Home
Scitech

கிருகிருக்க வைக்கும் 'கிரைப்பன் இ'.!!

By Meganathan

ஸ்வீடன் நாட்டு வான்வழி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனமான சாப் (Saab) புதிய வகை கிரைப்பன் இ ரக போர் விமானங்களை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் மேம்படுத்தப்பட்ட இந்த போர் விமானமானது இக்காலத்து வான்வழி சார்ந்த பணிகளில் சிறந்து விளங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1

1

1997 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த கிரைப்பன் ரக போர் விமானங்களின் ஆறாவது மாடல் தான் கிரைப்பன் இ ஆகும்.

2

2

குறைந்த எடை, மல்டி-ரோல் போர் விமானமான கிரைப்பன் இ வேகமான டர்ன்-அரவுண்டு நேரம் கொண்டிருப்பதோடு சிறிய விமான தளங்களில் இருந்தும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

3

3

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேம்படுத்த கூடிய வாழ்நாள் திறன், இதற்கு ஈடு செய்யும் ஹார்டுவேர் மற்றும் ஏவியானிக் வழிமுறை மற்றும் ஆயுதங்களை தாங்கும் திறன் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

4

4

ஃப்ளை-பை-வையர் ஃப்ளைட் ஏவியானிக்ஸ், அதிக எரிபொருள் கொள் திறம், ஜெனரல் எலக்ட்ரானிக் F414G என்ஜின் போன்றவை முந்தைய மாடல்களில் இல்லாமல் கிரைப்பன் இ விமானத்தில் வழங்கப்பட்டுள்ளன.

5

5

கிரைப்பன் இ தரையில் இருந்து கிளம்பும் போது அதிக எடையை கொண்டு செல்வது, விமானத்தினுள் இருந்தே எரிபொருள் நிரப்பும் திறன் மற்றும் நாடோ இணக்கமானதாகும்.

6

6

15.2 மீட்டர் நீளம், மற்றும் 8.6 மீட்டர் அகலம் கொண்ட கிரைப்பன் இ சுமார் 16,500 கிலோ புறப்பட எடை கொண்டிருக்கின்றது. மேலும் மணிக்கு சுமார் 1,522 மீட்டர் வேகம் அதாவது 2,450 கிமீ பயணிக்க முடியும்.

7

7

நெட்வர்க் சென்ட்ரிக் ஃபைட்டர் என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரைப்பன் இ விமானத்தில் கிரைப்பன் டேட்டா லின்க் சிஸ்டம் மற்றும் லின்க் 16 செக்யூர், மல்டி-ஃப்ரீக்வன்ஸி டேட்டா லின்க் சிஸ்டம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

8

8

இதன் மூலம் சூழலுக்கு ஏற்ப இயங்கவது, மற்ற கிரைப்பன் போர் விமானங்களுடன் இரு வழி தகவல் பரிமாற்றம் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்.

9

9

மேலும் ஆக்டிவ் எலக்ட்ரானிக்கலி ஸ்கேன்டு அர்ரே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பல்வேறு ரேடார்களை பயன்படுத்தி பல்வேறு இலக்குகளை டிராக் செய்ய முடியும். இதோடு டிராக்கிங் செய்ய IRST எலக்ட்ரோ ஆப்டிக்கல் சிஸ்டம் மற்றும் ரேடார் ஜாம்மிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

10

10

கிரைப்பர் இ விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகள் மற்றும் எதிரி ரேடார் குறித்த தகவல்களை வழங்கும் ரேடார் வார்னிங் ரிசீவர் மற்றும் எதிரி ஏவுகணைகளை டிராக் செய்யும் மிஸைல் அப்ரோச் வார்னிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

11

11

முந்தைய கிரைப்பன் இ வகை போர் விமானங்கள் தற்சமயம் ஸ்வீடன், தென் ஆப்பிரிக்கா, செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

12

12

முதல் கிரைப்பன் இ போர் விமானங்கள் ஸ்வீடன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Saab Rolls out Latest Generation Fighter Gripen E. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X