Home
Scitech

செயலிழந்த பின்பும் ஆய்விற்கு உதவும் காசினி விண்கலம்!

நாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தின் மேல் வளிமண்டலம் ஏன் மிகவும் சூடாக இருக்கிறது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது. இக்கிரகம் சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் நமது நட்சத்திரத்தின் வெப்பத்தை குறைவாக பெறும் நிலையில், ஏன் வளிமண்டலம் வெப்பமாக உள்ளது என கிரக விஞ்ஞானிகளை பல தசாப்தங்களாக குழப்பமடையச் செய்தது‌. ஆனால் காசினி விண்கலத்திடமிருந்து பெறப்பட்ட பழைய தரவுகளை பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த மர்மத்தை தீர்க்கும் முயற்சியில் இறுதிகட்டத்திற்கு நெருக்கமாக உள்ளனர்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மூலம் முன்னெடுக்கப்பட்டு, அரிசோனா பல்கலைக்கழகத்தின் சந்திர மற்றும் கிரக ஆய்வகத்தின் பட்டதாரி மாணவர் ஜாரா பிரவுன் தலைமையிலான இந்த புதிய ஆய்வு, சனி கிரகத்தின் வளிமண்டலத்தை வெப்பமாக்குவது அரோராக்கள்(துருவ ஒளிக்கற்றை) என்று கூறுகிறது. இந்த அரோராக்கள் சூரிய அலைகளினால் வெப்பமேற்றப்பட்ட துகள்களின் நிலையான நீரோட்டத்தால் தூண்டப்படுகின்றன. இவை சனியின் நிலவுகளிலிருந்து பாய்ந்து மின்சார நீரோட்டங்களை உருவாக்கும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுடன் தொடர்புகொள்கிறது.

விஞ்ஞானிகளுக்கு

இந்த நுண்ணறிவு மட்டுமே விஞ்ஞானிகளுக்கு சனியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவாமல், பொதுவாக வாயு இராட்சத கிரகங்களிலும் இருக்கலாம் நிகழலாம் என தெரியவந்துள்ளது. வியாழன், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் அனைத்தும் வித்தியாசமாக வெப்பமான மேல் வளிமண்டலங்களைக் கொண்டுள்ளன. இதேபோன்ற நடத்தையை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான சூரிய கிரக வாயு ராட்சதர்களும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ளன.

வளிமண்டலங்களைப் பற்றிய

"கிரகங்களின் மேல் வளிமண்டலங்களைப் பற்றிய நமது பொதுவான புரிதலுக்கு இந்த முடிவுகள் மிக முக்கியமானவை மற்றும் அவை காசினி விண்கலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் "என்று காசினியின் புற ஊதா இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராப் கருவி குழுவின் உறுப்பினரான ஆய்வு இணை ஆசிரியர் டாம்மி கோஸ்கினென் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விண்கலம் சனி கிரகத்திற்கு வருவதற்கு முன்பே நன்கு

2004 ஆம் ஆண்டில் இந்த விண்கலம் சனி கிரகத்திற்கு வருவதற்கு முன்பே நன்கு அறியப்படாத சனியின் மேல் வளிமண்டலத்தின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியின் வரைபடத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக காசினி விண்கலதத்தின் தரவுகளை பயன்படுத்தினர். இந்த ஆய்வில், சனியின் அரோராக்களில் இருந்து மின்சார நீரோட்டங்கள் எவ்வாறு கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை வெப்பமாக்கி, சூரியக் காற்றை உருவாக்குகிறது என ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இந்த வரைபடம் உதவியது. சூரியக் காற்று, துருவங்களிலிருந்து (அரோராக்கள் அமைந்துள்ள இடத்தில்) பூமத்திய ரேகை நோக்கி ஆற்றலை விநியோகிக்கிறது. அந்த ஆற்றல் பூமத்திய ரேகையை சூரியனின் வெப்பத்திலிருந்து உருவாக்கக்கூடியதை விட இரு மடங்கு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துகிறது.

விண்கலத்திலிருந்து சேமித்துவைத்துள்ள தரவுகள்

காசினி போன்ற விண்கலத்திலிருந்து சேமித்துவைத்துள்ள தரவுகள், அவை செயல்படாமல் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து புதிய நுண்ணறிவுகளை வழங்குவது பொதுவானது. இந்த குறிப்பிட்ட தரவுத்தொகுப்பானது, காசினி சனி கிரகத்தில் இறுதி சில மாதங்களில் இருந்து, செப்டம்பர் 15, 2017 அன்று வேண்டுமென்றே சனி கிரகத்திற்குள் தன்னைத் தூக்கி எறிவதற்கு முன், அந்த வாயு இராட்சத கிரதத்திற்கு 22 மிக நெருக்கமான சுசுற்றுப்பாதைகளில் இருந்துபோது சேகரிக்கப்பட்டது (சனியின் நுண்ணுயிர்கள் வாழ வாய்ப்புள்ள பனிக்கட்டி நிலவுகளில் பூமி போன்று மாசுபடுவதைத் தடுக்க)

தைப் ஆராய்ந்தது

காசினி விண்கலம் ஓரியன் மற்றும் கேனிஸ் மேஜர் விண்மீன்களில் பிரகாசமான நட்சத்திரங்களை ஆறு வாரங்களுக்கு , நட்சத்திரங்கள் சனியின் பின்னால் அமைந்திருப்பதைப் ஆராய்ந்தது. மாறும் நட்சத்திர ஒளியைக் கவனிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் சனியின் வளிமண்டலத்தின் அடர்த்தியைப் பற்றி மேலும் அறிய முடிந்தது. அடர்த்தி உயரத்தை பொறுத்து குறைவதால், இந்த குறைவு விகிதமானது வெப்பநிலையைப் பொறுத்தது.இது சனியின் மேல் வளிமண்டலத்தில் வெப்பநிலையை மதிப்பிட விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது.

காசினியின் அவதானிப்புகள்

காசினியின் அவதானிப்புகள் அரோராக்களைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் காட்டியது‌ . இதையொட்டி அது மின்சார நீரோட்டங்களின் காரணமாகவே சனியின் மேல் வளிமண்டலம் மிகவும் சூடாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்கிறது. அடர்த்தி மற்றும் வெப்பநிலை அளவீடுகளைப் பயன்படுத்தி சனி கிரகத்தின் காற்றின் வேகமும் தீர்மானிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Saturn's Dead Cassini Spacecraft Revealed New Discovery In The Planet Atmosphere: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X