கடைசியாக ஒருமுறை சனிக்கோளின் வளையங்களை பார்த்து கொள்ளுங்கள்; ஏன்?
சனிக்கோளின் இந்த மோதிரம் ஆனது எப்படியும் அழியும் என்பது முன்னரே கணிக்கப்பட்ட ஒரு விடயம் தான்.
நமது சூரிய குடும்பத்தில் ஒரு மாயாஜாலமான தோற்றம் கொண்ட கிரகம் எதுவென்று கேட்டால்? அல்லது நிலாவிற்கு அடுத்த படியாக எந்த கிரகத்திற்கு செல்ல விருப்பம் என்கிற ஒரு கேள்வியை கேட்டால்? கிடைக்கும் பதில் சனிக்கோள், அதாவது சாட்டர்ன் கிரகம்.

நிச்சயமாக அதற்கு காரணம் சனிக்கோளை அழகான ஓவியம் போல் சுற்றும் அதன் மோதிரங்கள் தான். தூரத்தில் இருந்து பார்க்கத்தான் அவைகள் ஓவியம் போல தெரியும் அருகாமையில் சென்று பார்த்தால் அவைகள் எல்லாம் வெவ்வேறு வேகத்தில் சுற்றும் சனிக்கோளின் தூசிகள் மற்றும் பாறைகள் என்பது தெரிய வரும்.

இரண்டு அதிர்ச்சிகள்!
அதுவே முதல் அதிர்ச்சியாக இருந்தால் இரண்டாம் அதிர்ச்சியை நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்? ஆம், சனிக்கோளின் மோதிரங்கள் ஆனது அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக இல்லாமல் போகும் என்பது கண்டு அறியப்பட்டு உள்ளது. அதற்கு காரணமாக அதன் 'மோசமான சூழ்நிலை' தான் என்று கூறப்பட்டு உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் வோயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்ளால் நிகழ்த்தப்பட்ட அவதானிப்புகளில் இருந்து இது மதிப்பிடப்பட்டு உள்ளது.

என்ன காரணம்?
கூடிய விரைவில் சனி கோளை சுற்றி மோதிர வடிவில் சுற்றும் பாறைகள் ஆனது சனிக்கோளின் காந்தப்புலத்தின் செல்வாக்கின் விளைவாக, தூசி நிறைந்த பனி துகள் மழையாக சனிக்கோளின் மீது பொழிந்து காணாமல் போக போகிறது. நிபுணர்களின் கணிப்பின் படி, அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த மோதிர வடிவம் முற்றிலும் காணாமல் போகலாம்.

எந்த அளவிலான மழை பெய்யும்?
"சனிகோளில் பெய்ய போகும் இந்த மோதிர மழையானது, வெறும் அரை மணி நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்படும் அளவிலான நீச்சல் குளம் ஒன்றை நிரப்ப கூடிய அளவிற்கு கனமாக பெய்யும்" என்கிறார் மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தின் ஆய்வாளர் ஜேம்ஸ் ஓ'டோனோக்.

மழை மட்டும் காரணம் அல்ல!
சனிக்கோளின் இந்த மோதிரம் ஆனது எப்படியும் அழியும் என்பது முன்னரே கணிக்கப்பட்ட ஒரு விடயம் தான். அந்த கணிப்பின்படி "மோதிர மழை" மட்டுமே பெய்தால் அடுத்த 300 மில்லியன் ஆண்டுகளுக்கு சனிக்கோளின் மோதிரம் தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது காசினி-விண்கலத்தின் மூலமாக அளவிடப்பட்ட ரிங்-மெட்ரீயல்களை பார்க்கும் போது சனிக்கோளின் மோதிரம் ஆனது அடுத்த 100 மில்லியனுக்கும் குறைவான ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பது கண்டு அறியப்பட்டு உள்ளது.

வளையங்கள் சிக்கிக்கொண்டு உள்ளன!
மேலே குறிப்பிட்டபடி சனி கோளின் இந்த வளையங்கள், பெரும்பாலும் நுண்ணிய தூசி தானியங்களில் இருந்து பல மீட்டர்கள் நீளமுள்ள பாறைகள் வரை கொண்ட மிக நீளமான நீரின் பனிப்பகுதிகள் ஆகும். இது சனிக்கோளின் இழுக்கும் ஈர்ப்பு விசை மற்றும் வெளியே தள்ளும் சுற்றுப்பாதை திசைவேகம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் பிணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கோளின் வயதுடன் ஒப்பிடும் போது!
'மோதிர மழை' ஆனது எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக இதன் முடிவை மனித இனம் காணும் என்பதில் ஐயமில்லை. இந்த வளையங்கள் ஆனது சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக சனி கோளுடன் பிணைந்து வருகிறது. இருப்பினும் சனியின் வயதுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் இது மிகவு சிறிய காலம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில விண்வெளி ஆரய்ச்சியாளர்கள் இதனை பற்றி சற்றும் கவலை படுவதாய் இல்லை. ஏனெனில், போகும் போக்கை பார்த்தால் சனிக்கோளின் வலையங்களுக்கு முன்னர் நாம் வாழும் பூமி கிரகம் அழிந்து விடும் போல் இருக்கிறது என்பது அவர்களின் வாதம்.


Click it and Unblock the Notifications