நோய்களில் இருந்து மனித குலத்தை பாதுகாக்க விஞ்ஞானிகளின் அற்புத கண்டுபிடிப்பு!

|

கிருமிகள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் தூய்மையானதாக மேலோட்டமாக தோன்றும் பகுதிகள் கூட முழு அளவில் தூய்மையானது என்று கூற முடியாது. இந்த மேற்பரப்புகள் மனிதனின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும், நோய்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறும். இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் எளிதில் விரட்டக்கூடிய ஒரு சுய சுத்தம் செய்யும் வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இந்த வழைமுறை பாக்டீரியாக்கள் பரவுவதை முழுமையாக தடுக்கும் வல்லமை கொண்டது.

பாக்டீரியாக்களை விரட்டும்

பாக்டீரியாக்களை விரட்டும்

பிளாஸ்டிக் மேற்பரப்பால் ஆன இந்த வழிமுறையாக இருக்கும். இந்த மேற்பரப்பு நீர் மற்றும் பிற திரவங்களுடன் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை விரட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் நெகிழும் தன்மையுடையது என்பதால் இது சுருக்கப்பட்ட மற்றும் பலவிதமான பொருட்களில் பயன்படுத்தப்படலாம் குறிப்பாக தரை மற்றும் உயரமான இடங்களை கூறலாம்.

செல்போனில் அதிக கவனம்: புதுவை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.!செல்போனில் அதிக கவனம்: புதுவை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.!

தாமரை இலை போல் தண்ணீர் உறிஞ்சும்

தாமரை இலை போல் தண்ணீர் உறிஞ்சும்

தாமரை இலை போல் தண்ணீர் உறிஞ்சும் தன்மையில்லாத இந்த மேற்பரப்பு, பொறியாளர்கள் லெய்லா சோலிமானி, தோஹித் தீதர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. மேற்பரப்பில் சுருக்கங்களுடன் கூடிய நுண்ணிய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு பிற பாக்டீரியாக்கள் மேற்பரப்பில், ஒரு மூலக்கூறு மட்டத்தில் ஒட்டாமல் தடுக்கிறது.

மருத்துவமனைகளில் பெரிதும் பயன்படும்

மருத்துவமனைகளில் பெரிதும் பயன்படும்

இந்த பொருளின் திறன்களை சோதனை செய்ய பொறியாளர்கள் சோதனை செய்தபோது, மோசமான உயிரியல் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் தாக்க முடியாததை உறுதி செய்தனர். இது நுரையீரல் தொற்றுநோயை ஏற்படுத்தும் மருத்துவமனைகளில் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பாக்டீரியா எதிர்ப்பு

பாக்டீரியா எதிர்ப்பு

இதுகுறித்த ஆரம்ப ஆய்வு தற்போது முடிவடைந்துவிட்டதாகவும் இதனையடுத்து இந்த தயாரிப்பை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை பேராசிரியர் தீதர் முயன்று வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, "இந்த தொழில்நுட்பம் அனைத்து வகையான நிறுவன மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கலாம். ஆண்டிமைக்ரோபையல் எதிர்ப்பின் நெருக்கடியை உலகம் எதிர்கொள்வதால், இது பாக்டீரியா எதிர்ப்பு கருவிப்பெட்டி அனைவருக்கும் ஒரு முக்கிய அங்கமாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பிளாஸ்டிக் நமது சுற்றுப்புறங்களை கிருமி இல்லாமல் மாற்றுவதற்கு பெரிதும் உதவக்கூடும்

Best Mobiles in India

English summary
Scientist Builds Self-Cleaning Surface That Can Repel Bacteria And Save Us From Deadly Diseases: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X