சனிக்கோளின் மோதிரம் உருவானது எப்படி? அழியப்போவது எப்படி?

இன்னும் சிறிது காலத்தில் சனிக்கோள் அந்த தனி சிறப்பை இழக்க உள்ளது. ஆம் சனிக்கோளின் மோதிரங்கள் அதிகாரபூர்வமாக, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

|

சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும், சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கிரகமாகவும் (வியாழன் கிரகம் தான் மிகவும் பெரியது) திகழும் சனி கிரகம் ஆனது பூமியை விட ஒன்பது மடங்கு சராசரி ஆரம் கொண்ட ஒரு மிகப்பெரிய வாயு கிரகமாக இருந்தாலும் கூட பூமியின் சராசரி அடர்த்தியின் எட்டில் ஒரு பங்கு தான் கொண்டிருக்கிறது, ஆனால் அளவில் 95 மடங்கு பெரிதாக அதிகமாக உள்ளது.

சனிக்கோளின் மோதிரம் உருவானது எப்படி? அழியப்போவது எப்படி?

இப்படியாக மிகவும் விசித்திரமான ஒரு கிரகத்தின் "தனிசிறப்பான மகுடமாக" அதன் மோதிரங்கள் திகழ்ந்து வருகிறது. இன்னும் சிறிது காலத்தில் சனிக்கோள் அந்த தனி சிறப்பை இழக்க உள்ளது. ஆம் சனிக்கோளின் மோதிரங்கள் அதிகாரபூர்வமாக, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

இருந்தென்ன புண்ணியம்?

இருந்தென்ன புண்ணியம்?

அழிந்து வரும் சனி மோதிரங்கள் தான் சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான மோதிரங்களாக இருக்கின்றன. சனி கிரகத்திலிருந்து சுமார் 280,000 கிமீ வரை நீள்கிறது. இந்த நீளமானது 6 பூமி கிரகத்தை பொருந்துவதற்கு போதுமானது. இருந்தென்ன புண்ணியம்? எதிர்பார்ப்பதை விட மிக வேகமாக அவைகள் அழிந்து வருகிறது. சனிக்கோளின் மோதிரங்களானது அடுத்த நூறு மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக இல்லாமல் போகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த அளவிற்கு என்ன காரணம்?

இந்த அளவிற்கு என்ன காரணம்?

நாம் வாழும் பூமி கிரகமானது எதனால் அழிவு பாதையை நோக்கி செல்கிறதோ அதே காரணத்தினால் தான் சனிக்கோளின் மோதிரங்களை அழிய தொடங்கி உள்ளன. அது மோசமான சூழ்நிலை ஆகும். இதன் அழிவு மெதுவாக மற்றும் உறுதியாக நாடக்கும் என்பதும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானநாசாவின் வோயேஜர் 1 மற்றும் வோயேஜர் 2 விண்கலங்ளால் நிகழ்த்தப்பட்ட ஆய்வகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக என்றால் எப்படி, அதனால் அழியும்?

மெதுவாக என்றால் எப்படி, அதனால் அழியும்?

முதலில் சனி கிரகத்தை சுற்றி வருவது விண்வெளி பாறைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த பாறைகள் ஆனது சனியின் அதிகப்படியான காந்தப்புலத்தின் விளைவாக, தூசி நிறைந்த பனிதுகள் மழையாக பொழிந்து தீர்ந்து காணாமல் போக போகிறதாம். முன்பு கூறியது போலவே, இது ஒரே நாளில் நடக்காது, அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடந்து, ஒருகட்டத்தில் சனியின் மோதிரங்கள் முற்றிலும் காணாமல் போகவுள்ளது.

விண்வெளியில் மழை பெய்யுமா? வைர மழை பொழிவு

விண்வெளியில் மழை பெய்யுமா? வைர மழை பொழிவு

ஆம் நிச்சயாமாக! பூமியில் எவ்வாறு மழை பெய்கிறதோ அதே போல் இதர கிரங்கங்களிலும் மழை பெய்யும். அவ்வளவு ஏன், மீத்தேனின் உயர் அழுத்தம் காரணமாக யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற குளிர் மிகு கிரகங்களில் தூய்மையான வைரங்கள் மழையாக பொழிகிறது. ஆக சனிகோளில் மழை பெய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், சனிகோளின் "கூறப்படும்" மோதிர மழையானது மிக கடுமையாக பொழியுமாம், அதாவது அரை மணி நேரத்திற்கு 660,253.09 கேலன்களை நிரப்புமாம்.

சனி கிரகத்தின் மோதிரங்கள் உண்மையில் என்ன?

சனி கிரகத்தின் மோதிரங்கள் உண்மையில் என்ன?

இந்த வளையங்கள் ஆனது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்ல, பல வகையான நுண்ணிய தூசிகளால் உருவான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நாம் பேசும் "தூசுகளில்" என்பது பல மீட்டர்கள் நீளமுள்ள பாறைகளும் (நீரின் பனிப்பகுதி) அடங்கும். இவைகள் அனைத்தும், சனி கிரகத்தின் இழுக்கும் ஈர்ப்பு விசை மற்றும் வெளியே தள்ளும் சுற்றுப்பாதை திசைவேகம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் கட்சிதமாக இணைக்கப்பட்டு உள்ளது.

எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும்?

எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும்?

ஆரம்ப கால ஆய்வின் படி, அடுத்த 300 மில்லியன் ஆண்டுகளுக்கு சனிக்கோளின் மோதிரம் அழியாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய காசினி விண்கல தரவுகளின் படி, இது அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்தாலே ஆச்சரியம் தான் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஆக அடுத்த முறை எங்காவது சனிக்கோளின் புகைப்படத்தை பார்த்தால் நன்றாக ரசித்து கொள்ளுங்கள்!

Best Mobiles in India

English summary
Saturn is officially losing its rings - and theyre disappearing much faster than scientists had anticipated : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X