Home
Scitech

விண்வெளியிலிருந்து பூமியின் தண்ணீரை புதிய கோணத்தில் படம் பிடித்த செயற்கைகோள்!

மேற்கு அமெரிக்காவிற்கு நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அறிந்திருந்தார் ஜான், ஆனால் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் வழியை யாரும் உருவாக்கவில்லை.

1889 ஆம் ஆண்டில், நியூ மெக்ஸிகோவில் உள்ள எல்லை நகரமான எம்புடோ அருகில், பிரபல கிராண்ட் கேன்யான் ஆராய்ச்சியாளரும், 2வது அமெரிக்க புவியியல் சர்வே தலைவருமான ஜான் வெஸ்லி பவல், ஒரு விஞ்ஞான புரட்சியைத் தொடங்கினார்.

பூமியின் தண்ணீரை புதிய கோணத்தில் படம் பிடித்த  செயற்கைகோள்!

மேற்கு அமெரிக்காவிற்கு நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அறிந்திருந்தார் ஜான், ஆனால் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் வழியை யாரும் உருவாக்கவில்லை. 14 மாணவர்கள், மூன்று பயிற்றுனர்கள், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் ஒரு சமையல்காரருடன் ஒரு முகாமை அமைத்து, அமெரிக்க நதிகளின் வழியாக எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை அளவிடும் முதல் அளவுமானியை உருவாக்க பணித்தார்.

ரியோ கிராண்டி

ரியோ கிராண்டி

இந்த முயற்சியில் அவர்களுக்கு கிடைத்த வெற்றியால், ஆறுகளில் நீராவி மூலம் அல்லது முற்றிலும் நீர்வற்றாமல், எவ்வளவு தண்ணீரை எடுத்து ரியோ கிராண்டி பகுதியில் நீர்ப்பாசனம் செய்ய முடியும் என தெரிந்து கொள்வது சாத்தியமாயிற்று.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அமெரிக்கா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட தண்ணீர் அளவுகோல்களை யு.எஸ்.ஜி.எஸ் இயக்குகிறது. அவை அனைத்தும் முதல் எம்புடோ அளவுமானியை ஒத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான அளவுமானிகளை பயன்படுத்திவருகின்றன.

மண் ஈரப்பதம்

மண் ஈரப்பதம்

இன்று நீரியல் வல்லுநர்கள் தண்ணீர் அளவுமானி வலையமைப்பை பயன்படுத்துகின்றனர். இதேபோல மழைக்காலம், மண் ஈரப்பதம், பனி ஆழம் மற்றும் நீரியல் சுழற்சி போன்றவற்றை அளவிடவும் மிகப்பெரிய சென்சார் வலையமைப்பை வைத்துள்ளனர். இந்த கருவிகள் மூலம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எத்தனை நீர் உள்ளது , அந்த நீர் எவ்வாறு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன என்பதை காட்ட இவை உதவுகின்றன.

 தற்போது விண்வெளிக்கு செல்வோம்

தற்போது விண்வெளிக்கு செல்வோம்

கடந்த 30 ஆண்டுகளாக நீரியல்துறை ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. நீரியல் வல்லுநர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கான விடைகளை வழங்க இந்த சென்சார்கள் மற்றும் அளவுமானிகள் போதுமானதாக இல்லை.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகளின் சிறிய குழு ஒரு புதிய தீர்வை பரிந்துரைத்தது: அது விண்வெளியில் இருந்து நீர் சுழற்சியை அளவிட்டால் என்ன?


இதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டில் கிராவிடி ரெகவரி அண்ட் கிளைமேட் எக்ஸ்பிரிமெண்ட் மிஷனில் இரட்டை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. டாம் அண்ட் ஜெர்ரி என செல்லமாக பெயரிடப்பட்ட இந்த செயற்கைகோள்கள், பூமி கிரகத்தின் சுற்றுப்புறத்தில் தொலைவின் அடிப்படையில் ஏற்படும் ஈர்ப்புவிசை மாற்றங்களை அளவிட்டது.இந்த வேறுபாடுகள் பலவும் தண்ணீர் நகர்வை பொறுத்து இருந்தது. நிலத்தடி நீர், நிலப்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீர் சேமிப்பின் மாற்றங்களை இந்த செயற்கைகோள்கள் கண்காணித்தன. அவற்றை மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்களாகவும் அனுப்பியது. ஆனால் 2017ல் இந்த இரட்டை செயற்கைகோள்கள் செயலிழந்தபின்னர், புதிய இணை அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

பொற்காலம்

பொற்காலம்

இந்த இரட்டை கிரேஸ் செயற்கைகோள்களுக்கு சில வரம்புகள் இருந்ததால், நீரியல் சுழற்சியின் குறிப்பிட்ட பகுதிகளை அளவிட வடிவமைக்கப்பட்ட பிற செயற்கைக்கோள்களும் அதே நேரத்தில் செயல்பாட்டிற்கு வந்தன.


2003 முதல் 2009 வரை செயல்பட்ட ஐஸ்சேட்(IceSAT), பனிப்பாறைகள் மற்றும் பனிப்பகுதிகளின் வடிவ மாற்றங்களை அளவிட்டது. ஆனால் அதன் லேசர்கள் சில தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்டிருந்ததால் வாழ்நாள் குறைந்தது . வெப்பமண்டல மழைப்பொழிவு திட்டம் மூலம் குறைந்த அடர்த்தியான மழைப்பொழிவுகளின் தரவுகளை வழங்கப்பட்டது. ஆனால் அதிக இடி மற்றும் பனி இருந்த பகுதிகளில் மோசமான வேலை செய்தது.


விஞ்ஞானிகள் செயலற்ற நுண்ணலை உணரிகள்(மைக்ரோவேவ் சென்சார்) மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட வழிகளை கண்டறிந்தனர். அவற்றில் சில ஏற்கனவே சுற்றுப்பாதையில் இருந்து, மண் ஈரப்பதத்தை மதிப்பிட்டன. ஆனால் அவை சில தரவுகளை மட்டுமே வழங்கின.


2014 ஆம் ஆண்டு முதல், புதிய தலைமுறை செயற்கைக்கோள்கள் பல மேம்படுத்தல்களை வழங்கின. தி குளோபல் ப்ரிசிபிடேசன் மிஷனின் செயற்கைக்கோள்கள் டிஆர்எம்எம்-ல் கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. 2018 இல் நாசா அறிமுகப்படுத்தியுள்ள ICASAT-2 அதன் முன்னோடியை காட்டிலும் சிறந்த லேசர்களை கொண்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் தலைமையிலான மண்ணின் ஈரப்பத செயல்திட்டமும் சிறப்பான அளவீடுகளை வழங்குகின்றன.

 செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்

இந்த அனைத்து செயற்கைக்கோள்களின் உதவியுடன், நீரியல் வல்லுநர்கள் நீர் சுழற்சியின் பல பகுதிகளை விண்ணிலிருந்து கண்காணிக்க முடியும். இதிலுள்ள அடுத்த சவால் என்பது இந்த அனைத்து அளவீடுகளையும் ஒத்திசைவான முறையில் ஒன்றாக்குவதாகும். ஒவ்வொரு செயற்கைக்கோளமும் அதன் சொந்த அளவீட்டுமுறையை கொண்டிருக்கும். விஞ்ஞானிகள் பூமியின் நீர் சுழற்சியின் கணினி உருவகப்படுத்துதல்களுடன் தங்கள் கடந்த கால மற்றும் தற்போதுள்ள தரவுகளை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பணியாற்றிவருகின்றனர்.


இந்த ஆய்வுகளின் மூலம் வறட்சி,வெள்ளம் போன்றவற்றை முன்கூட்டியே கணித்து அவற்றிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை உலகிற்கு தெரிவிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Satellites Reveal A New View of Earth's Water from Space: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X