பூமியை அழிக்க காத்திருக்கும் அறிவியல் கண்டங்கள்.!!

By Meganathan
|

பிரபஞ்சம் தன்னுள் பூமி, நிலவு, சூரியன் மற்றும் சூரியனை சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், வின் துகள்கள், வெட்ட வெளி, கண்கெளுக்கு தெரியாத விண்மீன்களுயும் கடந்து வெகு தூரத்தில் இருக்கும் விண்மீன் குழுக்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இன்று நம்மிடையே பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்களை கொண்டு உலகெங்கிலும் இருக்கும் ஆய்வாளர்கள் முடிந்த வரை பிரபஞ்சம் குறித்து பல்வேறு பிரிவுகளில் ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு இவை குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு சேகரித்த தகவல்களில் பிரபஞ்சத்தின் 23 சதவீதம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கின்றது. நமக்கு தெரியும் அனைத்தும் ஈர்ப்பு இழுவைகள் மூலம் தான் தெரிகின்றது. நாம் கண்டுபிடித்த வரையில் 73 சதவீத பிரபஞ்சம் இருண்ட சக்தியால் நிறைந்துள்ளது. இதில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது.

இவ்வாறு நமக்கு தெரிந்த ஓரளவு தகவல்களை கொண்டு இந்த பிரபஞ்சம் கண் இமைக்கும் நேரத்தில் நம்மை ஒட்டு மொத்தமாக காலி செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. எவ்வாறு காலி செய்ய முடியும் என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

01

01

காமா கதிர் வெடிப்பு

02

02

நமது பிரபஞ்சம் முழுக்க கதிர் நிறைந்ததாகும். மின்சாரம் இல்லாமல் தொலைகாட்சி பெட்டி ஒன்றை ஆன் செய்தால் கதிர்களை கேட்கவும், பார்க்கவும் கூடிய அளவு கதிர்கள் இருக்கின்றது. இவைகளில் இருந்து நம்மை காப்பாது ஓசோன் படலம் ஆகும். இதோடு இல்லாமல் பல்வேறு இதர ஆபத்துகளில் இருந்தும் ஓசோன் படலம் நம்மை காத்து வருகின்றது.

03

03

நமக்கு அதிக தீங்கு விளைவிக்கும் கதிர்களில் காம்மா கதிர் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம். தினமும் ப்ளாக் ஹோல் தன்னுள் அதிகப்படியான மிகப்பெரிய நட்சத்திரங்களை ஈர்த்து கொள்கின்றது, இவ்வாறு நிகழும் போது ஒவ்வொரு நட்சத்திரமும் வெடித்து சிதறும்.

04

04

வெடித்து சிதறும் நட்சத்திரங்கள் சில நொடிகளிலேயே சூரியன் தன் வாழ்நாள் முழுக்க வெளியிடும் சக்தியை வெளியிடும். இது நமக்கு அருகாமையில் இருக்கும் பிரபஞ்சத்தை முழுமையாக பாதிக்க கூடும்.

05

05

இன்று நமக்கு அருகாமையில் இருக்கும் பிரபஞ்சங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒரு நாள் நாம் இதில் சிக்கினால் நம் நிலைமை காலி.

06

06

காந்த விண்மீன்

07

07

ஒரு நட்சத்திரம் அழியும் போது ஒரு நியூட்ரான் விண்மீனை விட்டு செல்லும், இது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருக்கும். சில சமயங்களில் நட்சத்திரம் அளவுக்கு மீறி பெரியதாக இருக்கும் பட்சத்தில் இது காந்த விண்மீனை விட்டு செல்லும்.

08

08

பொதுவாக காந்த விண்மீன்கள் பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிர காந்த சக்தியைக் கொண்டவை. இவை தேய்வடைந்து சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சு அதாவது எக்ஸ்ரே மற்றும் காமா கதிர்களாக மாறுகின்றன.

09

09

இதுவரை பிரபஞ்சத்தில் மொத்தம் 21 காந்த விண்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கண் இமைக்கும் நேரத்தில் பூமியை அழிக்கும் திறன் கொண்டவையாகும்.

10

10

சூரிய வெடிப்பு

11

11

சூரியன் ஒரு நாள் நிச்சயம் வெடிக்கலாம். தற்சமயம் இருப்பதில் மிகப்பெரிய அணு உலையாக கருதப்படும் சூரியனில் இருந்து நமக்கு வெப்பம் மற்றும் வெளிச்சம் போன்றவைகளை பெற்று வருகின்றோம்.

12

12

மிகப்பெரிய தீ உருண்டையாக திகழும் சூரியன் நாம் நினைக்காத நேரத்தில் அளவுக்கு அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தி நம்மை முழுமையாக அழிக்கலாம்.

13

13

சூரிய எரிப்பு சகஜமான ஒன்று தான் ஆனால் சூரிய புயல்கள் சகஜமானவை கிடையாது. முன்னதாக 1859 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. சூரிய புயல்களானது மிகப்பெரிய சூரிய பந்துகளை வானம் முழுக்க கொண்டிருந்தது.

14

14

இந்த சூரிய புயல் 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறலாம் என நாசா தரப்பில் கூறப்படுகின்றது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் வானத்தில் பறக்கும் விமானங்கள் கீழே விழலாம், தகவல் பரிமாற்றம் துண்டிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறலாம்.

15

15

இருண்ட சக்தி

16

16

தற்சமயம் இருப்பதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இருண்ட சக்தி (டார்க் எனர்ஜி) ஆகும். இந்த இருண்ட சக்தியானது பிரபஞ்சத்தின் பின்புறம் இருப்பதாக பல காலமாக நம்பப்படுகின்றது.

17

17

இருண்ட சக்தியின் விரிவாக்கம் தற்சமயம் இருப்பதற்கு மாறாக தலைகீழாகி விட்டால் ஒட்டு மொத்த உலகமே சிக்கலாகிவிடும். இதனை பலூன் மூலம் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

18

18

அதாவது ஒரு பலூனினை ஊதும் பொழுது ஒன்று அதில் இருந்து காற்று வெளியே வர வேண்டும், அல்லது பலூன் அதிகளவு காற்றை பொறுக்க முடியாமல் வெடித்து சிதற வேண்டும். இருண்ட சக்தி விரிவாக்கம் மாறினால் பூமியின் நிலைமையும் இது தான் என்கின்றனர்.

19

19

ஒரு வேலை பூமியானது முழுமையாக கிழியவில்லை எனில் அதில் இருக்கும் அனைத்து படைப்புகளும் சரியாக ஒரே நேரத்தில் பிரிந்து விடும் கூடும். இது நடக்க போவது நம்மால் கணிக்கவும் முடியாது, இது வரை நடந்ததாக கூறவும் முடியாது.

20

20

ஸ்டெல்லார் பிளாக் ஹோல்

21

21

பிளாக் ஹோல் குறித்து நமக்கு ஓரளவு தெரியம். இவை மிகப்பெரிய அளவில் பிரபஞ்சத்தை சுற்றி வந்து கொண்டிருக்கும். ஆனால் சில பிளாக் ஹோல்கள் சூரியன் போன்ற அளவு இருந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரும்.

22

22

இது போன்ற பிளாக் ஹோல்கள் எல்லா இடங்களிலும் சுற்றி வருவதால் இவைகளின் மூலம் ஆபத்தும் அதிகமே. பிளாக் ஹோல்களின் மிகப்பெரிய பிரச்சனையே இவைகளை கணிக்கவே முடியாது என்பது தான். பெரும்பாலும் பிளாக் ஹோல்கள் பொருள்களை உள் இழுக்கும் திறன் கொண்டவையாகும்.

23

23

நமது சூரியன் சீஸ் கயிறு போன்று காட்சியளிக்கும் வரை சூரிய குடும்பத்தில் சுற்றி வரும் பிளாக் ஹோல்களை கண்டறிவது சாத்தியமற்றது ஆகும்.

24

24

இதன் பின் பூமியில் இருக்கும் அனைத்தும் உள் இழுக்கப்பட்டு விடும். இது போல் நடக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்த உலகமும் சிறிய பந்து அளவு மாறி விடும். அழிவு நிச்சயம்.!

Best Mobiles in India

English summary
Scientific Ways Universe Could Kill Us All Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X