட் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு இந்த பாறையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் நன்றிதெரிவித்துள்ளனர்.

ஐஸ்பாட் கருவி

ஐஸ்பாட் கருவி

குறிப்பாக இந்த ஐஸ்பாட் கருவியானது செயற்கைகோள்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கான மீட்டர்கள்(ஆயிரக்கணக்கான அடிகள்) ஆழத்தில் பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள பாறை கட்டமைப்புகளை கண்டறியவல்லது.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளபடி, கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிகா இடையே உள்ள புவியியல் எல்லையில் இந்த கண்டத்தின் அடியில் ஒருபிரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது வெப்பமான நீரிலிருந்தும், ரோஸ் பனிப்பகுதியை மேலும் மேலும் உருகுவதில் இருந்தும் பாதுகாக்கிறது.

புவியியல் எல்லை

புவியியல் எல்லை

"இந்த புவியியல் எல்லையானது கிழக்கு அண்டார்க்டிக் பக்கத்தை மேற்கத்தியத்தை விட அதிக ஆழமாக உருவாக்கியதை நம்மால் காண முடியும். மேலும் இது கடல் நீர் பனி அடுக்கும் கீழ் சுற்றும் விதத்தை பாதிக்கிறது" என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல் மரபியல் நிபுணர் கிர்ஸ்டி டின்டோ.

 கடல் மட்டம் உயர்வதை மட்டுப்படுத்துகிறது

கடல் மட்டம் உயர்வதை மட்டுப்படுத்துகிறது

ரோஸ் பனி அடுக்குகள் அண்டார்டிக்காவின் அடித்தளத்தில் உள்ள பனிக்கட்டிகளில் சுமார் 20 சதவிகிதம் கடலில் கலப்பதை மெதுவாக்குவதன் மூலம் சுமார் 11.6 மீட்டர் அல்லது 38 அடி உலகளாவிய கடல் மட்டம் உயர்வதை மட்டுப்படுத்துகிறது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

புவியியல் தரவுகள்

புவியியல் தரவுகள்

சேகரிக்கப்பட்ட புவியியல் தரவுகள் மற்றும் கணினி அமைப்புகளை பயன்படுத்தி, இக்குழு டெக்டோனிக் பிளவானது வெப்பமான தண்ணீர் கடல்பரப்புடன் இணையும் நிலத்திற்கு அடியில் உள்ள பனி அடுக்குகளை அடைவதை தடுப்பது கண்டறியப்பட்டது.

கோடைகால வெப்பநிலை

கோடைகால வெப்பநிலை

அதே நேரத்தில், ரோஸ் பனி அடுக்கின் கீழ் உள்ள புவியியல் அமைப்புகள் கோடைகால மாதங்களில் அதன் விளிம்புகளில் உருகுவதை வேகப்படுத்தலாம். ஆனால் இங்கு உள்ள ரோஸ் அடுக்கு பாலினினா என்று திறந்த நீர் பகுதிக்கு நன்றி கூறவேண்டும்.

"அதிகரிக்கும் கோடைகால வெப்பநிலை காரணமாக கடல் பனி அல்லது மேகங்கள் குறைந்து இருப்பது போன்ற சூழ்நிலையில், ரோஸ் ஐஸ் அடுக்கு மற்றும் அதற்கு அருகில் உள்ள நிலப்பரப்பின் பனிஅடுக்குகள் வெகுஎளிதில் மாற்றமடைய வாய்ப்பிருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என இக்குழுவில் உறுப்பினராக உள்ள சியாட்டல் பூமி&விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர் லூரி பேட்மேன் கூறியுள்ளார்.

குறுகிய கால நிலைமைகள்

குறுகிய கால நிலைமைகள்

அண்டார்டிக்கா முழுவதும் எதிர்கால உருகும் அமைப்புகளை புரிந்து கொள்ளவும், அவை நமது கிரகத்தின் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை அறிந்துக்கொள்ளவும், உள்ளூர், குறுகிய கால நிலைமைகள் சுற்றிய தரவுகள் மட்டுமில்லாது விரிவான, நீண்டகால பரந்த வெப்ப நீர் சுழற்சியில் நடக்கும் மாற்றங்களின் தரவுகள் தேவைப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Scientists Detect an Ancient Rock Structure Hidden Beneath Antartica : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X