டெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.!

மனிதர்களால் உருவாக்கப்படும் ஆர்கானிங் சர்கியூட்களில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை புகுத்துவதில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முதன்மையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

|

மனித மூளையை போன்று இயங்கும் டி.என்.ஏ. சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் செயற்கை நியூரல் நெட்வொர்க் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். டெஸ்ட் டியூப் செயற்கை நுண்ணறிவு மூலம் கடினமான மெஷின் லெர்னிங் கணக்குகளையும் மிக சுலபமாக தீர்க்க முடியும். மேலும் இதனால் கையெழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்படும் ஆர்கானிங் சர்கியூட்களில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை புகுத்துவதில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முதன்மையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை கொண்டு முழுக்க எந்திர பாகங்கள் இல்லாமல், இயற்கையான பொருட்களை கொண்டு எதிர்காலத்தில் மனிதர்களை போன்ற ரோபோட்களை உருவாக்க முடியும்.

புதிய சாதனம்

புதிய சாதனம்

புதிய சாதனம் விரைவில் நினைவாற்றலை சொந்தமாக வளர்த்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கம் - மென்பொருள் மூலம் அறிவியல் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்ய வைப்பதே ஆகும். நியூரல் நெட்வொர்க்களை கொண்டு கணக்கிடுவது, விருப்பங்களை மேற்கொள்ள முடியும்.

கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் மிகவும் கடினமான சவாலை கால்டெக் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். எந்திரம் மூலம் செய்யப்பட்ட முதல் ஆய்வு இது என்பதோடு, டி.என்.ஏ. சார்ந்த முதல் நியூரல் நெட்வொர்க் திறமையை இது அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு நியூரல்

செயற்கை நுண்ணறிவு நியூரல்

மனிதர்களின் கையெழுத்துக்கள் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமாக மாறும் சூழ்நிலையில், மூளை வெவ்வேறு கணக்குகளின் மூலம் அவற்றை கண்டறிகிறது. மனிதர்களாலேயே மற்றவர்களின் குழப்பமான கையெழுத்துக்களை கண்டறிவது கடினமாக இருக்கும் நிலையில், மென்பொருள் செயல்திறனை செயற்கை நுண்ணறிவு நியூரல் நெட்வொர்க்களில் அவற்றை புகுத்தி சோதனை செய்வது சாதாரன ஒன்றாகவே இருக்கிறது.


இந்த நெட்வொர்க்களுக்கு எவ்வாறு எண்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும், குறிப்பாக கையெழுத்துக்கள் வேறுபடும் போதுஅவற்றின் நினைவாற்றலில் அதனை ஒப்பீடு செய்து எண்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

ஒருவரின் கையெழுத்தினை சரியாக அறிந்து கொண்டவது ரசாயன உணர்வுகளின் மூலம், மிகச்சரியாக வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ. அமைப்புகளின் மூலம் இந்த நியூரல் நெட்வொர்க் வெளிப்படுத்தும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் குழு செயல்படுத்தி காண்பித்தனர்.


உதாரணத்திற்கு ஏதேனும் நம்பரை வழங்கும் பட்சத்தில் நியூரல் நெட்வொர்க்கில் உள்ள ஸ்மார்ட் சூப் (Smart Soup) பல்வேறு உணர்வுகளை கடந்து இரண்டு சமிக்கைகளை வெளிப்படுத்தும். அதாவது 5-ம் எண்ணை குறிக்க மஞ்சள் நிறம் மற்றும் 9-ம் எண்ணை குறிக்க சிவப்பு அல்லது பச்சை நிறத்தை பிரதிபலிக்கும்.


டி.என்.ஏ.-க்களில் இருந்து பயோமாலிக்குலார் சர்கியூட்களை உருவாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளன. இவற்றை சரியாக பின்பற்றும் பட்சத்தில் இவை வழங்கும் முடிவுகள் சரியானதாக இருப்பதோடு, காலப்போக்கில் இவற்றின் நினைவாற்றலும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2011-ம் ஆண்டு

2011-ம் ஆண்டு

2011-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியாளர்கள் டி.என்.ஏ. மாலிக்குல் மூலம் மிக எளிமையான நான்கு தரவுகளை புரிந்து கொள்ளக்கூடிய முதல் செயற்கை நியூரல் நெட்வொர்க்-ஐ கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து ஜூலை 2018-இல் முதல் டெஸ்ட் டியூப் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கைகளால் எழுதப்பட்ட மெஷின் லெர்னிங் கணக்கை மிகச்சரியாக தீர்க்கும் வகையில் கண்டறிந்திருக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாலிகுலர் மெஷின்களில் உருவாக்கும் பணிகள் தற்சமயம் துவங்கப்பட்டு இருந்தாலும், இதற்கான தேவை ஏற்கனவே பன்மடங்கு அதிகரித்து விட்டது. தற்போதைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் மனிதர்களுக்கு கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த வசதியை தற்சமயம் வழங்கும் பட்சத்தில், செயற்கையான மாலிகுலர் மெஷன்கள் வரயிருக்கும் நூறு ஆண்டுகளில் பல்வேறு பலன்களை வழங்கும் என மூத்த ஆராய்ச்சியாளர் லுலு குயன் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
scientists-created-ai-inside-test-tube-with-dna-strands-form-memories : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X