விஞ்ஞானிகளையே குழப்பும் விசித்திர உருவங்கள்.. குதிரை தலை, பாம்பு, நீளமான கூந்தல்.. இதெப்படி சாத்தியம்?

|

விண்வெளி ஆராய்ச்சியாளர்களையே குழப்பம் அடைய செய்யும் அளவிற்கு சில விசித்திரமான உருவங்கள் புகைப்படமாக்கப்பட்டு உள்ளன.

அந்த வரிசையில், சமீபத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (European Space Agency) ஒரு விசித்திரமான விண்வெளி புகைப்படத்தை (Space Photo) வெளியிட்டு இருந்தது,.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது.. இதென்ன இயற்கையின் அதிசயமா? அல்லது கண்களை குழப்பும் விசித்திரமா என்றே நினைக்க தோன்றுகிறது!

அதென்ன புகைப்படம்? அதில் தெரியும் உருவம் என்ன? இதே போல விண்வெளியில் தோன்றிய குதிரை தலை, பாம்பு போன்ற உருவங்களை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்:

விசித்திரமான வடிவங்களும், உருவங்களும்!

விசித்திரமான வடிவங்களும், உருவங்களும்!

நம் கனவுகளில் வரக்கூடிய எதை விடவும், நமது பிரபஞ்சம் மிகவும் விசித்திரமானது மற்றும் அதிசயமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

உங்கள் கண்களுக்கு எட்டும் தொலைவிலான விண்வெளியையோ அல்லது உங்களால் பார்க்க முடியாத தூரத்தை "காட்சிப்படுத்தும்" விண்வெளி புகைப்படங்களையோ - நன்றாக உற்றுப்பாருங்கள்!

உங்களை அறியாமலேயே உங்களுடைய கற்பனை கண்கள் திறந்துகொள்ளும்; சில விசித்திரமான வடிவங்களையும், உருவங்களையும் காண தொடங்குவீர்கள். அப்படியான ஒரு விசித்திரமான உருவம் தான், அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது!

பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்த விசித்திரமான போட்டோ!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்த விசித்திரமான போட்டோ!

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (European Space Agency) சேர்ந்த ஐரோப்பிய தெற்கு ஆய்வகமானது (European Southern Observatory - ESO) சமீபத்தில் ஒரு "விசித்திரமான" விண்வெளி புகைப்படத்தை வெளியிட்டது.

அந்த புகைப்படத்தை "விசித்திரம்" என்று குறிப்பிட காரணம்: இந்த புகைப்படமானது பல்வேறு வகையான உருவங்களை / வடிவங்களை காட்சிப்படுத்துவது போல் உள்ளது!

நீளமான கூந்தலை கொண்ட ஒரு பெண்!

நீளமான கூந்தலை கொண்ட ஒரு பெண்!

அதாவது இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் "வடிவமானது" ஒரு சிலருக்கு - உயரமான கலங்கரை விளக்கம் போல் காட்சியளிக்கிறது; இன்னும் சிலருக்கு - ஒரு காட்ஸில்லா எழுந்து நிற்பது போல தெரிகிறது.

இன்னும் நன்றாக உற்றுப்பார்த்தால - மிகவும் நீளமான கூந்தலை கொண்ட ஒரு பெண் திரும்பி நின்றுகொண்டு, நட்சத்திரங்களை வேடிக்கை பார்ப்பது போல தெரிகிறது.

இப்படியாக, இந்த புகைப்படம் நம் கற்பனைகளை "தாறுமாறாக" பறக்க விடுகிறது என்றே கூறலாம்!

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

உண்மையில் அது என்னது?

உண்மையில் அது என்னது?

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படத்தில் இருப்பது கோன் நெபுலா (Cone Nebula) என்று அழைக்கப்படும் ஒரு டார்க் நெபுலா (Dark Nebula) ஆகும்.

இந்த புகைப்படத்தில் உள்ள கோன் நெபுலாவானது 2,500 ஒளி ஆண்டுகள் (Light years) தொலைவில் உள்ள மோனோசெரோஸ் (Monoceros) என்கிற விண்மீன் தொகுப்பில் உள்ள NGC 2264 என்று அழைக்கப்படும் ஒரு பெரிய காம்ப்ளெக்ஸின் ஒரு சிறிய பகுதியே ஆகும்!

நெபுலா (Nebula) என்றால் என்ன?

நெபுலா (Nebula) என்றால் என்ன?

மிகவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நெபுலா என்பது - நட்சத்திரங்களை உருவாக்கும் ஒரு பகுதி ஆகும்!

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - நெபுலா என்பது அயனைஸ்டு (Ionized), நியூட்ரல் (Neutral) அல்லது மாலிக்குலர் ஹைட்ரஜன் (Molecular Hydrogen) மற்றும் காஸ்மிக் டஸ்ட் (Cosmic Dust) ஆகியவற்றை கொண்டிருக்கும் இன்டர்ஸ்டெல்லார் மீடியமின் (Interstellar medium) ஒரு தனித்துவமான ஒளிரும் பகுதி ஆகும்!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

இந்த கோன் நெபுலா விசித்திரமாக இருக்க என்ன காரணம்?

இந்த கோன் நெபுலா விசித்திரமாக இருக்க என்ன காரணம்?

ஏனென்றால் - முன்னரே குறிப்பிட்டபடி - இதுவொரு டார்க் நெபுலா (Dark Nebula) ஆகும். பொதுவாகவே டார்க் நெபுலாக்கள் ஆனது மிகவும் தனித்துவமான வானியல் பொருள்களாக (astronomical objects) பார்க்கப்படுகின்றன.

ஏனென்றால் அவைகள் ஒளியை வெளியிடுவதில்லை; அதாவது டார்க் நெபுலாக்கள் ஆனது விண்வெளியில் பிரதிபலிக்காது. எப்போது மற்ற நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் (galaxies) ஆனது ஒரு டார்க் நெபுலாவிற்கு பின்னால் காணப்படுகிறதோ, அப்போது தான் அவைகள் வெளிப்படும்.

அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் இந்த கோன் நெபுலா விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கி உள்ளது.

குதிரை தலை நெபுலாவும், பாம்பு நெபுலாவும்!

குதிரை தலை நெபுலாவும், பாம்பு நெபுலாவும்!

கடந்த 1910-களில் இருந்து இதுவரையிலாக பல டார்க் நெபுலாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எட்வர்ட் எமர்சன் பர்னார்ட் என்கிற அமெரிக்க வானியலாளர், கடந்த 1919 ஆம் ஆண்டில் 182 டார்க் நெபுலாக்களை கொண்ட ஒரு பெரிய பட்டியலை உருவாக்கினார்.

அதன் பின்னர் நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில், நூற்றுக்கணக்கான டார்க் நெபுலாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து பட்டியலிடப்பட்ட வண்ணம் உள்ளன.

அவைகளில் குதிரை தலை போன்ற நெபுலா (The Horsehead Nebula) மற்றும் பாம்பு போன்ற நெபுலா (The Snake Nebula) மிகவும் பிரபலமான டார்க் நெபுலாக்கள் ஆகும்.

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

இந்த

இந்த "குதிரையும், பாம்பும்" எங்கே உள்ளது?

ஹார்ஸ் ஹெட் (Horse Head) அல்லது பர்னார்ட் 33 (Barnard 33) என்கிற டார்க் நெபுலாவானது அதன் குதிரைத் தலை போன்ற வடிவத்தினால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியக்க வைக்கிறது.

இது ஓரியன் தி ஹண்டர் (Orion the Hunter) என்கிற விண்மீன் மண்டலத்தின் (Constellation ) திசையில் அமைந்துள்ளது.

மறுகையில் உள்ள தி ஸ்நேக் நெபுலாவானது பர்னார்ட் 72 (Barnard 72) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் எஸ் (S) போன்ற வடிவமானது - விண்வெளியில் தவழும் ஒரு பாம்பை போலவே காட்சி அளிக்கிறது.

இந்த டார்க் நெபுலாவானது ஓபியுச்சஸ் தி சர்ப்பென்ட் பியரர் ( Ophiuchus the Serpent Bearer) என்கிற விண்மீன் தொகுப்பில் உள்ளது.

Photo Courtesy: ESA, ESO, NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Scientists Captured A Photo of Cone Nebula Looks Like a Women Standing and Watching The Stars

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X