பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!
அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கை, இந்தியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகத் தான் பார்க்கப்படுகிறது. சில விலங்குகள் நல ஆர்வலர்களிடம் கேட்டாலும் கூட இதைத்தான் பதிலாகச் சொல்வார்கள். பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவைசிகிச்சை, கருத்தடை ஊசி பல முயற்சிகளை அரசாங்கம் செய்து வருகிறது.

இந்தியாவில் பெருகும் ரேபிஸ் நோய்
முக்கியமாக மக்கள் தெரு நாய்களைக் கண்டு அஞ்சுவதற்கு முக்கிய காரணம், அவற்றிடமிருந்து ரேபிஸ் நோய் தாக்கிவிடுமோ என்ற பயம் தான். இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் நபர்கள் நாய்களிடம் கடிவாங்குகின்றதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. அதேபோல் ஆண்டிற்கு சுமார் 20,000 நபர்கள் ரேபிஸ் நோயினால் தாக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர் என்றும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது.

நாய்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்
ரேபிஸ் நோயிலிருந்து நாய்களைக் காத்துக்கொள்ளத் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவது வழக்கம். ஆனால் இதில் அவர்கள் நேரடியாகச் சந்திக்கக் கூடிய சிக்கல் என்னவென்றால், தடுப்பூசி போடப்பட்ட நாங்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாய்களைக் கண்டறிவது தான்.

நாய்களை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு
இதற்குத் தீர்வைக்காகப் பெங்களூரு, இந்திராநகரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் அபர்ணா அஜித் குப்தே என்ற மாணவி புதிய செயற்கை நுண்ணறிவு செயல்பட்டு கருவியை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் எளிதில் தடுப்பூசி போடப்படும் நாய்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாய்கள் என இரண்டையும் எளிதாய் பிரித்துவிட முடியும் என்கிறார் இந்த மாணவி.

போட்டோ & வீடியோவிலிருந்து அடையாளம் காணலாம்
இதனை உருவாக்க அபர்ணா அஜித் குப்தே முதலில் அவருடைய ஏ.ஐ, நாய்களைப் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகளிலிருந்து அடையாளம் காணும்படி நீயுறல் நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கிறார்.

முகத்தை அடையாளம் காணும் நீயுறல் நெட்வொர்க்
இதனை உருவாக்க அபர்ணா அஜித் குப்தே முதலில் அவருடைய ஏ.ஐ, நாய்களைப் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகளிலிருந்து அடையாளம் காணும்படி நீயுறல் நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கிறார்.

சிசிடிவி மூலம் கூட நாய்களை கண்டறிய முடியுமாம்
இவர் உருவாக்கியுள்ள ஏ.ஐ 92 சதவீதம் வரை நாய்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்டு அவற்றின் வகையையும், அவற்றிற்குத் தடுப்பூசி முன்பே போடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை முழு விபரங்களுடன் தெரிவிக்கிறது. இவரின் ஏ.ஐ இன்னும் வரும் நாட்களில் சிசிடிவி வீடியோ பதிவுகள் மூலம் கூட நாய்களைக் கண்டறியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications