Home
Scitech

தெருவில் நிர்வாணமாக ஓடி மக்களை அலறவிட்ட விஞ்ஞானி:செல்லூர் சிரிப்பு.!

ஆர்கிமிடீஸை அணுகிய மன்னன்: அதன் பின் விழா நெருங்கும் வேளையில் அரசல் புரசலாக மன்னன் காதுகளில் அது விழுந்தது. மக்கள் பேசி கொள்கிறார்கள் அந்த போற்கொல்லன் ஒரு ஏமாற்று பேர்விழி அவன் செய்து கொடுத்த கிரீடத்த

ஆர்கிமிடிஸ் தண்ணீர் தொட்டியில் இருந்து 'பப்பி ஷேம் ' கெட்டப் இல் "யூரேக்கா " என கத்தி கொண்டு ஓடியதும் அதை தொடர்ந்து அவர் நமக்கு கொடுத்த சென்ற" ஆர்கிமிடிஸ் கோட்பாடுகளும் " நாம் அறிந்த கதைகள் தான்.
ஆனால் அன்று அவர் அதை எப்படி கண்டு கொண்டார் ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதிகள் எப்படி பிறந்தன அவைகள் என்ன சொல்கின்றன என்பதை கொஞ்சம் விளக்கமாக இன்று பார்க்கலாம்.

தெருவில் நிர்வாணமாக ஓடி மக்களை அலறவிட்ட விஞ்ஞானி:செல்லூர் சிரிப்பு.!

முதலில் அந்த "யூரேக்கா " கதை..

ஆர்கிமிடிஸ் தனது பல புத்தகங்களில் தனது அறிவை எழுத்துக்களால் நமக்கு விட்டு சென்றுள்ளார் .ஆனால் அதில் எவற்றிலும் அவரது இந்த தண்ணீர் தொட்டி கதை இடம் பெற வில்லை. இன்று வரை மற்றவர்கள் தான் அதை பற்றி எழுதி இருக்கிறார்கள் அவர் ஒரு வார்த்தை கூட எழுத வில்லை. (ஒரு வேலை தான் உடை இல்லாமல் வீதியில் ஓடியதை எழுத அவருக்கு தயக்கமாக இருந்ததோ என்னமோ )
சரி கதைக்கு போவோம்.

கிரீடம் செய்ய உத்தரவு:

கிரீடம் செய்ய உத்தரவு:

Syracuse என்று ஒரு நகரம் (இன்று syracuse என்ற பெயரில் ஒரு நகரம் நியூயார்க்கில் இருக்கிறது அதை குழப்பி கொள்ள வேண்டாம் நாம் இப்போது பேசுவது கிரேக்க வரலாற்று நகரம் தற்போது உள்ள சிசிலி பகுதியில் இருந்த இடம் இது.

கி. மு 265 இல் அந்த நகரில் heiron என்று ஒரு மன்னன் சமீபத்தில் தான் பல போர்களை வென்று வெற்றி மாலை சூடி இருந்தான் .
தனது வெற்றிக்கு காரணமான கடவுளுக்கு ஒரு விழா எடுக்க திட்டமிட்டான் கடவுளுக்கு காணிக்கையாக ஒரு தங்க கிரீடத்தை செய்து அர்ப்பணிக்க நினைத்தான். எனவே ஒரு பொற்கொல்லனை அதற்க்கு நிர்ணயித்தான்.
குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொடுத்து கிரீடத்தை செய்ய சொன்னான் மன்னன். தனக்கு கொடுக்க பட்ட தங்கத்தை வைத்து அந்த பொற்கொல்லன் விழாவிற்கு குறிப்பிட்ட நாள் முன்பே அந்த கிரீடத்தை செய்து கொடுத்தான். அது ஒரு இலைகளை கொண்ட ஒரு மாலை போன்ற அமைப்பு உடைய கிரீடம்.
அதை வாங்கி பார்த்த மன்னன் தான் கொடுத்த அளவு எடை சரியாக இருப்பதை கவனித்தான். திருப்தியாக கொல்லனுக்கு நன்கொடைகள் கொடுத்து அனுப்பினான்.

ஆர்கிமிடீஸை அணுகிய மன்னன்:

ஆர்கிமிடீஸை அணுகிய மன்னன்:

அதன் பின் விழா நெருங்கும் வேளையில் அரசல் புரசலாக மன்னன் காதுகளில் அது விழுந்தது.
மக்கள் பேசி கொள்கிறார்கள் அந்த போற்கொல்லன் ஒரு ஏமாற்று பேர்விழி அவன் செய்து கொடுத்த கிரீடத்தில் தங்கத்துக்கு நிகரான அளவில் எடை உடைய வெள்ளியை கலந்து விட்டு கொஞ்சம் தங்கத்தை திருடி கொண்டான் என.

மன்னனுக்கு இது பெரிய பிரச்சனையாக இருந்தது . தான் நன்றியுடன் படைக்க விரும்பும் கிரீடம்.. அதை கடவுளுக்கு குறை உள்ளதையா கொடுக்க முடியும்? விழா நெருங்கும் நேரத்தில் அதில் நிஜமாக வெள்ளி கலக்க பட்டுள்ளதா அல்லது தான் கொடுத்த அளவு தங்கம் சரியாக பயன்படுத்த பட்டுள்ளதா என்பதை அந்த கிரீடத்தை உடைக்காமல் எப்படி கண்டு பிடிப்பது இதான் சவால்.
இதை தீர்க்க தனது நாட்டில் ஒரே ஒரு ஆளால் மட்டும் தான் முடியும் என்று அவருக்கு தெரியும்.
அது ஏற்கனவே பவுதீகம் ,கணிதம், இயந்திரவியல் போன்ற வற்றில் தனது
அறிவை நிரூபித்து இருந்த சிறந்த சிந்தனையாளர். தனது கசின் ஆர்கிமிடிஸ் தான். எனவே இந்த பொறுப்பை விரைந்து முடிக்குமாறு ஆர்கிமிடிசை பணித்தார்.

இதற்கான விடை தேடி தலையை பிய்த்து கொண்ட ஆர்கிமிடிஸ் கடைசியாக தண்ணீர் தொட்டியில் அதற்கான விடையை கண்டு பிடித்ததாக சொல்கிறார்கள் . என்ன உண்மை அவர் கண்டு கொண்டது என்பதை பார்ப்போம்.

தண்ணீர் தொட்டியில் ஆர்கிமிடிஸ்:

தண்ணீர் தொட்டியில் ஆர்கிமிடிஸ்:

அன்றைய தினம் குளிக்க சென்று தண்ணீர் தொட்டியில் மூழ்கினார் ஆர்கிமிடிஸ் . தான் மூழ்கியதும் தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறியதை கவனித்தார்.
பிறகு பாதி மூழ்கி பார்த்தார் அதற்கேற்றாற்போல் கொஞ்சம் நீர் வெளியேறுவதை பார்த்தார். இந்த வெளியேறும் நீரின் அளவு எதை பொறுத்து இருக்கிறது.. விடை எளிமையானது தனது பருமனை பொறுத்து. தான் அதிகம் பருமனாக இருந்தால் அதிக நீர் வெளியேறும் அல்லவா.

இது நமக்கே தெரிந்த எளிய உண்மை தான் ஆனால் இந்த உண்மை ஆர்கிமிடிஸ் தேடி கொண்டிருந்த கேள்விக்கு விடையை கொடுத்தது அவரை" யூரேக்கா " (நான் கண்டு பிடிச்சிட்டேன்...) என கத்தி கொண்டு நிர்வாணமாக வீதியில் ஓட வைத்தது.
அன்றைக்கு அவர் மனதில் குறித்து கொண்ட குறிப்பு.. " நீரில் முழுகும் பொருள் தனது கனளவுக்கு சமமான கனளவு கொண்ட நீரை தான் வெளியேற்றுகிறது "

கணித பார்வை:

கணித பார்வை:

இந்த சாதாரண உண்மை அவர் தேடி கொண்டிருந்த கேள்விக்கு விடையை கொடுத்தது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

எளிமையாக ஆர்கிமிடிஸ் க்கு பிடித்த கணித பாஷையில் சொல்வதானால் density = mass / volume என்று சொல்லாம்.
அதாவது ஒரு பொருளில் நீங்கள் கனளவை அதிகரிக்காமல் எடையை கூட்டினால் அதன் அடர்த்தி கூடி போகும் அதுவே எடையை கூட்டாமல் கனளவை கூட்டினால் அதன் அடர்த்தி குறைந்து போகும். இதை இன்னும் கொஞ்சம் எளிமையாக பார்ப்போம்.

அதாவது ஒரு 5 கிலோ இரும்பு எடுத்து கொண்டு அதன் கனளவை குறித்து கொள்வதாக வைத்து கொள்ளுங்கள் இப்பொது எடை குறைவான பொருள்.. உதாரணமாக அலுமினியம் ஒன்றை எடுத்து கொண்டு அதே 5 கிலோ எடை அளவு வெட்டி வைத்தால் அளவில் அதிக அளவு வெட்டி வைக்க வேண்டி வரும் அல்லவா .

அதன் கனளவு நிச்சயம் இரும்பை விட அதிகமாக தானே இருக்கும் . (அதாவது ஒரே அளவு எடை கொண்ட அலுமினியத்தை விட இரும்பு பார்க்க அளவில் சின்னதாக இருக்கும் ) இது புரிகிறது அல்லவா..

இப்போ ஆர்கிமிடிசை கொஞ்சம் பின் தொடர்வோம் அவர் தனது மன்னனுக்கு எதையோ செய்து காட்டி கொண்டு இருக்கிறார். அது என்ன என்பதை அருகே சென்று பார்ப்போம் வாருங்கள்.

தண்ணீர் சோதனை ஆர்கிமிடீஸ்:

தண்ணீர் சோதனை ஆர்கிமிடீஸ்:

சபைகள் கூடி இருந்த இடத்தில் மன்னனின் முன் நின்ற ஆர்கிமிடிஸ் இரண்டு பாத்திரங்கள் நிறைய நீரை கொண்டு வர சொன்னார்.
இரண்டு பாத்திரம் நிறைய நீர் கொண்டு வர பட்டது .. பிறகு
" மன்னா தாங்கள் அந்த பொற்கொல்லனுக்கு கொடுத்த அதே அளவு தங்கத்தை கொண்டு வர சொல்லுங்கள் " என்றார் அதுவும் வந்தது அதன் பின் "மன்னா இந்த தங்கத்தின் அளவே எடை உள்ள வெள்ளியை கொண்டு வர சொல்லுங்கள் " என்றார். அதுவும் வந்தது.

பிறகு ஒரே அளவுள்ள தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் நீர் உள்ள பாத்திரத்தில் தனி தனியே மூழ்க செய்தார். இப்பொது நமக்கு தெரியும் தங்கத்தை விட அதே அளவு எடை கொண்ட வெள்ளி அதிக கனளவு கொண்டதாக இருக்கும் எனவே அதிக நீரை வெளியேற்றி இருக்கும்.

நிருபணம் ஆனது:

நிருபணம் ஆனது:

இப்பொது மீண்டும் இரண்டு பாத்திரம் நிறைய நீர் கேட்டார் அதில் ஒன்றில் மன்னன் முன்பு கிரீடம் செய்ய கொடுத்த அதே அளவு எடை உள்ள தங்கத்தையும் இன்னொன்றில் அந்த க்ரீடத்தையும் மூழ்க செய்தார்.
"இரண்டிலும் ஒரே அளவு தங்கம் இருந்தால் ஒரே அளவு நீரை வெளியேற்றும் ஆனால் கிரீடத்தில் வெள்ளி கலக்க பட்டு இருந்தால் எடையில் இரண்டும் ஒரே அளவு இருந்தாலும் பருமனில் வெள்ளி கலக்க பட்ட கிரீடம் அதிக கனளவு கொண்டிருப்பதால் அதிகம் நீரை வெளியேற்றும் " என்றார்.
அன்றைக்கு அதில் வெள்ளி கலக்க பட்டது நிரூபிக்க பட்டு கொல்லன் தண்டிக்க பட்டான் என்கிறது கதை.

செல்லூர் ராஜூ சிரிப்பு:

செல்லூர் ராஜூ சிரிப்பு:

வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலை பயன்படுத்திய போது, நீங்களும் அந்த மாதிரி ஆர்கிமிடிஸ் மாதிரி ஓடுனீர்களாக என்று நிருபர்கள் நக்கலாக கேள்வி கேட்டத்திற்கு, அப்படி எல்லாம் ஓடுல தம்பி என்று தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கினார் விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ.

Best Mobiles in India

English summary
scientist archimedes explains water storage : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X